புதன், 1 ஜூன், 2016

கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! – பா.திருஞானம்




கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! – பா.திருஞானம்

இரோயல்கல்லூரி-அமைச்சர்வருகை04 :royalcollege04

கொழும்பு இரோயல் கல்லூரிக்கு  மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி  வருகை!

ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

   மாநிலக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கொழும்பு  அரசு(இரோயல்) கல்லூரியின் தமிழ்ப் பிரிவுற்கு வைகாசி 14, 2047 / 27.05.2016  அன்று அதிரடி  வருகை ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது கல்லூரியின் அதிபர் தமிழ்ப் பிரிவிற்கான  துணை அதிபர்,  தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களுடன் பாடசாலையின் குறைபாடுகள் குறித்துக் கலந்து உரையாடினார். இதன் போது  மாநிலக்கல்வி  அமைச்சரின் செயலாளர் திசஃகேவாவித்தான, மேலதிகச் செயலாளர் ஃகேவகே,  கல்வி அமைச்சின் தமிழ்க்கல்வி  மேம்பாட்டிற்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் எசு. முரளிதரன், தேசிய பாடசாலைகளுக்கான உதவிக்  கல்விப் பணிப்பாளர் இர்சாத்து, அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 மேற்படி  அரசு(இரோயல்) கல்லூரியின் தமிழ்ப்பிரிவு பெறுபேறுகளில் பின்னடைந்து வருவதற்கான காரணங்களும் அதனை  மேம்படுத்துவதற்கான கருத்துகளும் கலந்துரையாடலில் இனங்கானப்பட்டு அவை  களையப்படுவதற்கு ஆசிரியர்களுக்கும்  செயன்மைக்கும்(நிருவாகத்திற்கும்) ஒரு மாதகால காலவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பாடசாலையில் பத்து  ஆண்டிற்கு மேல் தொடர்ந்து ஆசிரியர்களாகக் கடமையாற்றிவர்கள் சுற்றறிக்கைக்கு அமைய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றமும் செயயப்படவுள்ளது. இதற்கான பணிப்பினைமாநிலக்கல்வி அமைச்சர்  தொடர்புடைய அதிகாரிகளுக்கு விடுத்தார்.
  தற்போது இப்பாடசாலையில் பாட முறையிலான ஆசிரியர் குறைபாடுகள், சிங்களப் பிரிவின் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்ப் பிரிவின் பெறுபேறுகள் பின்னனடைவு, சில பௌதிகவளக் குறைபாடுகள், முகாமைத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் போன்றன இனம் காணப்பட்டுள்ளன. இந்தக் குறைபாடுகளையும் ஒரு மாத காலத்திற்குள்  சரி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும்  முதன்மையான பாடசாலைகளில் ஒன்றான இந்தப் பாடசாலை ஏனைய பாடசாலைகளுக்கு முன்  எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

[படங்களைப் பெரிதாகக் காண அழுத்தவும்]

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக