செவ்வாய், 8 ஜனவரி, 2013

செவ்வாய்க் கோளில் உருவாகும் நகரம்

80 ஆயிரம் பேர் வசிக்க செவ்வாய் க் கோளில் உருவாகும் நகரம்
80 ஆயிரம் பேர் வசிக்க செவ்வாய் கிரகத்தில் உருவாகும் நகரம்
 
80 ஆயிரம் பேர் தங்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரம் உருவாகிறது.
 
சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு நாசா மையம் அனுப்பிய பொருட்களை, அமெரிக்காவின் பேபால் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் கொண்டு சென்றது.
 
இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. அதற்காக தலா ரூ.2 கோடி வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 80 ஆயிரம் பேரை அழைத்து சென்று தங்க வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
 
எனவே, செவ்வாய் கிரகத்தில் புதிய நகரம் உருவாக்கப்படுகிறது. இந்த தகவலை பேபால் நிறுவனத்தின் உரிமையாளரும், கோடீசுவரருமான எல்கான் முஸ்க் (41) தெரிவித்தார். ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இவர் செவ்வாய் கிரகத்தில் தங்க விரும்புபவர்கள் இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது அவசியம்.
 
அவர்கள் அனைவரும் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்க வேண்டும். அசைவ பிரியர்களுக்கு அங்கு இடமில்லை என்றும் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக