வியாழன், 5 நவம்பர், 2015

கொலையாளி எம்.கே.நாராயணனுக்குச் செருப்படி!




கொலையாளி எம்.கே.நாராயணனுக்குச் செருப்படி! மகிழ்ச்சி மனித நேயர்களுக்கு! 
அதிர்ச்சி கொலைக்கூட்டாளிகளுக்கு!


எம்.கே. நாராயணனுக்கு செருப்படி: அதிர்ச்சியடைவது எதற்காக?


ஈழ இனப்படுகொலையை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் எம்.கே. நாராயணன். இன்று இந்து பத்திரிகை நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற எம்.கே, நாராயணனை புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் செருப்பால் அடித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


இனப்படுகொலை அதிர்ச்சி இல்லையா?


இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தி இந்து பத்திரிக்கை 'அதிர்ச்சியளிக்கும் நிகழ்ச்சி' (a shocking incident) என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியளிக்க என்ன இருக்கிறது?

ஒன்றரை  இலட்சம் தமிழர்கள் படுகொலைக்குக் காரணமானவருக்குத் தண்டைனையாகச் 'செருப்படி மட்டும்தான் கொடுக்க முடிகிற நிலையில் தமிழ்நாடு இருக்கிறது' என்று கவலைப்படுவதா? அல்லது, இதையாவது செய்தார்களே என்று மனநிறைவடைவதா?


அனைத்தும் அறிந்தவர் எம்.கே. நாராயணன்!

  இராசீவு காந்தியின் படுகொலையைத் திசை திருப்பியதில் தொடங்கி, முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்று குவித்தது வரை, இனப்படுகொலையின் ஒவ்வோர் அசைவிலும் எம்.கே. நாராயணன் இருக்கிறார்.

  ஐநா மனித உரிமைகள் ஆணைய விசாரணை அறிக்கையில் இலங்கையில் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு கொடூரத்திற்கும்  சான்றாக இருப்பவர் எம்.கே. நாராயணன். அவருக்குத் தெரியாமல், அவரது  இசைவு இல்லாமல் இந்தக் குற்றங்கள் நடத்தப்படவில்லை (எம்.கே. நாராயணன் ஒரு மனிதப்பிறவியாக இருப்பாரேயானால், அவர் குற்ற ஒப்புநரக(அப்புரூவராக) மாறி, இலங்கை இனப்படுகொலை குறித்த விசாரணைகளில்  சான்றளிக்க வேண்டும்).

 செருமனியில்  இட்லரின் பாவங்கள் நினைவுச் சின்னமாக இடம்பெற்றிருப்பது போல - தமிழகத்திலும் ஈழத்திலும் எம்.கே. நாராயணனின் பாவங்கள் நினைவுச் சின்னங்களாக இடம்பெற வேண்டும். எம்.கே. நாராயணனின் கொடூரங்களை நினைவுச் சின்னமாக்கும் போது, அவற்றுடன் ஒன்றாக, இன்றுஅவரை அடித்த செருப்பையும் வைக்க வேண்டும்.

  எம்.கே. நாராயணனின் கொடூரக் குற்றங்களுடன் எள்முனையளவு கூட ஒப்பிடவே முடியாத வகையில் - செருப்பால் அடித்து அவரது குற்றங்கள் மீது கவனத்தை ஈர்ப்பது நியாயமான செயலே!

  அடித்தவர் ஈழ ஏதிலியர் என்று  செய்திகள் கூறுகின்றன
(செருப்பால் அடித்தவர் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று இந்து பத்திரிகை தவறாக குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது ஆனால், 'தான் எந்த இயக்கத்தையும் சாராதவர்' என்று அடித்தவர் கூறியதாக பிபிசி தெரிவிக்கிறது)


 - அருள் இரத்தினம் மின்னஞ்சல்
+++

  சென்னையில் இந்து  இதழ் நடத்திய இலங்கை ஏதிலியர் தொடர்பான கருத்தரங்கின் முடிவில் முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு  அறிவுரைஞர் எம்.கே.நாராயணனைப் , பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.

  சென்னையிலிருந்து வெளியாகும்  'இந்து' நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, "அரசியல் - பொதுக் கொள்கைக்கான இந்து மையம்" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை  ஏதிலியர் எதிர்காலம் குறித்து  நேற்று ( ஐப்பசி 19, 2046 / நவ. 04, 2015) சென்னையில் 'மியுசிக் அக்காதெமி'யில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.

  அதில் கலந்து கொண்டு முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு  அறிவுரைஞர், முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன் ஆகியோர் பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.

  அவர் நாராயணனைத் தாக்கும்போது, "எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்" என்று கூறியபடியே அடித்தார்.

  இதில் இரண்டு - மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்தன.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள்   கா.து.த.இ.அலெக்சாண்டர் உடனடியாக அவரைப் பிடித்துத் தள்ளினார்

தாக்கியவர் புதுக்கோட்டை பிரபாகரன்

திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை , அவரது அருகில் இருந்த  இந்து  குழுமத்தின் தலைவர் என். இராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது  மகிழந்துக்கு அழைத்துச் சென்றனர்.


தாக்குதல் நடத்தியவர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர், பிரபாகரன் என்றும் தெரிகிறது.
தான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியத் தலைமையாளர் இராசிவு காந்தியைத் திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன்தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.


இதற்குள் அங்கு விரைந்த  காவல்துறையினர்  பிரபாகரனைக் கைது செய்தனர்.
  நாராயணனுக்குக் காயம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை.
  இந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என். இராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று  இராம் குறிப்பிட்டார்.

  முன்னதாக இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அனைவரது பைகளும்  ஆராயப்பட்ட பிறகே அரங்கிற்குள்    நுழையவிட்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் இராசேந்திரன்

 +++
செய்தித் தரவுகள்


+++
 
தமிழின அழிப்பிற்கு துணைபோன

அதிகாரி நாராயணுக்குச் செருப்படி!

பாலத்தீனத்தில் கல் எறியும் சிறுவர்களை ஆதரித்தவர்கள்,
காசுமீரில் கல் எறியும் மக்களை ஆதரித்தவர்கள்,
தமிழகத்தில் செருப்படி கொடுப்பவர்களை மட்டும் எதிர்ப்பது ஏன்?

தமிழின அழிப்பிற்குத் துணை போனவர்கள்
தமிழகத்தில்  கட்டுப்பாடின்றி நடமாட முடியாது என்பதை
இன்றைய செருப்படி உலகிற்குக் காட்டியுள்ளது.

அதிகாரிகளின் விருப்படி அரசியல்வாதிகள் நடப்பதில்லை.மாறாக,
அரசியல்வாதிகளின் விருப்பத்தையே அதிகாரிகள் நிறைவேற்றகிறார்கள்.
 இராசீவு காந்தியை நாராயணன் தவறாக வழிநடத்தவில்லை. மாறாக,
இராசீவு காந்தியின் விருப்பத்தையே நாராயணன் நிறைவேற்றினார்.
தமிழின அழிவிற்குத் துணை போவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும்.
இல்லையேல் இன்று செருப்பேந்திய கைகள் நாளை துப்பாக்கியை ஏந்தும்.

++
தீரர் மனிதநேயர் பிரபாகரனுக்கு வாழ்த்து மலர்கள் குவிகின்றன!
++
முன்னதாக எம்.கே.நாராயணனுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் முற்றுகை முயற்சியும்  நடைபெற்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக