சனி, 26 ஜனவரி, 2013

தென்னிந்தியக் கலைஞர்கள் புறக்கணிப்பு: விருது தேவையில்லை: எசு.சானகி

தென்னிந்தியக் கலைஞர்கள் ஏன் புறக்கணிப்பு? எனக்கு த் தாமரை சீர் விருது தேவையில்லை: எசு.சானகி

2013ம் வருட பத்ம விருதுகள் நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்திலிருந்து மிக மிகக் குறைவானவர்களுக்கே விருது வழங்கப்படுகிறது.
இதில் தமிழ் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியும் ஒருவர். ஆனால், அவர் தென்னிந்திய கலைஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் மரியாதையும் தரப்படுவதில்லை; வட இந்தியர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை நான் பெறப்போவதில்லை என்றார்.

தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிப்பு: பத்ம பூஷன் விருதை ஏற்கமாட்டேன்- பின்னணி பாடகி எஸ்.ஜானகி
தென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிப்பு: பத்ம பூஷன் விருதை ஏற்கமாட்டேன்- பின்னணி பாடகி எஸ்.ஜானகி
சென்னை, ஜன. 26-
 
பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார். மத்திய அரசு நேற்று எஸ்.ஜானகிக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கியது.
 
இந்த விருதை பெற ஜானகி மறுத்துவிட்டார். இதுகுறித்து ஜானகி கூறியதாவது:-
 
பத்மபூஷண் விருதை ஏற்க நான் விரும்பவில்லை. தென் இந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வட இந்தியர்களுக்குதான் இவ்விருதுகள் அதிகம் வழங்கப்படுகின்றன. என்னை நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.
 
எனவேதான் பத்ம பூஷண் விருதை வாங்குவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.
 
இவ்வாறு ஜானகி கூறினார்.

1 கருத்து:

  1. வாழ்நாளெல்லாம் "தமிழ் எங்கள் பேச்சு, மூச்சு" என்றெல்லாம் வாய்வீச்சுக் காட்டிக் காட்டிவிட்டுக் கடைசியில், தமிழர்களை அழித்தொழித்த மன்மோகன், சோனியா, பிரணாப் கைகளால் விருது பெற விழுந்தடித்தோடும் தமிழ்க் கலைஞர்களும், அறிஞர்களும் ஜானகி அவர்களின் காலைக் கழுவிக் குடிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு