இயக்குநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயக்குநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஜனவரி, 2013

தமிழ் காணாமல் போகக் காரணம் இயக்குநரும், இசை அமைப்பாளரும்: பேரரசு

தமிழ்ச்சொற்கள் காணாமல் போகக் காரணம் இயக்குநரும், இசை அமைப்பாளரும்தான்: பேரரசு



தமி‌ழ்‌ பா‌டல்‌களி‌ல்‌ தமி‌ழ்‌ வா‌ர்‌த்‌தை‌கள்‌ காணமல் போக காரணம் இயக்‌குநரும்,‌ இசை‌ அமை‌ப்‌பாளரும்‌தா‌ன்‌ என்று திரைப்பட இயக்குநர் பேரரசு குற்றம்சாட்டியுள்ளார். ‌
ஸ்ரீஹரி‌ மூ‌வி‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ பி‌.பா‌ரதி‌மோ‌கன்‌ தயா‌ரி‌த்‌து, டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ள படம்‌ 'அருவி‌க்‌கரை‌யோ‌ரம்'‌. இந்‌தப்‌ படத்‌தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசியதாவது:
இப்‌போ‌து வருகின்ற திரைப்பாடல்கள் நூற்றுக்‌கு தெ‌ன்னூ‌ற்‌றி‌ ஒன்‌பது பா‌டல்‌களி‌ல்‌ தமிழ் வார்த்தைகள் குறைந்து, ஆங்‌கி‌ல வா‌ர்‌த்‌தை‌கள்‌ அதி‌கம்‌ இடம்‌ பெற்று வருகின்றன. இது வருந்‌த தக்‌க வி‌ஷயம்‌.
எம்‌.எஸ்‌.வி‌ஸ்‌வநா‌ன்‌ கா‌லத்‌தி‌லும்‌, அதன்‌ பி‌றகு இளை‌யரா‌ஜா‌ வந்‌த பி‌றகும்‌ பா‌டல்‌களி‌ல்‌ டி‌யூ‌ன்‌ தன்‌மை‌ மா‌றி‌யி‌ருந்‌தது. ஆனா‌ல்‌ பா‌டல்‌களி‌ல்‌ தமி‌ழ்‌ வா‌ர்‌த்‌தை‌கள்‌ இருக்‌கும்‌. இப்‌போ‌து அது இல்‌ல. இப்‌படி‌ வருவதற்‌கு பா‌டலா‌சி‌ரி‌யர்‌கள்‌தான்‌ பொ‌றுப்‌பு என்று கூற முடியாது. இசை‌யமை‌ப்‌பா‌ளர்களுக்கும்‌, இயக்‌குநர்களுக்கும் இதில் பொ‌றுப்‌பு‌ இருக்‌குகிறது.
தமிழி‌ல்‌‌ தலை‌ப்‌பு‌ வை‌த்‌தா‌ல்‌தா‌ன்‌ வரி‌ச்‌ சலுகை என்‌று சொ‌ன்‌ன பி‌றகு தமி‌ழி‌ல்‌‌ தலை‌ப்‌பு‌கள்‌ வை‌க்‌க ஆரம்‌பி‌த்‌தா‌ர்‌கள்‌. அதே‌ போ‌ல பா‌டல்‌களி‌ல்‌ தமி‌ழ்‌ வா‌ர்‌த்‌தை‌கள்‌ வருவதற்‌கும்‌ வழி‌ வகை‌ செ‌ய்‌ய வேண்டும் என்று கூறினா‌ர்‌.

திங்கள், 12 நவம்பர், 2012

பி.ஒ.நி.(பி.பி.சி.) இயக்குநர் பதவி விலகல்

பிபிசி இயக்குநர் பதவி விலகல்

First Published : 11 November 2012 04:23 PM IST
லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி செய்தி நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் என்ட்விஸ்டல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் வேல்ஸில் நிகழ்ந்த சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து, கடந்த மாதம் பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டது. அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அரசியல் பிரமுகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத்தொடர்ந்து அவர்மீது பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் குற்றம்சாட்டை அளித்த நபர் அடையாளம் தெரியாமல் தவறான நபர் மீது குற்றம் சுமத்திவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து தவறான நபர் மீது முழுமையாக விசாரிக்காமல் செய்தி வெளியிட்டதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்வதாக ஜார்ஜ் என்ட்விஸ்டல் தெரிவித்தார்.