வைகாசி 4, 2046 / மே 18, 2045
திங்கட் கிழமை
சென்னை
கவிதைஉறவின் 43ஆம் ஆண்டு விழாவில் ஏர்வாடி இராதாகிருட்டிணன் எழுதிய ‘கவிதைஉறவு’ தலையங்கங்களின் தொகுப்பான ‘உங்கள் கனிவான கவனத்திற்கு‘ நூலை இந்தியச் சேம(ரிசர்வ்) வங்கி மண்டல இயக்குநர் மரு. சதக்கத்துல்லா வெளியிட தொழிலதிபர் மரு. டி முருகசெல்வம் பெற்றுக்கொண்டார்.நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
கவிதை உறவு 43ஆம் ஆண்டு விழா மலர் தேசியமாமணி இல கணேசன் அவர்களால்
வெளியிடப்பட்டது. முதல் மலரை கிருட்டிணா இனிப்பக முரளி பெற்றுக்கொண்டார்.
மலர் மிகச் சிறப்பாக வெளி வந்துள்ளது. மலர் வேண்டுவோர் உரூ 150
அனுப்பினால், தூதஞ்சலில் அனுப்பப்படும். கவிதை உறவு 420 இ,
மலர்க்குடியிருப்பு அண்ணாநகர் மேற்கு சென்னை 600 040
கவிதை உறவு 43ஆம் ஆண்டு மலரின் அழகிய அட்டைப்படம் இது. நண்பர் மதிராசின்
கைவண்ணம். கவிஞர்கள் தமிழன்பன், முத்துலிங்கம், வேழவேந்தன் பேராசிரியர்
அய்க்கண், ஏர்வாடியார் போன்றோர் தம் படைப்புகளோடு மதுரை ஆதீனம்,
குன்றக்குடி அடிகளார், தேசியமணி இல கணேசன், திராவிடர் கழகத்தலைவர் திரு கி
வீரமணி, கவிப்பேரரசு வைரமுத்து, திரு வி சி. பி சந்தோசம் போன்றோர் தம்
வாழ்த்துகளோடும் கவிதை உறவு ஆண்டு விழாவில் வெளியானது . படித்து மகிழவும்,
பாதுகாத்துப் பெருமையுறவும் தக்கப் பனுவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக