செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

R.T.I.Act gives remedy

சொல்கிறார்கள்                                                                                                                               

ஆர்.டி.ஐ., மூலம் பல நன்மைகள் பெற்றிருக்கும் பூமா: ஊத்துக்கோட்டை அருகில், அனந்தேரி கிராமம் தான் என் சொந்த ஊர். பிளஸ் 2 வரை தான் படித்திருக்கிறேன். என் கணவர், தனியார் நிறுவனத்தில், உயர் பொறுப்பில் இருப்பதால், அவரின் வேலை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்திருக்கிறேன். இந்த அனுபவங்கள் தான், அரசு அதிகாரிகள், போலீஸ் துறை என்று, அனைவரிடமும் தயக்கம் இல்லாமல் என்னை அணுக வைக்கிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ரயிலில், ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற போது, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், வேறு சிலர் அமர்ந்திருந்தனர். இது குறித்து, டி.டி.ஆரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், எந்த உபயோகமும் இல்லை. இது குறித்து, ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு, அனைத்து விஷயங்களையும் குறிப்பிட்டு, ஆர்.டி.ஐ., மூலம் கடிதம் போட்டோம்.அந்த, டி.டி.ஆருக்கு தண்டனையாக, அவரின் ஊதிய உயர்வை, ரயில்வே நிர்வாகம் மூன்றாண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது. இந்த தீர்ப்பை, ஒரு குடிமகனின் வெற்றியாக நாங்கள் கொண்டாடினோம்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை பல மடங்கு கூடிவிட்டது. கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப்பட்ட எனக்குத் தெரிந்தவரின் நிலப் பட்டா பிரச்னைக்கும், ஆர்.டி.ஐ., மூலம் பலன் கிடைத்தது. இதை நண்பர்கள், உறவினர்களிடமும் பகிர்ந்து, அவர்களுக்கும், ஆர்.டி.ஐ.,யின் மேல் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளேன்.பாதாள சாக்கடை, குப்பை கான்ட்ராக்ட், மருத்துவமனை குறைபாடுகள் என, எந்தப் பிரச்னையாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பதில் இல்லையெனில், அப்பிரச்னை குறித்து, நமக்குத் தெரிய வேண்டிய விவரங்களை கேள்விகளாக எழுதி, 10 ரூபாய்க்கான கோர்ட் முத்திரை வில்லை ஒட்டி, அருகிலுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்திற்கு அனுப்பினால், அடுத்த 10 நாட்களுக்குள், சரியான காரணங்களுடன் பதில் கிடைத்துவிடும்.தவறு செய்தவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவே இருந்தாலும், உரிய தண்டனை கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக