கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா
கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா
கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும்
ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள்
வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது.
முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன்
சிறப்புரையாற்றினார். ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர்
கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட
பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார்.
முனைவர் உலகநாயகி, பேராசிரியர் இரா.மோகன், கவிஞர் முத்துலிங்கம், வி.சி.சந்தோசம், கலசலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் முனைவர் சிரீதரன், மரு.சே.சதக்கத்துல்லா, இயக்குநர் எசு.பி முத்துராமன், திருமதி சாந்த குமாரி சிவகடாட்சம், வானதி இராமனாதன், அன்னை மோகன் முதலான பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
திருமதி பார்வதி் பால சுப்பிரமணியன் குழுவினரின் நடனம் நடைபெற்றது.
(படங்களை அழுத்திப் பார்த்தால் பெரிய அளவில் காணலாம்.)
தரவு : ஏர்வாடிஅன்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக