அன்புடையீர்,

வணக்கம். திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் புரட்டாசி 02, 2052 /சனி 18.09.2021 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

திராவிடப்பள்ளி இயக்குநர் சுப,வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் விழாவில் முதலாமாண்டு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் திராவிடப்பள்ளி சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்க உள்ளார்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்