புதன், 17 ஏப்ரல், 2013

வெல்க பஞ்சாபியர் ஒற்றுமை : புல்லரின் தண்டனை குறைக்கப்பட அரசு ஆய்வு





புல்லாரின் தூக்கு த் தண்டனை  குறைக்கப்படும்?  கரி்க  அரசு  ுடிவு


புதுதில்லி : காலிசுதான் பயங்கரவாதி, தேவேந்தர்பால் சிங் புல்லாரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமைதி நிலவ, மத்திய அரசு, அவர் மீது கருணை காட்டலாம் என, கூறப்படுகிறது.

காங்கிரஸ் பிரமுகரும், பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவருமான, எம்.எஸ்.பிட்டாவை கொல்ல, 1993ல், டில்லியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது; அதில், பிட்டா உயிர் தப்பினார்; ஆனால், ஒன்பது பேர் இறந்தனர்.இந்த தாக்குதலை நடத்திய, காலிஸ்தான் பயங்கரவாதியான, தேவேந்தர்பால் சிங் புல்லார் என்பவன், ஜெர்மனி தப்பிச் சென்றான். 1995ம் ஆண்டு, அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட புல்லாருக்கு, 2001ம் ஆண்டு, விசாரணை நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்தது. அடுத்த ஆண்டில் அதை, டில்லி செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது.இதற்கிடையே, புல்லாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. கருணை அடிப்படையில் தன்னை விடுவிக்குமாறு அவன், 2003ல், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினான். அதை, 2011ல், ஜனாதிபதியாக இருந்த, பிரதீபா பாட்டீல் நிராகரித்தார்.
கால தாமதம்:


கருணை மனு மீது முடிவெடுக்க கால தாமதமானதால், தன் தண்டனையை குறைக்க வேண்டும் என, புல்லார் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த, 12ம் தேதி நிராகரிக்கப்பட்டது.பாகிஸ்தான் பயங்கரவாதி கசாப், ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாதி அப்சல் குரு போல, புல்லாரும் ரகசியமாக தூக்கிலிடப்படுவான் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பிரதமருடன் சந்திப்பு:

மனநிலை பாதிக்கப்பட்ட புல்லாருக்கு, தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என, மனித உரிமை அமைப்புகள் சில வலியுறுத்தி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தை ஆளும், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோண்மணி அகாலி தளம் கட்சியும், இதே கருத்தை வலியுறுத்தி வருகிறது.முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும், அவர் மகனும், துணை முதல்வருமான, சுக்பிர் சிங்கும், நேற்று முன் தினம் டில்லி சென்று, பிரதமர், மன்மோகன் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டேவை சந்தித்து, புல்லாருக்கு கருணை காட்டும்படி வலியுறுத்தினர்.

பரிசீலிக்கப்படும்:
இந்த விவகாரத்தை முன்வைத்து, பஞ்சாபில் கொந்தளிப்பான நிலை நிலவுவதால், புல்லாருக்கு கருணை காட்டுமாறும், அதன் மூலம், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உதவுமாறும், அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து, உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டேயிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, ""பஞ்சாப் முதல்வரின் கோரிக்கை, பரிசீலிக்கப்படும்,'' என்றார்.புல்லாரின் மனநிலை சரியாக இருக்கிறதா என்பதை ஆராய, உயர் மட்டக்குழு ஒன்றை, மத்திய அரசு நியமிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், புல்லாரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம் என, கூறப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக