வியாழன், 22 டிசம்பர், 2011

Pension increased for aged thamizh scholars: அகவைமுதிர்ந்த தமிழறிஞர்களுக்குக் கூடுதல் நிதி உதவி

 
வயது முதிர்ந்த தமிழர்கள் அனைவருக்கும் நிதியுதவியா? செய்தி தவறாக  வந்திருந்தாலும் சரி பார்க்க வே ண்டிய பொறுப்பு இதழுக்கு உள்ளதே. தவறாகச் செய்தியை  வெளியிடலாமா? சொன்னால் கேட்க மாட்டீர்கள். எனினும் பதிகின்றேன். என் வலைப்பூவைப் படிப்பவர்களுக்காக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 
 
 
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு 
கூடுதல் நிதி உதவி
 
 

First Published : 22 Dec 2011 11:45:38 AM IST


சென்னை, டிச.22: வயது முதிர்ந்த தமிழர்கள் மற்றும் அவர்களின் மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் ரூ 1000 நிதி உதவித்தொகையை ரூ 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மொழி  என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னை பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது.  எண்ணத்தின் வடிவமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்துக்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல்  மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது.   நிலைத்த பழமையும் வளரும் புதுமையும் இரண்டறக் கலந்து வாழும் மொழி  தமிழ்மொழி.  அது நமது ஆட்சி மொழி.  தமிழ் மொழியின் வளர்ச்சியில் ஜெயலலிதா தலைமையிலான அரசு தனி ஈடுபாடு கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  தமிழ் மொழியின் வளமை மற்றும் செழுமைக்கு முக்கிய காரணம், மொழியால் ஈடுபாடு கொண்டு, மொழிக்காக தன் வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் அறிஞர் பெருமக்களின் தன்னலமற்ற   தொண்டே ஆகும்.   அத்தகைய   தமிழ்  அறிஞர்களின்   நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஜெயலலிதா தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.   இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்காகவும், அயராது படுபட்ட தமிழ் அறிஞர்களைப் போற்றும் வகையில், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு, திங்கள் தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம், 1978 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித் தொகையாக அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.  தமிழ் மொழி உயர்ந்து வாழ வேண்டும் மற்றும் மொழிக்காக தொண்டாற்றிய அறிஞர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஜெயலலிதா வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் அவர்தம் மரபுரிமையர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் நிதி உதவியை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்.இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக