ஞாயிறு, 26 ஜூன், 2011

இந்தியாவிலும் இலங்கையிலும் ஈழத்திலும் இனப்படுகொலைகள் செய்து கொண்டே இருப்போம். அதே நேரம் ஊழலில் வளர்ந்து கொண்டே இருப்போம்.ஆகவே எங்களை மன்னிக்க வேண்டும் என்கிறாரா சிதம்பரம். தெய்வம் நின்று கொல்லும் எனில்  வினை  விதைத்தவர்கள் வினை அறுத்துத்தான் தீர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

1984 சீக்கியர் படுகொலை மன்னிக்க வேண்டிய தருணம்: சிதம்பரம்

First Published : 26 Jun 2011 01:05:37 AM IST


கேந்திரிய குரு சிங் அமைப்பு சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் வாளை உயர்த்திக் காட்டும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தில்லி மு
புது தில்லி, ஜூன் 25: 1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்கு காரணமானவர்களை மன்னித்து புதிய இந்தியாவை உருவாக்கப் பாடுபட வேண்டிய தருணம் இது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.  இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 142 சீக்கியர்களின் பெயரை சமீபத்தில் ப.சிதம்பரம் நீக்கி உத்தரவிட்டார். இதைப் பாராட்டி அவருக்கு கேந்திரிய குரு சிங் என்ற சீக்கிய அமைப்பு விழா எடுத்தது.  தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ப.சிதம்பரம் மேலும் பேசியது:முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் வருந்தத்தக்கது. இருப்பினும் அந்த துயர சம்பவத்துக்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டு இந்தியா தொடர்ந்து முன்னோக்கி வந்துள்ளது. இனிமேலும் அந்தக் கசப்பான சம்பவத்துக்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவ்வாறு உதயமாகும் புதிய இந்தியாவில் அனைத்து மதத்தினரின் உணர்வுகளும், நம்பிக்கைகளும் சரிநிகராக மதிக்கப்படும். தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 142 சீக்கியர்களின் பெயரை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தச் செயலில் எனது பங்களிப்பு சிறிதளவுதான். இருப்பினும் இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் தலைதூக்கிய பிறகு அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் சீக்கியர்கள் வாழ்ந்தாலும் அவர்களது தாய் வீடு இந்தியாதான். இதனால் எந்த நாட்டிலும் வசிக்கும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு திரும்பினால் அவர்களை இந்தியா மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் என்றார் சிதம்பரம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக