வியாழன், 27 மே, 2010

ஒகேனக்கலில் குடிநீர்த் திட்டம் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்கு சொந்தமானது: இல.கணேசன்



கோவை, மே 26: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்கு சொந்தமானதுதான் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.கோவை ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழக அரசு சார்பில்தான் நடத்தப்படுகிறது. திமுக மாநாடாக இருந்திருந்தால் பாஜக பங்கேற்றிருக்காது. தமிழர்களின் மாநாடாக இருப்பதால் பங்கேற்கிறது.தமிழகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக தமிழர்களுக்கு இருக்கும் பிரச்னை. பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கவே தடுமாறி வருகின்றனர். ஒவ்வொரு இடத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் வெவ்வேறு வகையில் பிரச்னைகள் உள்ளன. இவற்றுக்கு இம்மாநாட்டில் தீர்வு கிடைக்க பாஜக குரல் கொடுக்கும்.முல்லைப் பெரியாறு போன்ற அண்டை மாநில நதிநீர்ப் பிரச்னைகள் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சு நடத்த வேண்டும். இதற்காக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.காங்கிரஸ் ஆட்சியில் அங்கிருந்த முதல்வர், கட்சிகள் தெரிவித்த கருத்துக்கும், இப்போதுள்ள முதல்வர் மற்றும் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. ÷ஒகேனக்கல் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், திட்டப்பணிகள் துவக்கப்பட்ட இடம்தான் சர்ச்சைக்குரியது என்று கர்நாடகத்தில் குரல் எழும்பியுள்ளது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்குச் சொந்தமானதுதான் என்றார்.
கருத்துக்கள்

மிகச் சரியான உரை.இது போல், தமிழ்நலம் நாடித் தங்கள் கட்சியை அழைத்துச் சென்றால் அவர்களுக்கும் நல்லது. தமிழகத்திற்கும நல்லது. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக