muscut_valluvamaalai01 muscut_valluvamaalai02 muscut_valluvamaalai03

தமிழ் ஆர்வலர் சுரேசமீ எழுதிய ‘வள்ளுவமாலை-100′ நூல் அறிமுகக் கூட்டம் மசுகட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைகாசி 24, 2046, சூன் 07, 2015 அன்றுநடைபெற்றது.

   தமிழ்த்தாய் வாழ்த்துடனும் சிறப்பு வழிபாட்டுடனும் நிகழ்ச்சி தொடங்கியது.
 இதில் சிறப்பு விருந்தினராக மசுகட்டுத் தமிழ்ச்சங்க மேனாள் தலைவரும், இன்றைய நெறியாளருமான. சானகிராமன், மசுகட்டுத் தமிழ்ச் சங்கத் தலைவர் அபு ஃகசன், பொருளாளர் திருவாட்டி .விசயலட்சுமி, இலக்கிய அணிச் செயலாளர் திருவாட்டி விசாலம், திருக்குறள் தென்றல். தங்கமணி, சுவாமிநாதன், சந்திரசேகர், கலைமணி, இலக்கியா முதலான பலர் கலந்து கொண்டனர்.
  நூறு வெண்பாக்கள் கொண்ட வள்ளுவமாலையை அன்பர்களுக்கு வாசித்துக் காட்டி அதன் சிறப்புக்களையும், நூல் பிறந்த கதையையும் நூலாசிரியர் விளக்கினார்.
  விருந்தினர்கள் வள்ளுவமாலை விளக்கும் திருக்குறள் மாண்பினைப் போற்றி ஆசிரியருக்குத் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
  அமீரகக் கவிஞர் ‘வாழும் கண்ணதாசன்’ காவிரிமைந்தன் அவர்களின் வாழ்த்துக் கவிதையும் வாசிக்கப்பட்டது.
  நூல் வெளியீட்டுக்கான வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
 ‘வல்லமை’ மின்னிதழில் இது வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
   முடிவில் திருக்குறள் தென்றல். தங்கமணி நன்றி கூறினார்.
  தமிழ் ஆர்வலர் சுரேசமீயின் மனையாள் திருவாட்டி. இரேவதி சுந்தர், இரட்டையரான சனனி, மீரா ஆகியோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.