வியாழன், 25 மே, 2017

கறுப்புமலர்கள் கவிஞர் நா.காமராசன் காலமானார்





கறுப்புமலர்கள் கவிஞர் நா.காமராசன் காலமானார்


கவிஞர் நா.காமராசன் நேற்று (வைகாசி 10, 2048 / மே 24, 2017) இரவு சென்னையில்  உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு  அகவை 75.

அவரது இறுதிச்சடங்கு : அவரது உடல், சென்னை கோடம்பாக்கம் கங்கா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று  (வைகாசி 11, 2048 / மே 25, 2017, வியாழக்கிழமை)  காலை 9.00மணி முதல் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். பின்னர் சொந்த  ஊரான போடி மீனாட்சிபுரத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு,  இறுதிச்சடங்குகள் நடத்தப்படும்.

மரபுக்கவிஞரும் புதுக்கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான நா.காமராசன்  (மதுரை) தியாகராசர் கல்லூரியில் பயின்றவர். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவர் என்ற முறையில் போர்க்குணம் கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர்.  அப்பொழுது மாணவராக இருந்த கா.காளிமுத்துவுடன்  இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்துச் சிறை சென்றவர். 

  தமிழ்ப்பட்டறையாக விளங்கிய தியாகராசர் கல்லூரி அவரைச் சிறந்த படைப்பாளியாகவும் ஆக்கியது. இவரின் கறுப்புமலர்கள்,  இலக்கியப்படிப்பாளர்களுக்கு இவரை அறிமுகம் செய்தது.

  மக்கள் திலகம் எம்ஞ்சியாரால் திரைப்படப்பாடலாசிரியராக மாறினார்.  இவர்பற்றிய முழு விவரங்களுக்கு விக்கிபீடியாவைக் காண்க.


நா. காமராசன், விக்கிபீடியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக