வெள்ளி, 14 செப்டம்பர், 2012

"கீரை' மின்சாரம்: அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல் solar cells from green leaves

"கீரை' மின்சாரம்: அமெரிக்க விஞ்ஞானிகள் அசத்தல்
கார்ட்டூன் கேரக்டர்களில் "பப்பாய்' மிக பிரபலம். வலிமை குறைந்தவனாக இருக்கும் அவனுக்கு, கீரையை விழுங்கிய உடன் சக்தி கிடைத்து, எதிரியை வீழ்த்துவான். இதன் மூலம், கீரையில் உள்ள சத்துக்களை குழந்தைகளுக்கு உணர்த்துவார். உணவாக மட்டும் கருதப்பட்ட கீரையில் இருந்து, தற்போது உயிரியல் கலப்பு (பயோஹைப்ரிட்) சோலார் செல்கள் தயாரிக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள வென்டர்பில்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பசலைக் கீரையில் உள்ள ஒளிச்சேர்க்கைக்கு உதவும் புரதம், சூரிய ஒளியை மின் வேதியியல் ஆற்றலாக மாற்றும் தன்மை கொண்டது எனவும், இதை சிலிகானுடன் சேர்த்து சோலார் செல்களை தயாரிக்கலாம் எனவும் ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது. புவியில் ஆக்சிஜனுக்கு அடுத்து அதிகம் காணப்படும் தனிமங்களில் சிலிக்கானும் ஒன்று. இது ஒரு அலோகம். குறை மின்கடத்திக் கருவிகளில் இது பயன்படுகிறது. சிலிக்கானுடன் கீரையில் உள்ள புரதம் சேரும் கலவை, மற்ற உலோகத்துடன் வேறு சில புரதங்கள் இணைந்து அளிக்கும் பலனை விட ஆயிரம் மடங்கு அதிகம். இந்த சேர்க்கை மூலம், மின்சாரத்தின் அளவையும் அதிகப்படுத்தலாம்.
40 ஆண்டு ஆராய்ச்சி:

40 ஆண்டுகளுக்கு மேலாக, தாவரங்களில் உள்ள ஒளிச்சேர்க்கை புரதங்கள் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. "போட்டோ சிஸ்டம் 1' என்ற சிறப்புப் புரதம் பசலைக் கீரையில் இருப்பது தெரிய வந்த பிறகு தான், "பயோ சோலார் செல்' உருவாக்கும் எண்ணமே விஞ்ஞானிகளுக்கு தோன்றியது. "பயோஹைப்ரிட்' சோலார் செல் தயாரிப்பதற்கு, மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதை விட குறைந்த செலவே ஆகும். மேலும் சில தாவரங்கள், கீரைக்கு ஒப்பான புரதங்களை பெற்றுள்ளன என்பதால், பயோ ஹைப்ரிட் சோலார் செல்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும் எளிதில் பெறலாம். 

- தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக