திங்கள், 15 ஏப்ரல், 2013

சீனாவில் தமிழ்ச் சங்கம்

பீகிங் தமிழ்ச்சங்கம் சிறப்பான தமிழ்த் தொண்டாற்ற வாழ்த்துகள். மிகத் தொன்மைக்காலத்திலிருந்தே தமிழுக்கும் சீனாவிற்கும் தொடர்பு உள்ளது.  இரு மொழிகளின் உறவு குறித்தும் இரு மொழி இலக்கியங்கள் மொழிபெயர்ப்பிலும் கருத்து செலுத்தித் தொண்டாற்ற வேண்டும்.  தொல்லுறவை மறந்தும் தமிழ்நாடு வழியாகவே புத்த சமயம் பரவியதை மறந்தும் தமிழகத்திற்குச் சீனர்கள் வருகை தந்த முன் வரலாறு மறந்தும் புத்தர் பேசிய மொழி தமிழ் என்பதை மறந்தும் புத்த நெறிக்கு மாறாக இனப்படுகொலைகளில் தொடர்நது ஈடுபடும் சிங்களத்திற்கு உடந்தையாக இருப்பது தவறு என்பதைச் சீனர்கள் உணர்ந்து திருந்தித் தமிழ் ஈழத்தை ஏற்கும் வகையிலும் கலை பண்பாட்டு உறவினை வளர்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



சீனாவில் தமிழ்ச் சங்கம்

 
பீகிங்:சீனாவில் வசிக்கும் தமிழர்கள், பீஜிங் நகரில், தமிழ் சங்கத்தை துவக்கியுள்ளனர்.சீன தலைநகர் பீஜிங்கில் ஏற்கனவே, மலையாளிகள் சங்கம் உள்ளது. தற்போது, பீஜிங் நகரில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து, "பீஜிங் தமிழ் சங்கமம்' என்ற பெயரில் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர்.இதுகுறித்து, "சர்வதேச சீன ரேடியோ' சேவையில் பணியாற்றும் மரிய மைக்கேல் கூறியதாவது:பீஜிங் நகரில் பணி புரியும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள், மலேசிய தமிழர்கள் ஒன்று சேர்ந்து, இந்த சங்கத்தை அமைத்துள்ளோம். இந்த சங்கத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.பீஜிங் நகரில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து, தமிழக கலாசார நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக