வியாழன், 28 டிசம்பர், 2017

காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ்க்குறும்பா நூற்றாண்டு விழா

       அடையாறு காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ்க் குறும்பா நூற்றாண்டு விழா நடைபெற்றது.
      இவ்விழாவிற்கு கவிஞரும் இதழாளருமான மு.முருகேசுதலைமையேற்றார்.
வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார்.
நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேசுகுமார், துரை.நந்தகுமார், வானவன், தயானி தாயுமானவன் முதலரன 25-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை (ஐக்கூ)வாசித்தனர்.
 தமிழின் மூத்த குறும்பாக் கவிஞர் ஓவியர் அமுதபாரதி, தனது  குறும்பாக் கவிதைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
 விழாவிற்குத் தலைமையேற்ற கவிஞர் மு.முருகேசு பேசும்போது, ”தமிழில் அறிமுகமான சப்பானியக் குறும்பாக் கவிதைகள்இன்றைக்குப் பலநூறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. வாசகனையும் கூட்டுப் படைப்பாளியாக எழுதத் தூண்டும் குறும்பாக் கவிதைகளைப் பல இளைய கவிஞர்களும் ஆர்வத்தோடு எழுதி வருகிறார்கள். சப்பானிய மரபுகளைப் பின்பற்றாமல், தமிழ் மண்ணையும் தமிழர்களின் வாழ்வியலையும் இணைத்து எழுதப்படுவதால்தான் தமிழில் குறும்பாக் கவிதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறும்பா இதழ்கள், குறும்பாக் கவியரங்கம், குறும்பாக் கண்காட்சி, குறும்பா ஆய்வரங்கம், குறும்பா மொழிபெயர்ப்பு எனத் தமிழ்க் குறும்பா பல தளங்களிலும் இன்றைக்குப் புதுத்தடம் பதித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.
      விழாவில், ‘சந்தியா பதிப்பகம்’ நடராசன், எழுத்தாளர் பாரதிபாலன்,  முனைவர். ஆனந்த மூர்த்தி, ‘இலக்கிய வேல்’ சந்தர் சுப்பிரமணியன், ’மேன்மை’  ஆசிரியர் மு.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 சிவகாசி, அறந்தாங்கி, செங்கல்பட்டு, அரக்கோணம், புதுக்கோட்டை, வாலாசாபேட்டை முதலான  தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை வாசித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கவிதைப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
   விழா நிகழ்வுகளை எழுத்தாளர் குடந்தை பாலுஒருங்கிணைக்க, முனைவர்  அரிக்குமார் நன்றி கூறினார்.
  

புதன், 27 டிசம்பர், 2017

தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்


 ஆடி 31, 2049 வியாழன் 16.08.2018

சா.இரா.நி.கல்லூரி வளாகம், சாத்தூர்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும்

சாத்தூர் இராமசாமி(நாயுடு) நினைவுக் கல்லூரித்

தமிழ்த்துறையும்

இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்

“தமிழியல் ஆய்வு வரலாறும் வளர்ச்சிப்  போக்குகளும்”


புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை!

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை,
தமிழில் மாற்றுக !
அரசுக்குத் தனித்தமிழ் இயக்கம் வேண்டுகோள்!
புதுச்சேரி நகரைப் பொலிவு (smart) நகராகத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான வடிவமைப்புச் சின்னம் ஒன்றைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தீமைகள் பெரும்பான்மை மக்கள் மொழியான தமிழுக்கும் வரலாற்றுக்கும் விளைவிக்கப்பட்டுள்ளன.
ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்காமல் பிரஞ்சு மொழியில் மட்டும் அந்தச் சின்னம் உருவாக்கப் பட்டுள்ளது. இதைமாற்றித் தமிழில் மட்டும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். தேவைப்பட் டால் சிறிய அளவில் ஆங்கிலத்தில் இருக்குமாறு உருவாக்கலாம். சட்டப்படிப் புதுச்சேரியில்    தமிழ்தான் ஆட்சிமொழி !. அப்படியிருக்க அதைப் புறக்கணித்தது புதுச்சேரி மக்களையும் தமிழ்மொழியையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.
பிரஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டஅயல்நாட்டவர் 50 பேர்கள் இங்கு இருக்கலாம். பிரஞ்சு மொழி தெரிந்த பிரஞ்சுக் குடியுரிமைபெற்றவர்கள் அனைவரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களேயாவர். அவர்கள் தமிழ்மொழியை மதிக்கும் பற்றாளர்கள்.
பிரஞ்சு அரசு அம்மொழியை அதிகமாகப் பேணிக்காத்து வருகிறது. 1994இல் பிரஞ்சு மொழி யுரிமை யை அடிப்படையுரிமையாக அறிவித்து அங்குவரும் மற்றமொழிக்காரர்களும் பிரஞ்சு மொழியை மதித்துக் கற்றுப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் உத்தரவிட் டுள்ளது. பிரஞ்சு அரசே, தமிழ் புதுச்சேரியில் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாது.
பாண்டிச்சேரி என்னும் பெயர் மாற்றப்பட்டு புதுச்சேரி என்னும் பெயர் நம்மாநிலத்திற்கு வைக்கப் பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சென்ற அரசு நகரை மட்டும், பாண்டிச்சேரி என்று அறிவித்தது. போராட்டத்திற்குப் பின் அந்த அறிவிப்பைக் கைவிட்டது. எனவே நகரத்திற்கும் புதுச்சேரி என்றுதான் பெயர். ஆனால் அரசு வெளியிட்டுள்ள பொலிவு நகர்ச் சின்னத்தில் பாண்டிச் சேரி என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, வரலாற்றைத் திரிப்பதாகவும் புதுச்சேரிப் பெயர்மாற்ற உத்தரவை மிதி்ப்பதாகவும் உள்ளது.
எனவே புதுச்சேரிஅரசு, வெளியிட்டுள்ள பொலிவுநகர்ச் சின்னத்தைத் திரும்பப் பெறுமாறு புதுச்சேரி அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.  புதுச்சேரி என்று தமிழில் குறிப்பிட்டுப் புதிய பொலிவு நகர்ச் சின்னத்தை உருவாக்கி வெளியிடுமாறும் புதுச்சேரி அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
க.தமிழமல்லன்
தலைவர், தனித்தமிழ் இயக்கம்,புதுச்சேரி
முகவரி- 66 மா.கோ.தெரு,  தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009
பேசி – 9791629979 ;   vtthamizh@gmail.com

செவ்வாய், 26 டிசம்பர், 2017

இரீயூனியன் நாட்டுத் தமிழர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும், சென்னை



பேரன்புடையீர்,
வணக்கம்.
வரும்

மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை

சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை

இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள்
தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து
இரீயூனியன்-தமிழக நல்லுறவு
குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில்
தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர்.
இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும்.
இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்
மிக்க நன்றி.
மிக்க அன்புடன்
சான் சாமுவேல்
.
Dr.G.John Samuel,
நிறுவனர்-இயக்குநர்-செயலர்
ஆசியவியல் நிறுவனம்
செம்மஞ்சேரிசோழிங்கநல்லூர்
சென்னை 600 119
பேசி 9840526834

SL Eastern Governor should publicly apologies for his wife's hate crime against Tamil devotees

SL Eastern Governor should publicly apologies for his wife's hate crime against Tamil devotees


The wife of Sinhala colonial Governor to East, Mrs Deepthi Bogollagama, on Friday desecrated the temple of village deities Kaa'li, Murukan and Vairavar worshipped by resettled Eezham Tamils at the hill-top of Maththa'la-malai in Kooniththeevu, a traditional Tamil village located near Champoor in Moothoor division of Trincomalee. While even the Sinhala police constables, accompanying the couple on an official visit, had removed their footwear before walking into the temple premises, the wife of SL Governor behaved in a desecrating manner. After being reminded by the Tamil female devotees, she started to verbally attack the devotees with a hostile body language and issued an open threat in Sinahala: “tamuselā okkomalāṭa denavā vẹḍē,” (තමුසෙලා ඔක්කොමලාට දෙනවා වැඩේ), which could mean anything from ‘you all would be dealt with trouble’ to collective death threat. 

The Eastern Governor should make a public apology to the conduct of his wife that has severely hurt the feelings of already trauma affected survivors of genocidal war, Tamil activists in Trincomalee commented. 


Given the past criminal record of Mrs Deepthi Bogollagama, who was initially alleged of stabbing a Tamil cardiologist in December 2004 following a personal dispute involving her husband and the doctor's Sinhala fiancée at that time, the people should be taking her threats serious, especially when she was also recording the faces of the devotees who criticised her at the venue on Friday. (On her past case, although a case was filed against her murder attempt in 2004, SL Attorney General’s Department intervened seeking to mitigate the charge against the SL minister's wife from attempted murder to simple hurt while the Mr Bogollagama settled the dispute). 

During the Rajapaksa regime, Mr Bogollogama was SL Foreign Minister of genocidal Sri Lanka, particularly during the final phase of war. 


Maththa'la-malai
The location of Maththa'la-malai in Kooniththeevu, near Champoor in Moothoor East of Trincomalee district
Maththa'la-malai
Maththa'la-malai

On Friday, the Eastern Governor Rohita Bogollagama, was visiting the site of temple to confront the Tamil devotees with the message that they cannot proceed further digging of the well, where an alleged artefact had been discovered. Buddhist monks, as usual, were making one-sided claim that the locality belonged to Sinhala Buddhists in the past. When the devotees came with the question on where to go for water, Mr Bogollogama came with a suggestion of temporarily supplying water through a bowser. 

While Mr Bogollogama was making the offer, his wife went amok on Tamil devotees. 

Two Sinhala Buddhist monks visited the temple locality on Tuesday and on Wednesday making false claims to the locality as an ancient Buddhist site. 

The monks who had come from Seruwila instructed the management of the temple not to proceed with any construction work as the SL Archaeology Department has been instructed by the monks to seek an interim order against all construction activities citing the discovery of a stone, which is believed to be an archaeological artefact. 

In the meantime, 56-year-old a traditional Tamil poosaari (non-Brahmin priest), who is a 7th generation priest from Champoor said that the place has been only populated by Tamils and they were having the tradition of staging seasonal feasts with ritual sacrifices (vea'lvi) to Paathaa'la-vairavar at Maththa'la-malai for more than 7 generations as conveyed by his predecessors. Tamil Veddahs were one of the four communities comprising the Tamil people throughout ancient times, he said.


There were Kaa’li, Murukan, Paththini, Naaka-thampiraan and Vairavar temples situated in various villages of Moothoor East, all having “Kiraama-theavathai vazhipaadu” (village goddess worship) tradition, Mr Pathmanathan told TamilNet. 

Maththa’la-malai is surrounded with agricultural water ponds and lakes in addition such as Eaham-vaddavaan-ku’lam lying behind its hinterland, Villuk-ku’lam and Iththikku’lam in South and Periyaku’lam (Pokkaiyaa-ku’lam) in the East, the priest observed. 

All the places are being either cultivated or occupied as barren lands more or less by the occupying SL Navy, he said adding 9 acres of agricultural lands with at least 1,000 years of traditional ownership to his lineage of family, as remaining within the occupied zone of the SL Navy. 

Mr Pathmanathan has been responsible for religious rituals at two temples, Arasadi Naakathampiraan temple in Champoor and at Neelap-pazhai Paththini Amman, which is located in Seruwila division. 

Neelaa-pazhai village has been Sinhalicised into Neelapola in recent times. But, his priesthood continues as Sinhalese also worship Paththini goddess. 

However, the priest was surprised to see Sinhala Buddhicisation targeting Maththa’la-malai, which is situated remotely in a predominant Tamil area. 

The Tamil people in Champoor and Koonith-theevu are not aware of the unfolding geopolitics, which involves the big powers and how their agent state in Colombo was being provided with unchecked international escape routes from its genocidal crimes to proceed with structural genocide targeting Champoor Tamils as well as the entire occupied country of Eezham Tamils, civil activists from Trincomalee said. 


Maththa'la-malai
The location of Maththa'la-malai in Kooniththeevu
Moothoor East
Moothoor East [Image Courtesy: British made One Inch Map, revised in 1972 by 'Sri Lanka' Survey Department]
Maththa'la-malai
Maththa'la-malai



Chronology:


திங்கள், 25 டிசம்பர், 2017

திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மேம்பாடு? உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு? – எம். அருண்குமார்

 அகரமுதல 218, மார்கழி 09- மார்கழி 15,  2048 /  திசம்பர் 24  – திசம்பர் 30,  2017

 

திராவிடப் பல்கலைக்கழகத்தின்

தமிழ்த்துறை மேம்பாடு!

உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு?

 திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கல்வி பயில மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர தமிழக அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென்னிந்தியாவின்  முதன்மை மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும். இவை திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. திராவிட மொழிகளில்(தமிழ்க்குடும்பமொழிகளில்) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான 27 மொழிகளைப் பாதுகாத்திடவும், அந்த மொழிகளைப் பேசும் மக்களின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து உலகுக்கு எடுத்துக் கூறவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான வ.ஐ.. சுப்பிரமணியத்தின் முயற்சியால் திராவிடப் பல்கலைக் கழகம் உருவானது.
தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் நிதியுதவியால் இந்தப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் பருகூர் பகுதியில் ‘திராவிடப் பல்கலைக்கழகம்’ ஏற்படுத்த அப்போதைய தமிழக முதல்வர் செயலலிதாவை அணுகித் திட்டமிட்டார் வ.ஐ.. சுப்பிரமணியம்.
தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம் ஆகிய மூன்று மாநில எல்லைகளும் ஒன்று சேரும் பகுதியாக இருப்பதால் பருகூர் பகுதியை வ.ஐ..சுப்பிரமணியம் தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக்க் கூறப்படுகிறது. பிறகு அவரது முயற்சி பல்வேறு அரசியல், நிருவாகக் காரணங்களால் தடைப்பட்டு கொண்டே வந்தது.
அதன்பிறகு 1995-ஆம் ஆண்டு அன்றைய ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவை அணுகித் “திராவிடப் பல்கலைக்கழகம்’ அமைக்க வேண்டியதன்இ ன்றியமையாமையை எடுத்துக் கூறினார்.
உடனடியாக அதனை ஏற்றுக் கொண்ட என்.டி.ராமராவ், தனது அமைச்சரவையில் இருந்த சந்திரபாபு(நாயுடு)விடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.அமைச்சர் சந்திரபாபு(நாயுடு) தனது சொந்தத் தொகுதியான குப்பத்தில் “திராவிடப் பல்கலைக்கழகம்’அமைய ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார். அதற்காக அவர் குப்பம் நகரிலிருந்து 8  புதுக்கல். தொலைவில் உள்ள திருமலை திருப்பதி தேவத்தானத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ 1,400 காணி(ஏக்கர்) நிலத்தைப் பெற்றுத் தர முன் வந்தார்.
திராவிடப் பல்கலைக்கழகம் அமைய உள்ள இடத்துக்கு ‘சிரீ நிவாச வனம்’ என அழைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமலை திருப்பதி தேவத்தானம் நிலத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு 1997-ஆம் ஆண்டு திராவிடப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதன் இணைவேந்தராக வ.ஐ.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவருக்கு நிருவாக முறையில் உதவிகள் புரிய ஆந்திர அரசில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த காசிப் பாண்டியன் இ.ஆ.ப. நிருவாக அலுவலராக நியமிக்கப்பெற்றார். திராவிடப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள முதன்மைச்சாலைக்குக் ‘காசிப் பாண்டியன் சாலை’ எனப் பெயர் சூட்டப்பட்டு வழக்கத்தில் உள்ளது.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திராவிடப் பல்கலைக்கழகம் வளர்ந்து வந்தாலும், திராவிடப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இருந்து வரும் தமிழ்த்துறையின் வளர்ச்சியோ தேய்ந்து வருகிறது. 
திராவிடப் பல்கலைக்கழகத்தில் தெலுங்கு மொழி இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு பயில்வோருக்கும், மற்ற துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கல்வி கட்டணம் முதலான பல்வேறு சலுகைகள், கல்வி உதவித் தொகை எனப“ பல்வேறு உதவிகளை வழங்கி ஆந்திர மாநில அரசு உயர்கல்வி பயில்வோரை ஊக்குவித்து வருகிறது.
திராவிடப் பல்கலைக்கழகத்தில் தற்போது பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 2 ஆயிரம் ஆகும். இந்நிலையில், தமிழ்த்துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு பயில்வோர் எண்ணிக்கை முப்பது முதல் நாற்பது மாணவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழ்த் துறையில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் பயில பல்வேறு பிரிவுகள் உள்ளன. பல்கலைக்கழகம் அமைந்து உள்ள குப்பம் தொகுதியில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். அதேபோல் குப்பம் தொகுதியை ஒட்டிய தமிழக எல்லை மாவட்டங்களாகக் கிருட்டிணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்கள் உள்ளன. அண்டை மாநிலமான கருநாடகத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயல், பங்காருப்பேட்டை, மாலூர், முல்பாகல் பகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும் உள்ளனர். இவர்கள் யாரும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில முன் வருவதில்லை.
 திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயிலும் ஒரு சில மாணவர்களின் கல்வி கட்டணச் சலுகைகள் பெறுவதற்குக் கூட தமிழக அரசின் தலைமைச் செயலகம் வரை சென்று போராடி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளதாகப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பணி புரிவோர் கவலை தெரிவிக்கின்றனர். இதற்குப் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதாகவும், காலத்தாழ்ச்சி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் வழியில் உயர்கல்வி பயில்வோருக்கு கல்விச் சலுகைகள், இரு மாநில எல்லைகளில் பயணம் செய்யும் பேருந்துகளில் கட்டணச் சலுகை, தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பழங்குடி மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்விச் சலுகைகள் தமிழக அரசு முறையாக வழங்கினால் தென்னிந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட திராவிடப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியும் தலை நிமிர்ந்து நிற்கும். இல்லையேல் திராவிடப் பல்கலைக்கழகத்தில் “மெல்ல தமிழ் இனிச்சாகும் ‘ என்ற நிலை ஏற்பட்டுவிடும் எனத் தமிழார்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே ஆந்திர மாநிலத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க தேவையான கல்வி உதவித் தொகைகளையும், பேருந்து கட்டணச் சலுகைகளையும் விரைந்து வழங்க நடைமுறைகளை எளிமைப்படுத்தி, காலத்தாழ்ச்சியைத் தவிர்க்கத் தமிழக அரசு  விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் மாணவர்கள் சேர ஊக்கப்படுத்த வேண்டும். திராவிடப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் பெரிய அளவில் விளம்பரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
4 உதவிப் பேராசிரியர்களுக்கான சம்பளம் வழங்கக் கோரிக்கை: திராவிடப் பல்கலைக்கழகத்தில் 4 உதவிப் பேராசிரியர்கள் பணியிடம் தமிழக அரசின் உத்தரவாதத்தால் உருவாக்கப்பட்டது. அந்த 4 உதவிப் பேராசிரியர்களுக்கான சம்பளத்தைத் தமிழக அரசு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் 2 உதவிப் பேராசிரியர்கள் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டது.
ஆனால் சில ஆண்டுகள் மட்டுமே அந்த 2 பேராசிரியர்களுக்கும் தமிழக அரசு ஊதியம் வழங்கியது. பின்னர் அதற்கான நிதியை தமிழக அரசு வழங்காமல் விட்டு விட்டது. அதனால் அந்த 2 உதவிப் பேராசிரியர்கள் சம்பளம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டபோது பல்கலைக்கழக நிருவாகம் மாற்று ஏற்பாடு மூலம் ஆந்திர அரசு நிதியிலிருந்து அவர்களுக்குச் சம்பளம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திர அரசால் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசின் நிதியிலிருந்து தமிழ்த் துறையில் 2 உதவிப் பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் திராவிடப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட 4 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்கிச் சரியான நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், தமிழார்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பிற துறை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை பெறுவது கேள்விக்குறி: தமிழகத்திலிருந்து சென்று திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை தவிர்த்து மற்ற துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைப்பதில்லை. தமிழகத்திலிருந்து சென்று திராவிடப் பல்கலைக்கழகத்தில் மற்ற துறைகளில் கல்வி பயில வருபவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடையாது என ஆந்திர அரசு வழங்க மறுக்கிறது. அதே போலத் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்குச் சென்று தமிழைத் தவிர மற்ற துறைகளில் பயிலக் கல்வி உதவித் தொகை வழங்க இயலாது எனத் தமிழக அரசும் மறுப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையின்போது இடம் கிடைக்காதவர்கள் திராவிடப் பல்கலைக்கழகத்தில் சென்று சேருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்காமல் போனால் அவர்கள் கல்வி கற்பதில் இன்னல் ஏற்படுகிறது. எனவே திராவிடப் பல்கலைக்கழகத்தில் மற்ற துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் கல்வி உதவித் தொகையைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 இதுகுறித்துப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் விவேகானந்த கோபால் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழ்த் துறையில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தமிழக அரசிடமிருந்து கிடைக்காமல் இருந்தது. பெருமுயற்சிக்குப் பிறகு தற்போதுதான் 2 ஆண்டுகளுக்கான கல்வி உதவித் தொகை கிடைக்கப் பெற்றோம். நடப்பாண்டுக்கான கல்வி உதவித் தொகைக்குத் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளோம் என்றார் அவர்.
 எம். அருண்குமார்
தினமணி 11.12.2017