அகரமுதல 164, கார்த்திகை 26,2047 / திசம்பர் 11,2016
வரலாற்று நூலாகத் திகழ்வது புறநானூறு
சங்கக்காலத் தமிழ்ப் புலவர்கள் மக்கள்
வாழ்வில் அமைந்த நல்லியல்புகளையே தம் பாடல்களிற் பாராட்டினார்கள். தீமை
செய்வோர் வேந்தராயினும் அஞ்சாது இடித்துரைத்து அவரைத் திருத்தினார்கள்.
இங்ஙனம், ‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்’ இவையென உள்ளவாறு விளக்கி,
மக்களுக்கு நல்லுணர்வு வழங்கிய நல்லிசைப் புலவர்களுடைய
உள்ளத்துணர்ச்சிகளின் பிழம்பாகவும், சங்கக்காலத் தமிழகத்தின் வரலாற்று
நூலாகவும் திகழ்வது புறநானூறு.
-முனைவர் அ.சிதம்பரநாதன்:
ஒளவை சு.துரைசாமியின் புறநானூற்று உரைக்கான அணிந்துரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக