நிதியுதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதியுதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 மே, 2013

தில்லித் தமிழ்ச்சங்கத்திற்குத் தோரண வாயில் நிதியுதவி - தொல்காப்பிய ஆய்விருக்கை, கணிணித்தமிழ் விருது,

 பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வர் செயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கம்ப்யூட்டர் வழியே தமிழ் மொழி பரவிட வகை செய்திட கம்ப்யூட்டர் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும். போப் விருது, உமறுப்புலவர் விருது, கணினித் தமிழ் விருது  ஆகிய மூன்று விருதுகளைப் பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1 இலட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியன வழங்கப்படும். இந்த விருதுகள் சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வழங்கப்படும்.
ஆந்திர பல்கலைக்கழகம்: தமிழறிஞர் மு.வ.வின் வேண்டுகோளுக்கிணங்க, ஆந்திரத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த் துறை இப்போது பொன்விழா கண்டுள்ளது. அங்குள்ள பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
தில்லி தமிழ்ச் சங்கம்: தில்லி தமிழ்ச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சங்கத்துக்கு தோரண வாயில் கட்டுவதற்கு நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கப்படும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும்.
அண்ணா நினைவிடத்தில் பூங்கா: சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் 3 ஏக்கர் பரப்பிலான காலியிடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சனி, 10 நவம்பர், 2012

இந்தியாவுக்கான நிதியுதவி நிறுத்தப்படும்: பிரிட்டன் தகவல்

இந்தியாவுக்கான நிதியுதவி நிறுத்தப்படும்: பிரிட்டன் தகவல்

First Published : 09 November 2012 06:01 PM IST
இந்தியாவுக்கு வழங்கப்படும் நிதியுதவி வரும் 2015ம் ஆண்டோடு முற்றிலும் நிறுத்தப்படும் என்று யுனைட்டட் கிங்க்டம் - இங்கிலாந்து தெரிவித்துள்ளது. வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்படும். பின்னர் 2015ம் ஆண்டுடன் நிதியுதவி முற்றிலும் நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்ட் அளவுக்கு இந்தியாவுக்கு அந்நாடு வழங்குகிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுக்குள் 200 மில்லியன் பவுண்டு ஆக குறைக்கப்படும் என்று சர்வதேச வளர்ச்சி துறைக்கான அமைச்சர் ஜஸ்டின் க்ரீனிங் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பதால், நிதியுதவி கொடுப்பது தேவையற்றது என்று பலரும் அந்நாட்டில் கூறி வருகின்றனர். ஆனால், ஆப்பிரிக்காவில் வசிக்கும் ஏழைகளைக் காட்டிலும், இந்தியாவில் 9 மாநிலங்களில் வசிக்கும் ஏழைகள் அதிகம் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்திருந்த க்ரீனிங், இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறியுள்ளது என்று கூறினார். எனவே நிதியுதவி என்பதற்குப் பதிலாக, தொழில்நுட்ப உதவிகளை அளிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.
உண்மையில், இந்திய அரசுக்கு நேரடியாக பிரிட்டன் நிதியுதவிகளைக் கொடுப்பதில்லை, தன்னார்வ நிறுவனங்கள், மாநில அரசின் சில திட்டங்கள் ஆகியவற்றுக்கே வழங்கப்படுகிறது.

சனி, 6 அக்டோபர், 2012

சட்டத்துறையில் இந்திய மொழி: தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி

சட்டத்துறையில் இந்திய மொழி: தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி

First Published : 05 October 2012 05:31 PM IST
சட்டம் தொடர்பான துறைகளில் இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசமைப்பில் சொல்லப்பட்டுள்ள மொழி எதிலும் புத்தகங்களை தயாரித்தல், வெளியிடுதல் போன்ற பணி எதனையும் புரிந்து வருகிற அமைப்புகளுக்கு மானியம் கிடைக்கும என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு, தகுதி வாய்ந்தவர்கள் www.lawmim.nic.in/olwing  ஆன்லைன் வாயிலாகவும், இணைச் செயலாளர் மற்றும் சட்ட ஆலோசகர், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சட்டமியற்றுத்துறை, ஆட்சி மொழிப் பிரிவு, புது தில்லி என்ற முகவரிக்கும், அக்டோபர் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் அறிய 011-23386229  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு  :     www.lawmin.in/olwing  என்பது தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.