புதன், 12 செப்டம்பர், 2012

இலை அறிவியல் - science of leaf


    இலை அறிவியல்

இலக்குவனார் திருவள்ளுவன்



காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில் எஞ்சியுள்ள உயிர்வளி நுண்துளைகள் மூலமே வெளியேறுகிறது.

 இலை என நாம் எல்லாப்பயிரினங்களின் இலைகளையும் கூற இயலாது. இலையானது தழை, (பனை)ஓலை, (தாழை)மடல், (கரும்புத்)தோகை, (வெங்காயத்)தாள், எனப் பல பெயர் பெறும். தமிழில் அறிவியல் உண்மையை அறிந்து அதற்கேற்ப  இலைகளுக்குப் பெயர் சூட்டி உள்ளனர்.

  மெல்லியதாய் இருப்பது இலை. எ.கா.: புளி, வேம்பு
  தண்டு ஆகிய தாளை ஒட்டி நீண்டு சுரசுரப்பாய் இருப்பது தாள். எ.கா.: நெல், புல்.
  பெருந்தாளாக  இருப்பது தோகை. எ.கா. சோளம், கரும்பு
  திண்ணமாய் இருப்பது ஓலை. எ.கா.: தென்னை, பனை.
 
முழுமைக்கு :  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக