புதன், 8 நவம்பர், 2017

Uprooted Valikaamam people launch new protest demanding release of lands

Uprooted Valikaamam people launch new protest demanding release of lands


The uprooted people of Vasaavi'laan and Palaali South in Valikaamam North took the streets amidst pouring rains on Sunday to protest against the position of the occupying SL military that no more lands would be released from the Sinhala Military Zone surrounding the Palaali military base for the next two years. People demanded immediate answer from SL President Maithiripala Sirisena, who is also the Commander-in-Chief of the SL armed forces on the release of their lands. The protest saw hundreds of people emotionally articulating their demands. 


The uprooted people complained that a one-year-long negotiation process with the SL establishment has failed to give any results and that their lands are being exploited by the Sinhala military as farmlands. 

Some families also complained that the SL military was housing its families from South as their guests in the houses of the uprooted people. 


Valikaamam North



The SL military is still putting up constructions in the lands seized from the people, they complained. 

The Northern commander of the occupying SL military, Major General Darshana Hettiarachchi, was present at the archway entrance to the Sinhala military settlement at Palaali. 

His predecessor, Lieutenant General Mahesh Senanayake, who became the commander of the SLA earlier this year, was instrumental in deceiving the struggle of the uprooted Tamils before his promotion. 

Apart from Mahesh Senanayake, ITAK Leader Mavai Senathiraja was also behind suppressing the struggle of the uprooted people, the protesters said. 

ITAK or TNA parliamentarians failed to attend the protest. 

In the meantime, ruling UNPFA ‘national list’ parliamentarian Angajan Ramanathan was present. Angajan received the appeal from the people and handed it over to SL military commander Darshana Hettiarachchi who received it with a pitying facial expression. 


Valikaamam North



Related Articles:


Chronology:

செவ்வாய், 7 நவம்பர், 2017

தனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்

     05 நவம்பர் 2017      கருத்திற்காக..


 பெட்டகம்

தனிமங்கள்(Chemical Elements)

 அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும்.
  இயல்பான நிலையில் தனிமங்கள்  திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா.  (அ.) மாழை: அதள்(பாதரசம்); (ஆ.) அல்மாழை: செந்நீர்மம் (புரோமின்)], சில வளிநிலையிலும் (எ.கா.  உயிர்வளி) உள்ளன.
 இயற்கையில் பல தனிமங்கள், வேறு சில தனிமங்களுடன் சேர்ந்தே கிடைக்கின்றன. இவ்வாறு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து சேர்ந்த கலவை சேர்மம் எனப்பெறும்.
 அதே போல் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட  தூய பொருள்கள் வீத அளவின்றிச் சேருவது கலவை.
 தனிமத்தின் மிக மிகச்சிறிய அலகுதான் அணு எனப்பெறுகிறது. அணுவானது முன்னணு(புரோட்டான்),  நள்ளணு(நியூட்ரான்),  மின்னணு( எலக்ட்ரான்) போன்ற நுண்ணிய அணுத்துகள்களாகப் பிரிக்கப்படக் கூடியது.
 இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை (molecules) உண்டாக்குகின்றன.
 அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்காமல் தனித்த நிலையில் உள்ள அணுக்களை அடிப்படை அலகுகளாகக் கொண்ட  தனிமங்கள் உள்ளன. இவை  ஓரணுத் தனிமங்கள் ஆகும்.
 இவற்றுள் ஒரே வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளை உடையது தனிமம்.
 வெவ்வேறு வகை அணுக்கள் சேர்ந்த மூலக்கூறுகளைக் கொண்டது சேர்மம்.
 ஒரு தனிமத்தின் அணுவின் உட்கருவில் உள்ள முன்னணுக்களின்(புரோட்டன்களின்) எண்ணிக்கையைக் குறிப்பது அணு எண் எனப்பெறும். தனிமங்களின் பெயர்கள் அணு எண்களின் வரிசைக்கு ஏற்பவும் அணுநிறைகளின் வரிசைக்கு ஏற்பவும் அகர வரிசைப்படியும் அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு நாம், அணு எண் நிரல்படி அட்டவணையைப் பார்ப்போம்.
 தனிமத்தின் பெயர்களுள் பல இலத்தீன், கிரேக்கம் முதலிய மொழிச் சொற்களாகும்.  கண்டறிந்த வல்லுநர்களின் பெயர்கள், கண்டறிந்த இடங்களின் பெயர்கள், பிற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் என்ற முறையில் பல பெயர்கள் அமைந்துள்ளன. இப் பெயர்களில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் உருவாக்கப்பட்டதே வேதியல் குறியீடு ஆகும்.  நாம் ஏன் இவற்றைத் தமிழில் குறிப்பிட வேண்டும் எனச் சிலர் வினவலாம். தமிழில் படித்தால்தான் நன்கு புரிந்து கொள்ளவும் உள்ளத்தில் பதிந்து  கொள்ளவும்  இயலும். தொடக்க நிலையில் தமிழிலும் பின்னர் அடைப்பிற்குள் உள்ள பன்னாட்டு முறையையும் தெரிந்து கொள்வதே நலமாகும்.
தனிமங்களின் அட்டவணை
அணு  எண்   தனிமம் குறியீடு அணுநிறை
1 நீர்வளி (Hydrogen) நீ (H) 1.00797
2 கதிர்வளி (Helium) க (He) 4.0026
3 கல்லம் (Lithium) கல் (Li) 6.94
4 குருகம் (Beryllium) கு (Be) 9.0122
5 பழுப்பம் (Boron) ப (B) 10.811
6 கரிமம் (Carbon) கரி (C) 12.011
7 வெடிவளி (Nitrogen) வெ (N) 14.0677
8 உயிர்வளி (Oxygen) உ (O) 15.994
9 பைம்மஞ்சள்வளி (Fluorine) பை (F) 18.9984
10 புத்தொளிரி (Neon) பு (Ne) 20.1797
11 வெடிமம் (Sodium) வெடி (Na) 22.9898
12 வெளிமம் (Magnesium) வெளி (Mg) 24.312
13 ஈயம் (Aluminium) ஈம் (Al) 26.98
14 கன்மம்  (Silicon ) கன் (Si) 28.086
15 எரிமம் (Phosphorous) எ (P) 30.974
16 கந்தகம் (Sulfur) கக (S) 32.064
17 பாசிகம் (Chlorine) பா (Cl) 35.453
18 மடியன் (Argon ) மடி (Ar ) 39.9
19 சாம்பரம் (Potassium ) சா (K ) 40.1
20 சுதைமம் (Calcium) சு (Ca) 45.0
21 ‘காண்டிமம்’ (Scandium ) கா (Sc ) 44.956
22 கரும்பொன்மம் (Titanium ) கரு (Ti) 47.9
23 வெண்ணாகம் (Vanadium ) வெக(V ) 50.942
24 குருமம் (Chromium ) குரு (Cr ) 51.996
25 மங்கனம் (Manganese ) மங் (Mn ) 54.938
26 இரும்பு (iron) இரு (Fe ) 55.847
27 வண்ணிமம் (Cobalt) வண் (  Co) 58.933
28 வெள்ளையம் (Nickel ) வெய (Ni i ) 58.91
23 செம்பு (Copper ) செ (Cu ) 63.5
30 துத்தநாகம் (Zinc ) து (Z n) 65.4
31 நரைமம் (Gallium ) ந (Ga) 69.72
32 ‘செருமம்’ (Rubidium ) செரு (Rb) 72.59
33 சவ்வீரம் (Arsenic ) ச (As) 74.9
34 மதிமம் (Selenium) நி (Se) 78.96
35 செந்நீர்மம் (Bromine) செநீ (Br) 79.904
36 மறைவளி (Krypton) மறை (Kr) 83.80
37 செவ்வரிமம்(Rubidium) செம் (Rb) 85.47
38 வெண்ணிமம்(Stronium) வெணி(Sr) 87.62
39 கருநரைமம்(Yttrium) கந (Y) 88.905
40 வண்மம்(Zirconium) வம(Zr) 91.22
41 அருமிமம்(Niobium) அரு (Nb) 92.906
42 முறிவெள்ளி(Molybdenum) மு(Mo) 95.94
43 செயற்கைத்தனிமம்(Technetium) செய(Te) 97.9072
44 சீர்பொன்(Ruthenium) சீர்(Ru) 101.07
45 திண்ணிமம்(Rhodium) திண்(Rh) 102.90550
46 பொன்னிமம்(Palladium) பொம்(Pd) 106.42
47 வெள்ளி(Silver) வெள்(Ag) 107.8682
48 வெண்ணீலிமம்(Cadmium) வெநீ(Cd) 112.44
49 நீலவரிமம்(Indium) நீவ(In) 114.8182
50 வெள்ளீயம்(Tin) வெஈ(Sn) 118.710
51 நொய்ம்மிமம்(Antimony) நொ(Sb) 121.760
52 ஒளிர்மம்(Tellurium) ஒ(Te) 127.60
53 கருமயிலம்(Iodine) கம(I) 126.90447
54 அயலிமம்(Xenon) அய (Xe) 131.30
55 நீலநீறிமம்(Cesium) நீநீ(Cs) 132.90543
56 மங்கிமம்(Barium) ம(Ba) 137.327
57 ஊக்கிமம்(Lanthanum) ஊ(La) 138.9055
58 நெகிழிமம்(Cerium) நெ(Ce) 140.115
59 வெண்மஞ்சை(Praseodymium) வெம(Pr) 140.90765
60 புதுமஞ்சை(Neodymium) புமNd) 144.24
61 கதிர்மம்(Promethium) கம்(Pm) 144.9127
62 வெண்நரைமம்(Samarium) வெந(Sm) 150.35
63 ‘ஐரோப்பிமம்’ (Europium) ஐ(Eu) 151.965
64 காந்தனிமம்(Gadolinium) காம் (Gd) 157.25
65 விளர்மம்(Terbium) விள(Tb) 158.92534
66 உறிமம்(Dysprosium) உறி(Dy) 162.50
67 ‘ஓல்மிமம்’(Holmium) ஓ(Ho) 164.93032
68 ‘எர்பிமம்’ (Erbium) எர்(Er) 167.26
69 வடமம்(Thulium) வ(Tm 168.93421
70 ‘எட்டர்பிமம்’(Ytterbium) எம் (Yb) 173.04
71 மஞ்சிமம்(Lutetium) மம் (Lu) 174.967
72 ‘ஆஃப்னிமம்’(Hafnium) ஆஃப்(Hf) 178.49
73 வெம்மம்(Tantalum) வெம்(Ta) 180.9479
74 மின்னிழைமம்(Tungsten) மி(W) 183.84
75 அரிமம்(Rhenium) அரி(Re) 186.207
76 விஞ்சிமம்(Osmium) விம்(Os) 190.2
77 உறுதிமம்(Iridium) உறு(Ir) 192.217
78 வன்பொன்(Platinum) வ.பொ.(Pt) 195.08
79 தங்கம்(Gold) த(Au) 196.95654
80 இதள்(Mercury) இத(Hg) 200.59
81 சாம்பிமம்(Thallium) சாம்(Ti) 204.3833
82 காரீயம்(Lead) காரீ(Pb) 207.2
83 நிமிளை(Bismuth) நிமி(Bi) 208.98037
84 மஞ்சளம்(Polonium) மள்(Po) 208.9824
85 நொறுங்கிமம்(Astatine) நொறு(At) 209.9871
86 கதிரம்(Radon) கர(Rn) 222.0176
87 ‘விரெஞ்சிமம்’(Francium) விரெ(Fr) 223.0197
88 கதிரிமம்(Radium) கதி(Ra) 226.0254
89 கதிர்வினைமம்(Actinium) கவி(Ac) 227.0278
90 சுடரிமம்(Thorium) சுட(Th) 232.0381
91 புறக்கதிரம்(Protactinium) புற(Pa) 231.0388
92 விண்ணிமம்(Uranium) விண்(U) 238.0289
93 சேண்மிமம்(Neptunium) சேண்(Np) 237.0482
94 சேணாமம்(Plutonium) சேய்(Pu) 244.0642
95 ‘அமரிக்கம்’(Americium) அமெ(Am) 243.0614
96 ‘கியூரிமம்’(Curium) கியூ(Cm) 247.0703
97 ‘பெரிக்ளிமம்’(Berkelium) பெரி(Bk) 247.0703
98 ‘கலிபோரிமம்’(Californium) கலி(Cf) 251.0796
99 ‘ஐன்சுதீனம்’(Einsteinium) ஐன்(Es) 252.083
100 ‘வெரிமம்’(Fermium) வெர்(Fm) 257.0951
101 ‘மெந்தலீமம்’ (Mendelivium) மெம் (Md) 258.10
102 ‘நோபிளம்’(Nobelium) நோ(No) 259.1009
103 ‘இலாரன்சம்’(Lawrencium) இலா(Lr) 262.11
104 ‘உருத்தரம்’(Rutherfordium) உரு(Rf) 261
  தனிமங்களின் தன்மை, நிறம், கண்டறியப்பட்ட இடம்,   மிகுதியாய்க் கிடைக்கும் இடம், அறிஞர் பெயர் முதலியவற்றின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டவாறே தமிழிலும் தரப்பட்டுள்ளன. எனினும் ஒற்றை மேற்கோளுக்குள் சாய்வெழுத்துகளில் அடங்கியவை பன்னாட்டு முறையிலேயே அளிக்கப்பட்டுள்ளன. இவை நம்நாட்டில் கிடைக்கக்கூடிய இடங்களில் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. பிற அறிவியல் தமிழ் அகராதிகளில் உள்ளவற்றை விடமிகுதியாகத் தமிழில் குறிக்கப்பெற்றுள்ளன. நண்பர் ஒருவர் புதுச்சேரியில் அறிஞர் ஒருவர் தனிமங்களைத் தமிழில் குறிப்பிட்டுள்ளாரே. பார்க்கவிலலையா?  புதியன ஏன்? என்றார். அக்கையேடு கிடைக்கவில்லை. எனினும் பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்தில் உள்ள பட்டியலைப் பார்த்தேன். இப்பட்டியல்தான் தனி நூல் வடிவம் பெற்றிருக்கும் எனக் கருதுகிறேன். இவ்வட்டவணைக்கும் பல்கலைக்கழக அட்டவணைக்கும் ஒரு பகுதி ஒற்றுமை உள்ளது. ஆனால், தமிழில் குறிக்க இயலாதபொழுது அறிவியல் பெயர்களை அயல்மொழி என உணரும் வண்ணமே குறிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தமிழ் எனத் தவறாக உணரும் வண்ணம் குறிக்கக் கூடாது. பல்கலைக்கழக அட்டவணை அவ்வாறுதான் உள்ளது. சான்றாக அலுமினியம் என்பது அளமியம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள் நல்ல தமிழ்ப்பெயர் என நம்பும் மாயை உள்ளது, உண்மையில் அலுமினியத்திலுள்ள முதல் நான்கு எழுத்துகள் (ALUM)அளம்; என ஒலிப்பிக்கப்பட்டு அளம் + இயம் =  அளமியம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இதுபோல்தான் அப்பட்டியலில் நாற்பதுக்கும் மேற்பட்ட தனிமங்கள் பெயர்கள்  தமிழ் வடிவ ஒலி பெயர்ப்பில் குறிக்கப் பட்டுள்ளன. எனவே அவை செம்மையை எதிர்நோக்கிய இடைக்கால ஏற்பாடாகத்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம்.  மேலும் கடோலின் என்னும் அறிஞர் பெயர் சுட்டப்பெற்ற ‘கடோலின்’ என்பதைக்  god – கடவுள் எனக் கொண்டு கடவுளியம் எனக் கூறியுள்ளதும் பொருந்தாது. எனவே பிற தமிழ் வடிவம் கண்டு குழம்ப வேண்டா.
இங்கே 104 தனிமங்கள் குறிக்கப் பெற்றுள்ளன. இப்பொழுது 118   தனிமங்களைக் கண்டறிந்துள்ளனர். எஞ்சியன  குறித்துப் பிறிதோர் சமயம் காணலாம்.
 – இலக்குவனார் திருவள்ளுவன்
  • புதிய அறிவியல் (New Science)  09.2012

இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை




இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை
கார்த்திகை 22, 23& 24, 2048  /  8,9,10 திசம்பர் 2017
இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம்

பேரன்புடையீர்,
வணக்கம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை இவ்வாண்டு மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
மாநாட்டின் முதன்மைக் கருப்பொருள்:
இரட்டைக் காப்பியங்கள்
துணைக் கருப்பொருள்:
1. இரட்டைக் காப்பியங்களில் வெளிப்படும் மனிதநேயம்
2. காப்பியங்களில் முற்போக்குச் சிந்தனைகள்
3. காப்பியங்களில் காணப்படும் மேலாண்மைக் கருத்துகள்
4. காப்பியங்களில் காணப்படும் சமூகச் சீர்த்திருத்தங்கள்
5. காப்பியங்களில் காணப்படும் சமூக ஒருமைபாடு
6. காப்பியங்களுக்கான சமூகப் பின்புலம்
7. காப்பியங்களில் காணப்படும் பெண்களின் எதிர்காலவியல்
8. மொழியியல் நோக்கில் காப்பியங்கள்
9. காப்பியங்களுக்குத் தரவக உருவாக்கம்
10. காப்பியங்களைப் பயிற்றுவிக்கும் முறை
11. காப்பியங்களை ஆவணப்படுத்துதல்
12. காப்பியங்களில் காணும் பண்பாடு
13. உளவியல் நோக்கில் காப்பியங்கள்
14. காப்பியங்களில் அரசியல்
15. காப்பியங்களில் சமயக் கோட்பாடுகள்
16. காப்பியங்களில் அறிவியல் சிந்தனைகள்
இவை போல இன்னும் பிற

ஆய்வுக் கட்டுரைகள் இக்கருப்பொருளைக் கொண்டே அமைந்திருக்க வேண்டும். மாநாட்டின் முழுக் கட்டுரையையும் ஐப்பசி 30, 2048 / 15 நவம்பர் 2017 ஆம் நாளுக்குள் 5-6 பக்கத்திற்குள், ஏற்பாடு குழுவினரிடம் அனுப்பிவிட வேண்டும். (அழைப்பிதழில் நவம்பர் 3 என்று உள்ளது.)
ஆய்வுக் கட்டுரையைப் பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
தொடர்பிற்கு : –
தமிழ்த்திரு தனேசு பாலகிருட்டிணன் – +6014-327 9982
பேராசிரியர் முனவர் சு.குமரன் – +6012-312 3753
பேராசிரியர் முனைவர் அ.காமாட்சி – +91 94 42022507
முனைவர் கா.உமராசு – +91 94 87223316
முனைவர் பா.தேவகி – +91 97 1000 7577

எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!



எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!


 திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில்  இயற்கை எய்தினார்.
[சில நினைவுகள்:
அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன்.
அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி  கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல் முன்னால் சிரித்துக்கொண்டு பின்னால் எதிராகச் செயல்படுவார்கள்” எனக் கூறி அவர் செய்து வரும் பணிகளைக் கூறினார். நான் அதற்கு, “உங்கள் பணிகளை உலகறியும். உங்களின் மூவாண்டு முனைப்புத்திட்டம் போன்றவை சிறப்பானவை. ஆனால், களத்தில் இருந்து பொதுவாக இதற்கு முன்பிருந்த நிலைகளின் அடிப்படையில் கூறுகிறேன்” என்றேன். பிறகு என் கருத்துகளையும் கேட்டு இனி நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார்.
  புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் ‘தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில்,  ‘ஆட்சிமொழிச் செயலாக்கம்-ஓர் இனிய கனவு’ என்னும் என் கட்டுரையைப் பாராட்டினார். உடன், அவர், “உங்களுக்கு ஏன் உலகமே அழிவது போன்ற அவநம்பிக்கை உள்ளது. காலம் மாறும். கவலைப்படாதீர்கள்” என்றார்.
 ஒரு முறை கருத்தரங்க நிகழ்வு ஒன்றின் பொழுது நானும் அவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். நான் அடிக்கடி வேட்டியைச் சரி செய்வது குறித்து அவர்,  “நான் ஒரு முறை வேட்டி கட்டினால் நாள் முழுவதும் அவிழாமல் இருக்கும்” என்று சொல்லி,  எவ்வாறு அவிழாமல் வேட்டி அணிய வேண்டும் என்று சொல்லித்தந்தார்.
 குமரி மாவட்டம் காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியர்சிலை அமைப்புபப்பணி நடைபெற்ற பொழுது சிற்பியின் கூடத்திற்கு நேரில் வந்து வேட்டி எவ்வாறு சிற்பத்தில் காணப்பட வேண்டும், எழுத்தாணி எவ்வாறு பிடிப்பதாக அமைய வேண்டும் என்பன போன்ற கருத்துகளைத் தெரிவித்தார்.
  இதழ்களில் வரும் என் செவ்விகள், கட்டுரைகள் குறித்து அவ்வப்பொழுது,  “எங்கள் பணிகளை நீங்கள்தான் தொடருகிறீர்கள்” எனக் கூறிப் பாராட்டுவார்.
 அவரது மருகர் செம்மல்  (முன்பே அறிமுகமாகியிருந்தாலும்) 1990 இலிருந்தே  நண்பரானவர். தினமணியில் என்னைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரை  வந்த பின்னர்,  மேலும் நெருக்கமானவர்.) அவ்வப்பொழுது அவர்மூலம்தான் நன்னன் ஐயா பற்றி அறிந்து கொள்வேன். நான் அனுப்புகம் கட்டுரைகளை அவருக்குப் படித்துக்காட்டி ஐயா கூறும்  செய்திகளையும் என்னிடம் தெரிவிப்பார்.
  இவையாவும் பழகுவதில் எளியவரான  பண்பாளர் நன்னன் ஐயா அவர்களின் நினைவை எப்பொழுதும் சுமக்கச் செய்யும். ]
 குடும்பத்தினருக்கும்  உற்றார் உறவினருக்கும் அகரமுதல மின்னிதழ் சார்பிலும் தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 அவர் பற்றிய குறிப்பபை விக்கிபீடியாவில் காண்க

மா. நன்னன்

https://ta.wikipedia.org/s/pkp


திங்கள், 6 நவம்பர், 2017

Student struggle should address external agenda-setters

Student struggle should address external agenda-setters



The ITAK hierarchy of the Tamil National Alliance (TNA), which is led by Opposition Leader R. Sampanthan and M.A. Sumanthiran, has been unconditionally supporting the budget of genocidal Sri Lanka for the past two years. It is the agenda behind the external powers and global financial outfits such as the World Bank, which directs the collaborating polity of the TNA. The ITAK collaborators receive their instructions from the soft-power players of the US Bandwagon. India is also part of it. The ITAK collaborators have succumbed to the external agenda to a Quisling level. They are not even prepared to negotiate with the agent State in Colombo, said student political observers at the University of Jaffna who witnessed the interactions between the student leaders and the ITAK in the discourse of addressing the struggle of Tamil political prisoners. 



Mr Sumanthiran who receives instructions from outside agenda-setters was not prepared to come to an open meeting with the student leaders on Friday. 



On Saturday, the three Tamil political prisoners who have been waging a hunger strike for 38 days on Saturday called off their fast-unto-death campaign after a delegation of Jaffna University Student Union accompanied by a group of politicians met the prisoners and took responsibility for advancing their struggle. The families of hunger-striking prisoners were also present. 



The student leaders said they would take forward the struggle through informing the people at grassroots level, strengthening the foundations for waging a public pressure through village to village information campaign and exerting pressure on Tamil politicians to subject the release of political prisoners as a matter of negotiations in the budget-debate. 



In the meantime, serious questions have arisen whether the struggle-centric NPC Councillor M.K. Shivajilingam has also succumbed to a “coconut breaking politics” for the same external agenda setters, the student community watching the discourse further said. (Mr Shivajilingam took to Nalloor temple breaking hundreds of coconuts during the US presidential elections praying Nalloor Murkan in support of Ms Hillary Clinton.)



The student leaders said they are planning to advance the cause of freeing Tamil political prisoners through mobilising the masses and demanding a cross party political group including ITAK representation, to negotiate with the SL State the release of Tamil political prisoners. 



In the meantime NPC councillor M.K. Shivajilingam has stated that he was promoting an appeal process as well as negotiations with the SL State. The Governor to Northern Province Reginald Cooray has been in touch with Mr Shivajilingam and asked for another 15 days time promising action from SL President. 



The tactic of SL President is to contain the struggle of Tamil students through the SL Governor in North, the student observers have cautioned. 



Genocidal Sri Lanka that talks of ‘good governance’ and ‘reconciliation’ and the so-called International Community promoting Colombo-centric paradigm have not even prepared to recognise the status of the Tamil POWs as political prisoners. 



The SL State categorises the Tamil POWs as ‘Terrorists’ under the notorious Prevention of Terrorism Act and Emergency Regulations while UN High Commissioner of Human Rights Prince Zeid, alleged of serving the interests of the same agenda-setters, has gone on record insulting the Tamil POWs as ‘security detainees’.



Those behind the protests should first realise where they need to address their demands, the observers further commented expressing hope that student leaders in Jaffna University have grasped the logic as they have put forward the demand to ITAK leadership to subject the release of Tamil political prisoners as a condition before extending any support to the budget. 



The agent State in Colombo has allocated 290.7 billion rupees for the military in the budget for 2018, reports in Colombo press said. For comparison, the budget for 2009 when the war at its highest peak, was only at 158 billion rupees. 



The SL regime is scheduled to present the 2018 Budget on 9 November followed by five days of debate after the second reading on 10 November.





Chronology:

மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார்

தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார்.
அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?”
அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்”
சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன்.
“இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார் அவர்.
ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது.
 முனைவர் மு.வரதராசனார், பேராசிரியர் அப்பாதுரையார், பேராசிரியர் கே.கே.பிள்ளை போன்ற அறிஞர்கள் பெயர்களைச் சொன்னால் புரிந்து கொள்கிறார்கள். முனைவர்  மா.இராசமாணிக்கனார், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், ஔவை துரைசாமி ஆகியோரைக் கொஞ்சம் இடைவெளி விட்டாவது புரிந்து கொள்கிறார்கள்.
  பெருமழைப் புலவர், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, கரந்தை உமாமகேசுவரனார் போன்ற அறிஞர் பெருமக்களை இன்றைய தமிழ் மன்பதை மறந்துவிட்டது அல்லது மறந்து கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
  அந்த வரிசையில் பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனாரும் இருக்கிறார்
 சென்னையில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரிகளுள் ஒன்று சென்னைக் கிருத்துவக் கல்லூரி. சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் இக்கல்லூரி இருக்கிறது. இக்கல்லூரியின் தமிழ்ப் பேரவை சார்பில் ஒரு கூட்டம் 21.10.1961 அன்று கல்லூரியில் நடைபெற்றது.
  இக்கூட்டத்தில் சிறப்புரையாளர், அறிஞர் அண்ணா அவர்கள். தலைமை, பேராசிரியர் கேதாரநாதன்’ வரவேற்புரை ஆலாலசுந்தரனார்; இவர்தான் இக்கூட்டம் நடைபெற மூல காரணமானவராக இருந்தவர்.
 இந்தக் கூட்டத்தில்தான் அண்ணா பேசுவதற்குத் ‘தலைப்பு இல்லை’ என்று கூட்ட ஏற்பாட்டாளர் சொல்ல, அண்ணா அதையே தலைப்பாகப் பேசினார்.  இதோ-
 “மாணவர் தலைவரிடம் நான் என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று கேட்டேன். எனக்குத் தலைப்பு இல்லை என்றார். எனவே தலைப்பு இல்லை என்பதையே தலைப்பாக்கிக் கொண்டு உங்களுடன் உரையாட விழைகிறேன்.
“எனது நண்பரான உங்கள் பேராசிரியர் ஆலாலசுந்தரனார் என் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு என் இடப்புறக் (இடதுசாரி) கருத்துகள் மிகவும் பிடிக்கும். அவருக்கும் எனக்கும் ஏறத்தாழ 30 ஆண்டு கால நட்பு என்பதை இம் மாமன்றத்தில் சொல்வதில் அகம் மகிழ்கிறேன். சிறந்த தமிழ்க் கல்வியைத் தமிழ்ப் பற்றோடு, தமிழ்ப் பண்போடு, தாம் கற்ற கல்வியை மற்றவர்களுக்குப் பயிற்றுவிக்கின்ற பெரும்பணியில் ஆலாலசுந்தரனார் ஈடுபட்டிருக்கிறார் என்பதைக் கண்டு பூரிப்படைகிறேன்” என அறிஞர் அண்ணாவால் பாராட்டப் பெற்றவர் பேராசிரியர் ஆலாலசுந்தரனார் அவர்கள்.
  இவரின் தாயார் இராசம்மாள். தந்தையார் வேலு (செட்டியார்). ஐப்பசி 20, 1938 / 1907ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 5ஆம் நாள் இவர் பிறந்தார்.
  1917 தொடக்கம் 1927ஆம் ஆண்டுவரை இவர் சென்னை முத்தியால் பேட்டை உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 1927ஆம் ஆண்டு இவர் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் சிறந்த மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.
 இவரின் கல்லூரிக்காலத் தோழர்களாக இருந்தவர்கள் அறிஞர் அண்ணா, நடேச (முதலியார்), அப்பாண்டை இராசா ஆகியோர்.
  அன்றைய காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புப் பாடப்பிரிவு தொடங்கப்படவில்லை. அதனால் அக்கல்லூரியின் முதல்வர் சின்னதம்பி(ப்பிள்ளை) சுந்தரனாருக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அவரைஅனுப்பி வைத்தார்.
  பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்த அவரின் தமிழ்ப் புலமை, ஆர்வம் ஆகிய பண்புகளைக் கண்டறிந்து, இவரின் கல்விச் செலவுக்குப் பெரிதும் உதவியவர், இராசா வயவர் எம்.ஏ.முத்தையா (செட்டியார் அவர்கள்) என்பது குறிப்பிடத் தக்கது.
  1932ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவைக்குச் செயலாளர் ஆனார். 1934ஆம் ஆண்டு அப்பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதைத் தொடர்ந்து முதுகலைப்பட்டமும் பெற்றார்.
 அக்காலத்தில் இன்றைய புகழ்பெற்ற சென்னைக் கிருத்துவக் கல்லூரி, சென்னை முத்தியால் பேட்டை, இலிங்கி செட்டித் தெருவில் இயங்கிவந்தது.
 கல்லூரி நடைபெற்ற அதே கட்டிட வளாகத்தில்தான், அக்கல்லூரியின் நிருவாகத்தின் கீழ்க் கிருத்தவ உயர்நிலைப் பள்ளியும் இயங்கிவந்தது.
 இங்கே ஆலாலசுந்தரனார் முதல் முதலாகத் தமிழாசிரியராகப் பணியேற்றார். பள்ளியும் கல்லூரியும் ஒரே கட்டிட வளாகத்தில் இருந்ததனால், தமிழ் மொழி ஆசிரியரான சுந்தரனார் பள்ளியிலும் கல்லூரியிலும் பாடம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
 அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட இவர், பள்ளிக்கூட இறுதியாண்டு மாணவர்களிடம், கல்லூரிக்கான புகுமுக வகுப்புப் பாடங்களையும் சேர்ந்து சொல்லிக் கொடுத்துள்ளார்.
  இந்நிலையில் இட நெருக்கடி காரணமாக, (சென்னை) முத்தியால் பேட்டையில் இருந்த கிருத்துவப் பள்ளியை அங்கேயே வைத்துக் கொண்டு, கல்லூரியை மட்டும், சென்னை கிருத்துவக் கல்லூரி என்ற பெயரில், சென்னையின் நுழைவு வாயிலாக இருக்கும் தாம்பரத்திற்கு மாற்றினார்கள்.
  இம்மாற்றத்தின் போது ஆலாலசுந்தரனாரும் தாம்பரம் கிருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.
  1951ஆம் ஆண்டு இவர் கல்லூரியின் பேராசிரியர் ஆனார். அதே ஆண்டு தமிழ்த்துறைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.
 1964ஆம் ஆண்டுத் தொடக்கம் 68ஆம் ஆண்டு வரை கல்லூரியின் தமிழ் மொழித்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று அரும் பணி ஆற்றியுள்ளார்.
 1968 தொடக்கம் 1973ஆம் ஆண்டு வரையும், இந்தியப் பல்கலைக் கழக நல்கைக்குழு ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றிய ஆலாலசுந்தரனார். 1973 முதல் 1980 வரை அக்கல்லூரியின் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
  அப்போது கிண்டியில் இருந்த கல்லூரி மாணவர் விடுதியில், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்று இலவசமாகத் திருக்குறள்திருவாசகம்கந்தரனுபூதி ஆகியவை குறித்தப் பாடங்களை நடத்தி இருக்கிறார்.
 அப்படி அவர் தொடர்ச்சியாகப் பாடம் நடத்தியது 15 ஆண்டுகள் என்பது குறிக்கத்தக்கது.
  1. இயற்றமிழ், 2. கட்டுரை விருந்து, 3. சுந்தரச் சொல்லோவியம், 4. சென்னை கந்தகோட்டத் தலபுராண உரை
போன்ற நூல்களை எழுதியதோடு, 80க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் இலக்கியக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.
  தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த மைசூர் செயசாமராச உடையாருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியரான பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் மறக்கக் கூடியவரா? அல்லது அவரை மறக்கத்தான் முடியுமா?
இன்று அவர் நம்மிடம் இல்லை.
 எழில்.இளங்கோவன்
04 நவம்பர் 2017