வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

S.R.M. announced many awards and schemes to thamizh creators: 10 தமிழ்அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு ரூ.19 இலட்சம் விருது: எசு.ஆர்.எம். பல்கலை. வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து

பாராட்டுகள். பிற பல்கலைக்கழகங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும்.  சேப்பியார் சிலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். தமிழ் மொழி சார்ந்த  இவைபோன்ற திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.  இவற்றுடன் தமிழ் நாட்டில் பயிலும் அயல் மாணவர்களுக்காகன தமிழ் மொழிப் பயிற்சித் திட்டத்தையும் சேர்க்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

10 தமிழ்அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு ரூ.19 லட்சம் விருது: எஸ்.ஆர்.எம். பல்கலை. வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்பேராயம் தொடக்க விழாவில் தமிழ் நாள்காட்டியை வெளியிட
தாம்பரம், பிப். 3: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப்பேராயம் மூலம் ஆண்டுதோறும் 10 தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து, ரூ.19 லட்சம் விருது வழங்கி கெüரவிப்போம் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.  சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் என்ற புதிய அமைப்பை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:  தமிழ்மொழி தொடர்பான பல்வகைப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் தமிழ்ப்பேராயம் மூலம் தொன்மைக்கும்,பழமைக்கும் சான்றாகத் திகழும் தொல்காப்பியத்தை அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தொல்காப்பியப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொல்காப்பியச் சான்றிதழ் வகுப்பு, பட்டய வகுப்புகள் நடத்துதல், தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுப்பேருரைகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.  தமிழ் சமயக் கல்வித் துறையின்கீழ் தமிழகச் சமய வரலாறு, தமிழ் வாழ்வியல் சடங்குகள் உள்ளிட்ட பாடதிட்டத்தைக் கொண்ட தமிழ் அருட்சுனைஞர் (அர்ச்சகர்) பட்டயப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.  இணையவழிக்கல்வி மூலம் தமிழ் முதுகலை, தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளும் பயில வகை செய்யப்பட்டுள்ளது.  சாகித்ய அகாடமி போன்று ஆண்டுதோறும், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சிறுகதைக்கு புதுமைப்பித்தன் விருதும்,கவிதைக்கு பாரதியார் விருதும்,குழந்தை இலக்கியத்திற்கு அழ.வள்ளியப்பா விருதும்,மொழிபெயர்ப்புக்கு ஜி.யு.போப் விருதும்,அறிவியல் படைப்புக்கு பெ.நா.அப்புசாமி விருதும், நுண்கலைக்கு ஆனந்தகுமாரசாமி விருதும்,தமிழ் இசைக்கு முத்துத்தாண்டவர் விருதும்,35 வயதுக்குட்பட்ட தமிழ் ஆராய்ச்சிப்படைப்பாளிக்கு வளர் தமிழ் விருதும்,ரொக்கப்பரிசு தலா ரூ1.5 லட்சமும் வழங்கப்படும்.  தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தமிழறிஞருக்கு பரிதிமாற்கலைஞர் பெயரில் மதிப்புறு தகைஞர் விருதுடன் ரொக்கப் பரிசு ரூ.2 லட்சமும்,வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் தமிழ்ப் பேரறிஞருக்கு பச்சமுத்து பைந்தமிழ் விருதுடன், ரொக்கப்பரிசு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்றார் டி.ஆர்.பச்சமுத்து.  விழாவில் தமிழண்ணல், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி,சிலம்பொலி சு.செல்லப்பன், ஆர்.இளங்குமரன், ஈரோடு தமிழன்பன், சிற்பி பாலசுப்பிரமணியன், என்.தெய்வசுந்தரம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக முதன்மைக் கல்வி அதிகாரி எம்.பொன்னவைக்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக