52thamizh
தமிழை முன்னே நீ கற்க;
நின் மகனுக்குக் கற்பிக்க;
எவ்வளவு கூடுமோ அவ்வளவு கற்க;
கற்பிக்க; கேட்க; கேட்பிக்க;
இடையிடையே ஆங்கிலம்
கலந்து பேசற்க;
புகழ் நிமித்த மாகவும்
பொருள் நிமித்த மாகவும்
ஆங்கிலம் கற்றல் சிறப்பாகாது;
எப்போதும் தமிழையே
தெய்வம் போலவும்
நற்றாய் போலவும் சிந்திக்க;
நீ தமிழ் மயம் ஆனால்
நின்மக்களும் தமிழ்மயம் ஆவர்;
நின்குடியும் தமிழ் மயமாகும்.
நின் கை தமிழ்நூல் எழுதுக
நின் வாய் தமிழையே பேசுக
நின் மனம் தமிழையே சிந்திக்க
நோய் கொண்டு மெலியனாயின்
மருந்துண்டு வலியனாகித்
தமிழ் கற்க!
-மாகறல் கார்த்திகேய (முதலியா)ர்