செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

P.M.knows nothing about fishermen killing: ஓரிரவில் முடிவை மாற்றிய கருணாநிதி: காங்கிரசை மிரட்ட போட்ட திட்டம், பணால்

சிங்கள அரசு நாளொரு கொலையும் கொள்ளையுமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கும் பொழுது தமிழக மீனவர்கள் உயிர்ப்பறிப்பு குறித்து நாட்டின் தலைமையமைச்சருக்கு அவ்வளவாகத் தெரியாது என்று சொல்வது  இழிவல்லவா? உண்மையில் அப்படித்தான்  சொன்னரா என்று சரி பார்க்கவும்.  அதுதான் உண்மை யென்றால் தன் நாட்டுக் குடி மக்கள் அடுத்த நாட்டால் கொல்லப்படுவது குறித்து ஒன்றும் அறியாத தலைமையமைச்சரும் அவர் வழி நடத்தும் மத்திய அரசும் ஒன்றும் தெரிவிக்காத தமிழக அரசும் தேவைதானா என்று மக்கள் முடிவெடுப்பார்கள் அல்லவா? 
வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன்
"தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி கூறியதற்கு, பா.ம.க., உடனடி பதிலடி கொடுத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க நினைத்த தி.மு.க.,வின் திட்டம், "பணால்' ஆனது.

டில்லியில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் உடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காகவும் தமிழக முதல்வர் கருணாநிதி, நேற்று முன்தினம் டில்லி வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசும்போது, "தற்போதைய நிலையில் எங்கள் கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன' என்றார்.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் நேற்று பகல் 12 மணிக்கு, முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த கருணாநிதியிடம், "பா.ம.க, குறித்து நீங்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கு, நேர்மாறாக ராமதாஸ் பதில் கூறியுள்ளாரே' என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளிக்கும்போது, "நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூட்டணியில் எப்போது இணைவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றார். பா.ம.க., குறித்த முதல்வரின் நிலைப்பாடு ஒரே இரவுக்குள் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க. கூட்டணியில் இம்முறை எப்படியும் முடிந்தளவுக்கு அதிகமான சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரசுக்கு ஓரளவுக்கு அதிகமாக சீட்டுகளை அளிக்க தி.மு.க., தீர்மானித்திருந்தாலும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு சீட்டுகளை அள்ளிக் கொடுக்க தி.மு.க, தயாராக இல்லை. காங்கிரஸ் உடனான பேரத்தின் கடுமையை முடிந்தளவுக்கு குறைக்க தி.மு.க., பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான், மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிடைத்த அமைச்சர் பதவிகளை தி.மு.க., ஏற்க முன்வராமல் தவிர்த்து விட்டது. இந்த வழியில், பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், இட நெருக்கடியை காரணம் காட்டி காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை தர இயலாது என சமாளிக்கலாம் என்று தி.மு.க., திட்டமிட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திப்பதற்கு முன்பாகவே கூட்டணியில் பா.ம.க.,வும் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தான், காங்கிரசுடன் பேரம் பேசும் போது எளிதாக இருக்கும் என்று தி.மு.க, எதிர்பார்த்தது. இதன் மூலம் அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க தி.மு.க., நினைத்தது. இதனடிப்படையில், டில்லி வந்ததும், "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க, உள்ளது' என்று கருணாநிதி பேட்டியளித்தார்.

இப்பின்னணியை உணர்ந்த பா.ம.க., சுதாரித்துக் கொண்டது. முதல்வரின் கருத்தை மறுக்கும் விதமாக, உடனடியாக பா.ம.க.. மாற்றுக்கருத்தை நேற்று முன்தினம் இரவே வெளியிட்டது. இதை தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதன் காரணமாக, ஒரே இரவுக்குள் பா.ம.க., குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதில் அவசரப்பட்டு விட்டோமோ என்ற குழப்பமும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கு தெரியாது?பிரதமரைச் சந்தித்த பின், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு முதல்வர் பதில் அளித்தபோது, "மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவரும் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.

- நமது டில்லி நிருபர்-

வாசகர் கருத்து (10)
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-02-01 01:38:38 IST Report Abuse
உனக்கு ஏன்யா இந்த பொழப்பு.... இந்த வயசான காலத்துல புண்ணியம் தேடறத விட்டுட்டு இப்படி தள்ளு வண்டியில போய் உன் குடும்பத்துக்காக பிச்சை கேட்குறியே இது உனக்கே நல்லா இருக்கா... ஆச எவன விட்டுச்சி!!! வாய்ப்பு கிடைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் 4G , 8G , 16G போன்ற விண்ணை முட்டும் சாதனைகளை செய்யலாம் என்று துடிக்கிறார் இந்த பெருசு!!!!
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-02-01 01:36:07 IST Report Abuse
வெட்கம்..மூக்கறுபட்ட நிலையிலே உள்ள மனிதரை பார்க்க..! கேட்டால் அரசியல் சாணக்கியர் என்பார்.! சும்மா பம்மாத்து..ஜீரோ ஞானம் உள்ள ஓர் மனிதரை வானளாவ தனது ஏடுகளிலே, மற்றும் கைகூலிகளை கொண்டு புகழ்ந்தால் அதன் மதிப்பு இப்படித்தான் ஆகும். பா.ம.கவிற்கும் ஆப்பு..காங்கிரசுக்கும் ஆப்பு என்று கொண்டு சென்றவருக்கே இரண்டு ஆப்புக்களும்..சபாஷ்..!! எந்த முகத்தோடு வருவாரோ? ச்ச்சச்சோ..!! இந்த லட்சனத்திலே ஆ..ஆ..ஆறாவது தடவை முதல்வர் கனவு வேறு.! அரசியல் இப்படி என்றால் அதைவிட ஒரு கொடுமை..நமது மீனவர்களை பற்றி அவர்கள் கொல்லப்படுவதை பற்றி "அவ்வளவாய்"பிரதமருக்கு தெரியாதாம். எந்த லட்சணத்திலே இவரது "கடிதம்" சென்று சேர்ந்துள்ளது என்பதை பாருங்கள். உள்ளம் கொதிக்கின்றது!! எப்படியெல்லாம் இவர் தமிழக மக்களை ஏமாற்றி பிழைத்துள்ளார் என்று பாருங்கள். கேட்டால் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்..அப்புறமாய் தந்தி அனுப்பியுள்ளேன் என்றார். ஏன் இவரது கட்சி மந்திரிகளுக்கு அப்படி என்ன.. டுங்கற வேலையோ டெல்லியில் ? பிரதமரை பார்த்ததாய் சொன்ன இவரது மந்திரிமார்களும் கட்சி எம் பிக்களும் இவரால் சொல்லியபடி ஆடிய நாடகம் தானே? இப்படி நான் ஆவேசப்படுவதிலே தவறுண்டோ? பிரதமருக்கு தெரிந்த ஒரு சில விஷயங்கள் கூட அதிமுக மற்றும் வைகோ அவர்கள் கொண்டு சென்ற விஷயத்தால் தானே..! ஒரு குடும்பத்தலைவனை இழந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் படும் பாட்டை என்னென்று சொல்வது? வார்த்தை உண்டா? பெண்டு பிள்ளைகள் வாழும் வாழ்க்கை அவலங்களை இவர் ஏன் உணர மறுக்கின்றார்? எதற்க்காக இவரையெல்லாம் ஒரு பதவியிலே இருக்க விட வேண்டும்? தனது குடும்பம் மட்டுமே சுகமாய் வாழ வகை செய்தாரே அன்றி கொல்லப்படும் மீனவ சமுதாய மக்களை பற்றி ஏன் இவர் இவ்வளவு காலமாய் ஏமாற்றி வந்தார்? நான் ஆரம்பம் முதல் சொல்லிவருவதெல்லாம்..எம்ஜியாரை உளமார நேசித்த ஒரு சமுதாயம் அழியட்டும் என்கிற அலட்சிய போக்குதானே? இவரையும் இவரது திமுகவையும் இன்னுமா நாம் விட்டு வைக்க வேண்டும்? சிந்திக்கும் நேரம் அல்ல இது.."ஒழித்தே" தீரவேண்டும் என்கிற "முடிவெடுக்கும்" தருணம் இது..!! தவறினால் தமிழினமே அழியும் ..!! தவறுவோர் மடையர்களே..!! நாம் மடையர்கள் அல்ல என்பதை அவருக்கு உணர்த்துவோம்..!! நிச்சயம்..!
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
Saravanan - Pondicherry,இந்தியா
2011-02-01 01:19:29 IST Report Abuse
யாருப்பா அது முகத்த தொடச்சுக்குங்க. ஒரே கரியா இருக்கு. டாக்டர் அங்கயும் துண்ட போட்டுட்டு வந்துருகாரு . வி. கா. வோட கூட்டணி அறிவிக்காததால இவருக்கு இன்னும் மவுசு இருக்குன்னு நெனச்சுக்கிட்டிருக்காரு. வி. காந்தும் டாக்டரும் பிகு பண்ணினால்,யோசிக்காம தி. மு. க. வும் அ.தி.மு.க. வும் சரி பாதி தொகுதில நின்னு அனைத்து தொகுதியையும் கைப்பற்றலாம். எதிர்த்து நிற்கும் யாருக்கும் டெபொசிட் கூட கிடைக்காது. 21 /2 வருஷத்துக்கு ஒருத்தர் முதல்வருன்னு சொன்னா அத நம்ப முடியாது. அதனால ரெண்டு முதல்வர் இருக்கலாம். ரெண்டு துணை முதல்வர் இருக்கலாம். எலா துறைக்கும் ரெண்டு ரெண்டு மந்திரிங்க இருக்கலாம். இவங்கல கேள்வி கேக்க ஒரு பய இருக்க முடியுமா. ? பெரும்பாலான நாம இந்த ரெண்டு குட்டைல ஏதோ ஒன்னுலதன முழுகி குளிச்சிக்கிட்டிருக்கோம். இந்த ரெண்டு கட்சிக்குதான் , அவங்க எவ்ளோ மக்கள் விரோத ஆட்சி பண்ணினாலும் தேர்ந்தெடுக்கிறோம். இந்த காம்பினஷன் ரொம்ப நல்லா இருக்கும். சட்டசபையில கேள்வி கேக்க எதிர்க் கட்சிங்கன்னு ஒன்னும் இருக்காது.
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
2011-02-01 01:07:08 IST Report Abuse
யோவ், அவ்வளவாக தெரியாத பிரச்சனைக்கு எப்படியா பிரதமர் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்??? ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
gopalan sankaran - chennai,இந்தியா
2011-02-01 01:02:47 IST Report Abuse
ஓரிரவில் முடிவை மாற்றிய கருணாநிதி: "ஓரிரவு" எழுதிய அண்ணாவையே மாற்றியவராயிற்றே இவர். சந்தர்ப்பத்துக்கு தக்கபடி முடிவையா மாற்ற மாட்டார்?
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
gopalan sankaran - chennai,இந்தியா
2011-02-01 00:59:09 IST Report Abuse
ஏனோ தெரியவில்லை (நான் பகுத்தறிவு வாதி அல்ல) இவர் போடும் திட்டம் எல்லாம் எதிர்மறையாகவே நடக்கிறது. "Beware the ides of March" என்று ஜூலியஸ் சீசருக்கு முன்னறிவிப்பு வந்தது. அது போல கலைஞருக்கு "Beware the ides of May" (தேர்தல் வரும் மாதம்) என்று கூற வேண்டும் போலிருக்கிறது.
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
seenivasan - doha,கத்தார்
2011-02-01 00:49:13 IST Report Abuse
உமக்கும் உமது அமைச்சர்களுக்குமே மீனவர்கள் படும் கஷ்டம் பற்றி தெரியாது, பிரதமருக்கு எப்படி தெரியும்? மீனவர்களை பற்றி பேசவா நீர் டெல்லி சென்றீர். வழக்கமாக கடிதம். இல்லை என்றால் தந்தி அதை தவிர ஒமக்கு ஒன்னும் தெரியாதே ......இந்த நாடும் நட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ஹ....ஹ....ஹ...
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
swaminathan - london,யுனைடெட் கிங்டம்
2011-02-01 00:44:37 IST Report Abuse
அப்போ கலைகர் எழுதிய எந்த kadidathayum நீங்கள் படிக்கவே இல்லையா? இல்லை, கடிதத்தில் மீனவர் பற்றி குறிப்பிடவில்லையா?
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
Balan - Karaikal,இந்தியா
2011-02-01 00:43:43 IST Report Abuse
பா. ம க வின் பதிலடி, கூட்டணியின் தடாலடி, முடிவு எப்பொழுது கேளுங்கடி. அது மக்களுக்கான முடிவா , இல்லை தனக்கான முடிவா, தன் மகனுக்கான முடிவா.
 
muruga - paris,பிரான்ஸ்
2011-02-01 00:19:17 IST Report Abuse
மீனவர்கள் பத்தி அவ்வளவாக தெரியாது என்றால் என்ன ? அவர் பிரதம மந்திரியா இருக்கார், நீர் முதல் அமச்சரா இருக்கிறீர் ,அப்புறம் லெட்டர் எழுதினே என்று எத சொன்னே.
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment

உங்கள் கருத்தை பதிவு செய்ய :
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக