திங்கள், 15 ஜூன், 2015

இசைச்சொற்கள் அன்றும் இன்றும்

thamizharisai02
   இன்று ‘உச்சஃச்தாயி’, ‘மந்திரஃச்தாயி’, மத்திமஃச்தாயி’ எனப்படுவன அன்று வலிவு மண்டிலம், மெலிவு மண்டிலம், சம மண்டிலம் என்ற பெயரில் இருந்தன என்றும், இன்று, ‘கோமள தீவிர சுரங்கள்’ எனப்படுவன அன்று குறை நரம்பு, நிறை நரம்புகளாகப் பெயர் பெற்றிருந்தன என்றும், இன்று சம்பூர்ணம், சாடவம், ஓளடவம், சதுர்த்தம் என்று சொல்லப்படும் இராக வகைகள் அன்று முறையே பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்ற பெயர் பெற்றிருந்தன என்றும், கிரக பேதம் என்று இன்று சொல்லப்படுவது அன்று பண்ணுப் பெயர்த்தல் என்றும், பாலைத் திரிபு என்றும் குறிக்கப்பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இது விளம்பம், மத்திமம், துரிதம், அதிதுரிதம் என்று சொல்லப்படும் தாளத்தின் நான்கு காலங்களும் முறையே முதனடை, வாரம், கூடை, திரள் என்று குறிக்கப்பட்டன என்றும், வாதி, அநுவாதி, விவாதி என்று இன்று கூறப்படும் சுரங்களுக்கிடையே உள்ள உறவுகள், அன்று இணை, கிளை, நட்பு, பகை என்று கூறப்பட்டன என்றும், இராகத்தைப் பாடும் போதும் நான்கு காலங்களிலும் பாடவேண்டும் என்றும் அறிந்து கொள்ளலாம்
– முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்: தமிழன் படைத்த கலைக்கருவூலம்: புகுமுகம்
Thiru-murugan_ira02



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக