வியாழன், 13 ஜூன், 2013

ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார்? - கலைஞரின் ஒப்புதல் வாக்குமூலம்

கலைஞரின் பொய்யும் மெய்யும் : திருமண விழாக்களில் அரசியல் பேசியே விழிப்புணர்வு  ஏற்படுத்திய தலைவர் கலைஞர்  <திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது பொருத்தமில்லை> என ஏதோ இதுவரை  அவ்வாறு பேசாததுபோல் பொய்உரைத்திருக்கிறார். இலங்கைத் தமிழர் நலனுக்காகக் காங்கிரசை வெட்டியதாகக் கூறி ஈழத்தமிழ் ஆதரவாளர்களைக் கவரப் பொய் உரைத்தவர் இன்று,  தன்னை வெட்டி விட்டது காங்கிரசுதான் என்றும் இல்லாவிட்டால் தான் இன்னும் ஒட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன் என்றும் மெய் உரைத்திருக்கின்றார்.  பொய்மொழிவதற்கும் மெய்மொழிவதற்கும் காரணம் வேறுமொழிதான் என்பது நன்கு  புரிகின்றது. என்றாலும் இனித் தேர்தல் உரைகளிலும்அறிக்கைகளிலும் ஈழத்தமிழர் நலன்காக்க மத்திய அரசில் இருந்து வெளியேறினோம் என வீர உரை ஆற்றக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


ஒட்டியிருந்த என்னை வெட்டி விட்டது யார்? காங்கிரசுக்கு க் கருணாநிதி கேள்வி

சென்னை : ""ஒட்டியிருந்த என்னை, வெட்டி விட்டது யார்?'' என, காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் மகன் திருமணத்தை, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடத்தி வைத்து அவர் பேசியதாவது:விழாவில் வரவேற்றுப் பேசிய திருநாவுக்கரசர், "காங்கிரசோடு நான் ஒட்டி இருக்க வேண்டும்' என தெரிவித்தார். ஆனால், ஒட்டி இருந்த என்னை, வெட்டி விட்டது யார் என்பது அவருக்கே தெரியும் என, கருதுகிறேன். அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்பவில்லை.அரசியல் பேசுவதற்கு தனி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. திருமண நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது பொருத்தமில்லை. எனவே, இப்பிரச்னையை இதோடு நிறுத்தி விடுகிறேன்.கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் சில நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதை உணர்ந்து, நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்குரியது பண்பாடு. அது, தன் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு, தமிழினத்தின் மரியாதையையும் காப்பாற்றும். எனவே, அனைவரிடமும் நட்பாகப் பழக வேண்டும்.

ஒருவர் எந்த கட்சியில் இருக்கிறார். எந்தக் கட்சிக்காக வாதாடுகிறார் என்பது முக்கியமல்ல. அவர் எங்கிருந்தாலும் நம்முடையவர் என்ற எண்ணத்தோடு பழக வேண்டும். இதுப்போல தான், திருநாவுக்கரசர் எங்கிருந்தாலும், அதைத் தாண்டி அவருடைய நண்பர்கள் பல கட்சிகளில் இருந்து வாழ்த்துகின்றனர்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.காங்கிரஸ், பா.ஜ.,- தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், திருமண விழாவில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக