செவ்வாய், 25 மே, 2010

உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்: ஐ.நா.வுக்கு இலங்கை எச்சரிக்கை



நியூயார்க்,​​ மே 24:​ எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என ஐக்கிய நாட்டு சபையிடம் இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.​ அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்,​​ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.​ புலிகளுடனான போரின் போது எங்களது நாட்டு ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து இலங்கை அரசே விசாரிக்க முடிவெடுத்துள்ளது.​ இந்நிலையில் இதன் மீது நம்பகத்தன்மையில்லாமல் ஐ.நா.​ விசாரிக்க முயல்வது நல்லதல்ல என்று பெரிஸ் கூறினார்.​ இலங்கை ராணுவத்தின் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க உயர் குழுவை ஐ.நா.​ அமைப்பதென்பது சட்டரீதியாகவும்,​​ தார்மிக ரீதியாகவும் நியாயமானதல்ல.​ இதனால் இலங்கை மக்கள் மத்தியில் அதிருப்திதான் ஏற்படும்.​ புலிகளுடனான போரினால் 30 ஆண்டுகளாக வளர்ச்சி பாதிக்கப்பட்ட இலங்கை,​​ அதில் இருந்து மீண்டு தற்போதுதான் லேசாக வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது.​ இந்நிலையில் இலங்கை மீதான விசாரணை என்ற ஐ.நா.வின் நடவடிக்கை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பெரிஸ் கூறியுள்ளார்.​ ஐ.நா.​ பொதுச் செயலர் பான் கீ மூன்,​​ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை விரைவில் சந்தித்துப் பேசவுள்ளார் பெரிஸ்.​ பான் கீ மூனை சந்திக்கும் போது இலங்கை உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தான் வலியுறுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.​ ​ இலங்கை அரசு விசாரணை நடத்தவுள்ள நிலையில் ஐ.நா.​ தலையிடுவது விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் பான் கீ மூனிடம் ​ தான் எடுத்துச் சொல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.​ இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரின் போது ராணுவம் அப்பட்டமாக மனித உரிமையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.​ போரின் போது தமிழர் பகுதியில் மருத்துவமனைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.​ இந்தத் துயர சம்பவங்களுக்கு இலங்கை அரசே முழுக் காரணம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் ​சுமத்தின.​ இலங்கை போரின் போது மனித உரிமைமீறல் நடைபெற்றதாகவும்,​​ அதற்கு அந்நாட்டு அரசே காரணம் என்றும் சமீபத்தில் பிரஸ்ஸலின் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலும் குற்றம்​ சாட்டப்பட்டது.​ இலங்கை ராணுவம் மனித உரிமை மீறிய போது அதைத் தடுக்க ஐ.நா.வும் தவறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.​ இதனிடையே,​​ இலங்கையில் போர்க்காலத்தில் மனித உரிமை மீறப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்கும் பணியில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் தீவிரமாகவுள்ளார்.
கருத்துக்கள்

பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றொழித்த, நாட்டுப் பகுதியைச்சூறையாடிக் கொள்ளையடித்த வெறியனே விசாரணை மேற் கொள்வான் என்பதற்கு இந்தியமும் வால் பிடிக்கும். எனினும் கையாலாகாத ஐ.நா.இதனை எதிர்த்துத் தனி விசாரணை மேற்கொள்வதற்குத் துணிவதற்கான சூழல் இருப்பதாகத் தெரியவில்லை.குற்றவாளியே நீதிபதியானால்என்ன நடக்கும் என்பது தெரியாததல்ல! என்றாலும் இப்படிப் பேசும் துணிவைத் தந்ததும் ஐ.நா.தான். உலக நாடுகளே! நடுநிலையுணர்வுடன் செயல்பட்டுப் போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குங்கள். வருங்கால வரலாற்றில் கறைபடிந்த நாடுகளாய் இடம் பெறாதீர்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/25/2010 3:36:00 AM

Ravi itku tamilnattu muthalvarin arasiyalali vida Mahindavin kudumpathin arsiyal ontrum kevalamanathu aala.avarkalin thnathi kalathil irrunthu thankalin katchikkavum nattukkakavu uzaitha oru mnaduthara varkathavarkal.Ithu varaikkum entha janathipathiyinal ilanakayin payankaravathathai azikka mudinthathu.Mahindavukku sakotharar irrunthapadiyalthan unmaiyana visuvasthaudan panaktta mudinththu.Viduthalipulikal ethanai ayiram appvikalin uyirkali kuditharkalapothellam un ena seithathu.Ippothu avrkal nattai apiviruthi seiya muyalum pothu suma oru visaranai vaikka vendum enpathu ivarkalum payankarvathikalin pirathinithi pola ullathu. Mahindavidam unmaiyana povththan enpathu ellorukkum theriyum.Avrinal mattumey ilanakyil ella makalidamum otrumayai kodukka mudiym. anuman

By anumann
5/25/2010 2:23:00 AM

முடிவாக, உள்நாட்டு விடயங்களில் யாரும் தலையிடக் கூடாது, ஏனெனில் தற்போது அது உள்நாடல்ல. மகிந்தா அதனை விலைகொடுத்து வாங்கிவிட்டார்! பாராளுமன்றத்தைப் பாருங்கள் எல்லாமே அவரின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட உள்வீடு!!!!!

By Ravi
5/25/2010 1:42:00 AM

புலிகளை அழித்தபோது தவறு மட்டும்தான் நடந்தது என்றில்லை, சில நல்ல விடயங்களும் நடந்தன. புலிகள் வேரோடு அழிக்கப்பட்டனரே! மந்திரிசபையில் சில 'பிரபாகரன்'களுக்கு இடமளித்தோம், மந்திரிசபையே கூடாதென்பதற்காக அல்ல, தமிழர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக. அகதிமுகாமில் இன்னமும் தமிழர்களை வைத்திருக்கின்றோம், வெளியில் விட்டால் மட்டும் என்ன அவர்களிற்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவா போகின்றோம்?. தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுகின்றோம், தமிழர்பகுதியே வேண்டாம் என்பதற்காகவல்ல. தமிழரும் சிங்களவரும் எப்படி ஒற்றுமையாக வாழவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்காக. தமிழர்களின் வளமான நிலங்களை பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் அபகரித்தோம். அவர்களிற்கு நிலமே வேண்டாம் என்பதற்காகவல்ல. வேறு எப்படித்தான் சிங்களவர்களை எதிர்காலத்தில் அங்கு குடியேற்றுவது? அதுவும் காய்ந்து கிடக்கும் யாழ்ப்பாணத்திற்கு எந்த சிங்களவன் குடிபோவான்? முடிவாக, உள்நாட்டு விடயங்களில் யாரும் தலையிடக் கூடாது, ஏனெனில் தற்போது அது உள்நாடல்ல. மகிந்தா அதனை விலைகொடுத்து வாங்கிவிட்டார்! பாராளுமன்றத்தைப் பாருங்கள் எல்லாமே அவரின் குடும்ப உறுப்

By Ravi
5/25/2010 1:42:00 AM

இறமையென்றால் என்ன?

By உலகம்
5/25/2010 1:07:00 AM

நாங்கள் யாராயினும் எவரானாலும் எங்களுக்கு எதிரி என்று தெரிந்தால் நாங்கள் கொல்லுவோம் அது எங்களின் இ றைமை அதையாரும் தட்டி கேட்க முடியாது அது எங்களின் உள்விவகாரங்களில் தலை யிடுவதாகும் எங்கள் கொலைவெறி இறைமைக்குள் தலையிடகூடாது

By இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ்
5/25/2010 1:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக