வெள்ளி, 20 ஜனவரி, 2012

still learning-women photographer jayanthi: இன்னும் கற்கிறேன்

சொல்கிறார்கள்                                                                                                                                



திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் ஜெயந்தி: என் அப்பா இன்ஜினியர்; அவருக்கு போட்டோகிராபியில் ஆர்வம் அதிகம். என் மூன்று வயதிலேயே ஒரு கேமரா வாங்கிக் கொடுத்து, எனக்கும் போட்டோகிராபியின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். எம்.ஏ., ஜர்னலிசம் படித்துவிட்டு, இது தான் என் தொழில் என்று தீர்மானித்து, ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் போட்டோகிராபராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனால், அந்த வேலையில் மனம் ஒட்டவில்லை. பின் ஒரு, "டிவி' சேனலில், நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தேன். அங்கு தான் பார்த்திபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், புகைப்படத் தொழிலில் இறங்கினோம். வீடியோ கேமரா சம்பந்தமான பொருட்களை வாங்கி வாடகைக்கு விடுகிறோம்; திருமணங்களுக்கும் புகைப்படம் எடுக்கிறோம். பொதுவாகவே, முஸ்லிம் திருமணங்களில் மணப் பெண் உள்ள இடத்தில் எந்த ஆணையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள்; ஒரு பெண் தான் அங்கு போக முடியும். அப்படியொரு சூழ்நிலையில், புகைப்படம் எடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது; சிறப்பாக என் பணியை செய்து கொடுத்தேன். அதைத் தொடர்ந்து, நிறைய பேர் அழைக்க ஆரம்பித்தனர். திருமண போட்டோகிராபி தான் எனக்கு சிறந்தது என முடிவு செய்தேன். இன்று வரை வெற்றிகரமாக என் தொழிலில் நிலைத்திருக்கிறேன். இதற்கு பக்கபலமாக இருப்பது, என் குடும்பம் தான்; குறிப்பாக, என் மகள். அவளை மாடலாக வைத்து தான் நிறைய கற்றுக் கொண்டேன்; இன்னும் கற்றுக் கொள்கிறேன். இதில் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக