வியாழன், 29 மார்ச், 2012

Achieved the target: "இலக்கை அடைந்து விட்டேன்!'

சொல்கிறார்கள்




"டிரையத்லான்' எனும் நீச்சல், சைக்கிளிங், ஓட்டப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றுள்ள, 47 வயதான, சென்னை பெண் காயத்ரி ராஜம்: இலங்கையின் புகழ் பெற்ற, "காலே' பகுதியில் நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா, ஹாங்காங், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட, 35 நாடுகளைச் சேர்ந்த பெண்கள், போட்டியாளர்களாக பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து நான் மட்டும் தான். முதலில், கடலில் நீச்சல் அடிக்க வேண்டும். எனக்கு, கடலில் நீச்சல் அடித்துப் பழக்கமில்லை. நீச்சல் குளத்தில் தான் பயிற்சி எடுத்திருக்கிறேன். அதை வைத்து சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில், துணிந்து இறங்கி விட்டேன். மலேசியா - காலே இடையேயான கடல்பரப்பு தான், போட்டிக்கான களம். மூர்க்கமான அலைகளின் ஆர்ப்பரிப்பு, கடலுக்குள் 1.5 கி.மீ., தூரம் சென்று திரும்ப வேண்டும். மனதிற்குள் பயம் இருந்தாலும், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில், கடலில் வேகமாக நீந்தத் துவங்கினேன். அலைகளின் நடுவே போகும் போது, லேசா கீழே அழுத்துவது போன்ற உணர்வு, நல்ல குளிரும் இருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும், ஒரு வழியாக சமாளித்தேன். தண்ணீரிலிருந்து வெளியே வந்து, 40 கி.மீ., சைக்கிளிங் செய்ய வேண்டும். "காலே'விலிருந்து, 20 கி.மீ., தூரம் சென்று திரும்ப வேண்டும். தொப்பலாக நனைந்த பின், சைக்கிள் மிதிப்பது, சற்று சிரமம் தான். ஏற்கனவே, நல்ல பயிற்சி எடுத்திருந்ததால், வேகமாக ஓட்டினேன். இருந்தாலும், வெளிநாட்டுப் போட்டியாளர்களுடன் போட்டியிடுவது சற்று சிரமமான காரியம் தான். சைக்கிளிங் முடிந்த பின், 10 கி.மீ., தூரம் ஓட வேண்டும். என்னை விட ஆஸ்திரேலியா, ஹாங்காங் வீராங்கனைகள் முன்னால் இருந்தனர். வெற்றிக் கோட்டையைத் தொடுவது தான் என் இலக்கு. அதனால், ஓடும் வேகத்தை நான் குறைக்கவில்லை. வெற்றிகரமாக இலக் கை அடைந்தேன். நான் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான், என் மூன்று பிள்ளைகளின் ஆசை. அதை நிறைவேற்றி விட்டேன்.

மேலும் சிறப்பு பகுதிகள் செய்திகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக