திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இலங்கை நா.உ.( எம்.பி.)களுக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு

 
இலங்கை எம்.பி.களுக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு
புதுடெல்லி, ஆக. 1-
 
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சே தலைமையில் இலங்கை எம்.பி.க்கள் குழு ஒன்று இந்தியா வந்துள்ளது. இன்று அவர்கள் பாராளுமன்றத்துக்கு சென்று சபை நடவடிக்கைகளை பார்த்தனர். சபாநாயகர் மீராகுமார், இலங்கை எம்.பி.க்கள் குழு வந்திருப்பதை சபைக்கு கூறி அறிமுகம் செய்தார். உடனே தம்பித்துரை எம்.பி. தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எழுந்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டனர்.
 
இதை கண்டித்து சபாநாயகர் மீராகுமார், அவர்கள் நமது அழைப்பின் பேரில் வந்துள்ள விருந்தாளிகள் அவர்களுக்கு நாம் மரியாதை கொடுத்து நன்றாக கவுரவிக்க வேண்டும் என்றார். இதை ஏற்காத அ.தி. மு.க. எம்.பி.க்கள், வெட்கம் வெட்கம் என்று கோஷமிட்டு, இலங்கை எம்.பி.க்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

1 கருத்து:

  1. தலைவிரித்தாடும் ஊழல்கள் பற்றிய வாதங்கள் தவிர வேறு முதன்மையான நிகழ்வு இல்லாத பொழுது இந்த அவலத்தைக் காட்டச் சிங்கள நா.உ.களை அழைத்திருக்க வாய்ப்பில்லை. வேறு எதற்கோ அழைத்து அவைக்கும் வரச் சொல்லி உள்ளார்கள். கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத மிக மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து தமிழ் மக்களின் உயிர்களைப் பறித்த சிங்களர்களின் சார்பாளர்களைக் கூட்டாளியான காங்.தான் விருந்தாளி என்கின்றது என்றால், கூட்டாளிக்கட்சியினரும் சிங்களத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய தங்கபாலுஅணியினரும் என்ன செய்கிறார்கள்? உலகத்தின் முன்னால் நம் நாட்டிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் செயலில் காங். வெட்கமோ நாணமோ மன உறுத்தலோ இன்றி, கொலைகாரக் கூட்டாளிகளை வரவேற்கிறது என்றால் இக்காலத்தில் வாழும் நமக்கும் அவமானம்தான். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/ எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    பதிலளிநீக்கு