திங்கள், 5 ஏப்ரல், 2021

யாவரும் வாக்களிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல



யாவரும் வாக்களிப்பீர்! 

தேர்தல் நாள்: பங்குனி 24, 2052  /  ஏப்பிரல் 06, 2021

மக்களாட்சியில் நமக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆயுதம் வாக்குரிமை. இனி, ஐந்தாண்டுகளுக்கு நம்மை ஆள்வதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நம் வாக்குரிமையை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும். ஒருமுறை தவறு செய்தால் இந்த ஐந்தாண்டு மட்டுமல்ல, அதன் பாதிப்பு தொடர் ஆண்டுகளிலும் நமக்கு ஊறு செய்யும்.

எனவே, நாம் நாளை தவறாமல் வாக்குப்பதிவகங்களுக்குச் சென்று நமக்குரிய வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௪ – 504)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫கஎ – 517)

என்னும் திருக்குறள்களுக்கிணங்க நாம், நம் தொகுதிக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

என்ற போதிலும், எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும், யார் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறிப் பயனில்லை. ஏனெனில், வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க எப்பொழுதுமே முன் நிற்பார்கள். பிறர், அவர்களிலும் புதிய வாக்காளர்களில் பெரும்பான்மையர் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

நாம் அறிவுரை கூறுவதற்கு இது நேரமுமில்லை. தேர்தல் விதிகளுக்கு மாறானதுமாகும். எனவே, தகுதியானவர்கள் எனக் கருதுபவர்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். ஒருவேளை தெரிவு தவறாக இருந்தாலும் பரவாயில்லை. வாக்குரிமையைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.

 நாளை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளாவிலும் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்திலும் அசாமிலும் சில கட்டவாக்குப்பதிவுகள் முடிந்த பின்னர் அடுத்தக் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. பொதுத்தேர்தல் நடைபெறும் அனைத்துப் பகுதி வாக்காளர்களுக்கும் குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல்போல் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கும் நாம் விடுக்கும் வேண்டுகோள்

பயன்படுத்துவோம்! பயன்படுத்துவோம்!

    வாக்குரிமையைப் பயன்படுத்துவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல

 



ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

தொல்காப்பியர் நாள் அறிமுக விழா, வ.அ.த.ச.பேரவை

 அகரமுதல

பங்குனி 28, 2052 / 10.04.2021
சனி இரவு 6.00
தொல்காப்பியர் நாள் அறிமுக விழா
ஊசுடன் & தாெரண்டோ
தமிழ் இருக்கை நிதி திரட்டல் விழா

இயேம்சு வசந்தனின்
சங்க இலக்கியச் சேர்ந்திசை நிகழ்ச்சி

 



சனி, 3 ஏப்ரல், 2021

குவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021

 அகரமுதல


பங்குனி 22, 2052 / ஏப்பிரல் 04, 2021

ஞாயிறு மாலை 6.30

குவிகம் இணையவழி அளவளாவல்
குவிகம் இலக்கிய வாசல்

‘ஆயிசா’ இரா.நடராசன்:

தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்

 







கீதைப் பொழிவு 11.04.21இற்கு மாற்றப்பட்டுள்ளது.

 அகரமுதல




கீதைப் பொழிவு 11.04.21இற்கு மாற்றப்பட்டுள்ளது.

அன்புடையீர்,
வணக்கம்.
பங்குனி 22, 2052 / ஏப்பிரல் 04, 2021 அன்று நடைபெற இருந்த கீதைப் பொழிவு மருத்துவக் காரணங்களால் என்னால் பங்கேற்க இயலாமையால், அடுத்த வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பங்குனி 29, 2052 / ஏப்பிரல் 11, 2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094
புகு எண் / Passcode: 12345

இதன் தொடர்ச்சியாக 18.04.21 அன்று நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்ட ‘என்னூலரங்கம் 1’

வைகாசி 12, 2052 / 25.04.2021 ஞாயிறு காலை 10.00 மணிக்கு நிகழ்த்தப்பெறும் என்றும் தெரிவிக்கிறோம்.

தமிழ்க்காப்புக்கழகம்

வியாழன், 1 ஏப்ரல், 2021

போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை! – சமற்கிருத அரங்கம் 4 : 04.04.2021

 

அகரமுதல





பங்குனி 22, 2052 ஞாயிறு 04.04.2021 காலை 10.00

தமிழ்க்காப்புக்கழகம்

 சமற்கிருதம் செம்மொழி யல்ல!  :

இணைய அரங்கம் 4

உட் பொருள் : போற்றுதற்குரிய நூலல்ல பகவத்து கீதை!

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

 புகு எண் / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: கவிஞர் வேல் சுப்பராசு

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

 எழுத்தாளர் அறிவுக்கரசு

 வழ.ஆ.வீரமர்த்தினி

ஒருங்கிணைப்பு, நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை:  கவிஞர் ஆற்காடு க.குமரன்

அயல்நாட்டார் பங்கேற்பிற்கு மட்டும்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

புகு எண்  /Passcode: 12345

அலைபேசி வழி / One tap mobile

+16465588656,,8641368094#,,,,*12345# US (புது யார்க்கு / New York)

+13017158592,,8641368094#,,,,*12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C)

இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location

+1 646 558 8656 US (புது யார்க்கு / New York)

+1 301 715 8592 US (வாசிங்கடன் கொ.மா. / Washington D.C)

+1 312 626 6799 US (சிக்காகோ /Chicago)

+1 669 900 9128 US (சான் சோசு / San Jose)

+1 253 215 8782 US (தக்கோமா / Tacoma)

+1 346 248 7799 US (ஊசுட்டன் /Houston)

உங்கள் இருப்பிட எண் அறிய / Find your local number: https://us02web.zoom.us/u/kb9tpSCitW ]

அன்புடன்

தமிழ்க்காப்புக்கழகம்

வெள்ளி, 26 மார்ச், 2021

அமெரிக்கா, மணிமேகலையும் தேரீ காதையும்

 அகரமுதல




பங்குனி 14, 2052 / சனி / 27.03.2021

இரவு 8.30 ( கிழக்கு நேரம், அமெரிக்கா)    

கூட்ட எண் : 954 1812 2755

tinyurl.com/FeTNA2020ik

வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

இலக்கியக் கூட்டம்

மணிமேகலையும் தேரீ காதையும்: 

முனைவர் இர.விசயலட்சுமி

குவிகம் குறுக்கெழுத்துப்புதிர், 28/03/2021

அகரமுதல 


பங்குனி 15, 2052 ஞாயிறு 28.03.2021

மாலை 6.30

குவிகம் இணையவழி அளவளாவல்

குறுக்கெழுத்துப்புதிர்

நடத்துநர் : திரு சாய் கோவிந்தன்

நிகழ்வில் இணைய 

கூட்ட எண்  : 619 157 9931

புகு சொல் :  Kuvikam 123

அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம் 
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      

இந்தப் புதிர் நிகழ்வு இரண்டு சுற்றுகளில் நடைபெறும்.
முதல் சுற்றில் பார்வையாளர்கள் அனைவரும் பங்குகொள்ளலாம். 

நிகழ்வில் பங்குபெற நீங்கள் பயன்படுத்தும் கணினி/பலகைக்கணிணி(TAB)/அலைபேசி தவிர இன்னும் ஒரு பலகைக்கணிணி(TAB)அலைபேசி தேவைப்படும்.

முதல் சுற்று :-

1.’ Kahoot.it’  என்று உலவி(browser)-இல் தட்டச்சிடவும்.

  1. ஆடல் எண் (Game Pin) உள்ளீடு செய்யவும்
  2. கேள்வி திரையில் தெரியும். புதிர் ஆசிரியர் சொல்வதையும் கேட்டுப் பிறகு விடையைப் பதிவிடவும்.
  3. மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும்
  4. முதல் சுற்றின் முடிவில் அஃதாவது 5 கேள்விகள் முடிந்த பின் முதல் ஐந்து இடங்களைப் பெற்றவர்கள் பட்டியல் திரையில் தெரியும்

முதல் ஐவர் குறுக்கெழுத்துப் புதிருக்குச் செல்வார்கள்.