அகரமுதல
“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூல்
“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூல்
இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்ய வாய்ப்பு!
“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் என்னும் நூல் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரால் எழுதப்பெற்றது. இது குறித்து அவர்,
தம் வாழ்நாளெல்லாம் தமிழ்நலனுக்காகப் போராடிப் புகழுடல் எய்திய செந்தமிழரிமா சி.இலக்குவனார் அவர்களின் தமிழ்ப்பணி இன்னும் முறையாகப் போற்றப்படவில்லை. 2013-ஆம் ஆண்டு நாடெங்கும் தமிழியக்க நூற்றாண்டு விழாக்கள் நடத்தியவேளையிலும் அவ் விழாக்களில் அவர் புறக்கணிக்கப்பட்டார்.தெளிந்த அறிவுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சம் என்பதே காரணம்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இத்தகைய தவறு நேரவிருந்தது. மன்னை நடராசன் கவனத்திற்குக் கொணர்ந்து கடைசிநேர இடைச்செருகலாகப் பேராசிரியர் பற்றிய உரை சேர்க்கப்பட்டது. அந்த நேரம் எழுதிய கட்டுரை ”தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” மன்னை நடராசன் அவர்களால் அவரது ‘புதிய பார்வை’ இதழில் வெளியிடப்பட்டது. அக் கட்டுரையுடன் இலக்குவனார் நூற்றாண்டு விழாக்களில் ஆற்றிய எழுத்துரைகளும் இணைத்து “தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” என்னும் கிண்டில் வெளியீடாக வெளியிட்டுள்ளேன்.
எனத் தெரிவித்துள்ளார்.
தனித்தமிழ்ப் பணிகளுக்கு வழிகாட்டி வேண்டும் என்போரும் தனித்தமிழ் இயக்கக் கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் உறுதுணையாய் இந்நூல் அமையும்.
கிண்டில் உறுப்பினர்கள் இதனை வழக்கம்போல் படித்திட இயலும். பிறருக்கு விலை 2 அமெரிக்கப் பணம் அல்லது 154 இந்தியப் பணம். எனினும்
19/4/20 ஞாயிறு & 20/4/20 திங்கள் இரு நாள்களும் யார் வேண்டுமாயினும் இலவசத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்துக் கொள்ளலாம்.
இணைப்பிற்கு
https://www.amazon.com/dp/B0876DLZQ3
அல்லது அமேசான் தளம் சென்று நூலின் பெயர் அல்லது நூலாசிரியர் பெயர்வழித் தேடினாலும் புத்தகம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக