ஞாயிறு, 26 ஜூன், 2016

முல்லைத்தீவில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு




உடையார்கட்டு-ஆய்வுக்கூடம்-திறப்பு03 :udayaarkattu_aayvukkudathirappu03

முல்லைத்தீவில்  தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு

[கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு]
  முல்லைத்தீவு உடையார்கட்டு பெரும் கல்விக்கூடத்தின் (மகா வித்தியாலயத்தின்) தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆனி 02, 2047 / 16.06.2016 அன்று காலை திறந்து வைத்தார்.
  இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சிவமோகன், சாந்தி சிறிகந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்விக்கூடத் தலைவர் வி.சிறீகரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]


பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் கண்காணிப்பு பொறுப்புடைமைக் குழாம் தெரிவிப்பு!




பன்னாட்டு  வல்லுநர் குழு-கூட்டம்02 :MAP02

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் :

ஐ.நாவில் கண்காணிப்பு பொறுப்புடைமைக் குழாம்

[Monitoring Accountability Panel (MAP)]   தெரிவிப்பு !

  ஐ.நா. மனித உரிமையவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை எனப் பன்னாட்டு  வல்லுநர் குழு ஐ.நா. மனித உரிமை யவையில் குற்றஞ்சாட்டியுள்ளது.
  சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு  வல்லுநர்கள் குழுவே Monitoring Accountability Panel (MAP)  இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
 பன்னாட்டு நீதிபதியாகவும்,  உசாவல்- மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற  செப்ரி இரொபர்ட்சன்(Geoffrey Robertson) தலைமையில் இடம்பெற்றிருந்த  துணை மாநட்டில், கம்போடியாவின் கலப்பு தீர்ப்பாயத்தின் பொறிமுறையில் நீதிமன்றகளின் சிறப்பு உசாவல் மன்றங்களில் பொதுச் சமுதாய நீதி முன்முயற்சிக்கான  அறிவுரைஞராக இருக்கின்ற  ஃகீதர்  இரியான்(Heather Ryan).
  சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29 ஆம் நாளன்று மனித உரிமையவை ஆணையாளர் செயிட்  இராட்டு அல்அசேன்  அவையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்தப் பன்னாட்டு  வல்லுநர் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
  ஐ.நா. மனித உரிமையவைக்குச் சிறிலங்கா வழங்கியிருந்த வாக்குறுதிகளில்  உறுதியான எதனையும் சிறிலங்கா செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்த இந்த  வல்லுநர் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது அனைத்துலக நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பெற முடியும் எனவும் தெரிவித்திருந்தது.
நாதம் ஊடகசேவை
காணொளிகள் :

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]



யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!





யாழ்.சிறை : yaazh_sirai

யாழ்.சிறையில் தமிழ்க் கைதிகள் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி!

  யாழ். சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதால் பெரும்  இடர்ப்பாடுகளை எதிர்கொள்வதாகத் தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
  மேலும், மன ஆற்றுப்படுத்தலுக்கான வசதிகள் எதுவும் யாழ் சிறையில் வழங்கப்படாததால் தாம் மன  நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 12 பேர் வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலை 7 மாதங்களுக்கு முன்னர் நவீன மயப்படுத்தப்பட்டது.
 ஆனாலும் இங்குக் கைதிகளின் மன ஆற்றுப்படுத்தலுக்கான தொலைக்காட்சி  முதலான வசதி எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் கைதிகள் மன  நிலையில் பாதிப்படைந்துள்ளனர்.
 சிறைச்சாலையின் மருந்தாளர், தமிழ் அரசியல் கைதிகளான தம் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுகிறார் என்றும் இதனால் தாம் நோய் வாய்ப்பட்ட நிலையில் பெரும்  இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 தவிர, சிங்கள அதிகாரிகள் சிலரும் தம் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள அரசியல் கைதிகள் இவை குறித்து மேலதிகாரிகளுக்குப் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை  என்றனர்.
தகவல் : தமிழர் குரல்
முத்திரை-தமிழர்குரல் :muthirai_thamizharkural