சனி, 11 ஜூன், 2016

உடனடிக் கவனத்திற்கு : எழுவர் விடுதலைப் பேரணி இடம் மாற்றம் - சென்னை எழும்பூரில் தொடங்குகிறது.



உடனடிக் கவனத்திற்கு : எழுவர் விடுதலைப் பேரணி இடம் மாற்றம் -  சென்னை எழும்பூரில் தொடங்குகிறது.

அற்புதம் அம்மாள் அறிவிப்பு!

 இன்று (வைகாசி 28, 2047 / சூன் 11, 2016) வேலூரில் இருந்து  தொடங்குவதாக இருந்த எழுவர் விடுதலைப் பேரணி, -  அதிக எண்ணிக்கையில் தோழர்கள் வருவார்கள் ; அதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கும் என்று பேரணியை மாறறி அமைத்துக் கொள்ள காவல்துறையினர் வேண்டுகோள்  விடுத்த காரணத்தினால்   - சென்னையில் நடத்தப்படுகிறது.

சென்னை  எழும்பூர் இராசரத்தினம்  ஆட்ட அரங்கத்திலிருந்து  நண்பகல் ஒரு மணிக்குத் தொடங்கிக் கோட்டைக்குச் செல்லும். 
அனைவரும்  இன்று (வைகாசி 28, 2047 / சூன் 11, 2016) 12 மணிக்கு  இராசரத்தினம்  ஆட்டஅரங்கத்தில் கூடவும்...

*அநீதிக்கு எதிராக அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டார்கள்,
என நாளைய வரலாறு கூறட்டும்.
 எழும்பூர் -தமிழர்கள் உறவால், உணர்வால் ஒன்றாகி எழும் ஊராக இன்று இருக்க வேண்டும்..
- பவா சமத்துவன்,
நிறுவனர் -தலைவர், இந்தியச் சமூக  ஊடக மையம் (பதிவு)
சேப்பாக்கம், சென்னை -5

படம் தரவு : இரசுமிராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக