சனி, 12 ஜனவரி, 2013

பாம்பே செயசிரீ பாடிய பாடல் ஆசுகர் விருதுக்குப் பரிந்துரை

பாம்பே செிரீ  பாடிய பாடல் ஆசுகர் விருதுக்குப் பரிந்துரை

புது தில்லி: "லைப் ஆப் பை' என்ற ஆங்கிலப் படத்தில், பிரபல பாடகி, பாம்பே ஜெயஸ்ரீ எழுதி, பாடிய, தமிழ் தாலாட்டு பாடல், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கு, ஆண்டு தோறும், "ஆஸ்கர்' விருது வழங்கப்படுகிறது. இதன்படி, 85வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அடுத்த மாத இறுதியில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடக்கிறது.ஏற்கனவே, 2009ல், நடந்த விருது வழங்கும் விழாவில், "ஸ்லம்டாக் மில்லினர்' என்ற படத்தில் இசையமைத்ததற்காக, பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது கிடைத்தது. இந்நிலையில், மற்றொரு தமிழ் கலைஞருக்கு, ஆஸ்கர் விருது கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, "லைப் ஆப் பை' என்ற ஹாலிவுட் திரைப்படம், புதுச்சேரியை மையமான கதைக் களத்துடன் தயாராகியிருந்தது. இந்த படத்தில், குழந்தையை தலாட்டுவது போன்ற, தமிழ் பாடலும் இடம் பெற்றிருந்தது.இந்த பாடலை, பிரபல கர்நாடக இசைப் பாடகியான, பாம்பே ஜெயஸ்ரீ, பாடியிருந்ததுடன், அவரே அந்த பாடலை எழுதியுமிருந்தார். ஒரு தாய், தன் குழந்தையின் அழகையும், சிறப்பையும் புகழ்ந்து பாடுவது போல், அந்த பாடல் எழுதப்பட்டிருந்தது.தற்போது, ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு, இந்த பாடலும், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான இறுதிச் சுற்றில், இந்த பாடல் தேர்வு செய்யப்பட்டால், விருது நிச்சயம். கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர், மைக்கேல் டன்னா, இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார்.இதுகுறித்து பாம்பே ஜெயஸ்ரீ கூறியதாவது:வழக்கமாக, ஒரு தாய், தன் குழந்தையை தூங்க வைக்கும்போது, அவரது வாய், என்ன வார்த்தைகளை உச்சரிக்குமோ, அந்த வார்த்தைகளைத் தான், அந்த பாடலுக்காக நான் எழுதியிருந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக