அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016
இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி.
1955 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தி மொழியை எப்படி எல்லாம் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிய பி.சி.கெர் தலைமையில் ஒரு குழுவை
அமைத்தது. அக்குழு இந்தியா முழுவதும் முழுவதும் சென்று கருத்துகளைக்
கேட்டறிந்தது. மார்கழி 27, 1986 / 1956 சனவரி 11ஆம் நாள் அக்குழு முன்பு
ம.பொ.சி. கருத்துரைத்தார்
- இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தமிழரசு கழகம் ஏற்றுக் கொள்ளுகிறது.
- மத்திய அரசின் நிருவாக மொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும், உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும்.
- முடிந்தவரையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளும் இந்தியிலேயே இருக்கலாம். மற்ற மொழியினர் அவரவர் தாய்மொழியில் பேசவும் உரிமை வேண்டும்.
- தமிழகப் பள்ளிகளில் இந்தியை விருப்பப் பாடமாக வைக்கலாம் என்று கருத்துரைத்தார்.
(செங்கோல் தை 02, 1987 / 15-1-1956)
இவர்தான் இன்றைய தமிழ்த்தேசியவாதிகளின்
தலைவர். பெ.மணியரசன், இராசேந்திர சோழன், பழ.நெடுமாறன், சீமான்
போன்றவர்கள் இன்று வரை ம.பொ.சி யின் இந்தக் கொள்கையைப் பற்றி ஒரு சிறு
கருத்துகூட வைத்தது இல்லை. ஆனால் பெரியாரைப் பற்றி மூச்சுக்கு முந்நூறு
தரம் பேசுவார்கள்.
– வாலாசா வல்லவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக