வியாழன், 13 ஜூன், 2013

மாணவியின் தொண்டுணர்வு

மாணவியின் சேவை ப்  பண்பு!
இந்திய அளவில், சிறந்த சேவை செய்யும் மாணவியாக த் தேர்வாகி, அமெரிக்காவிற்கு சென்று வந்த, பிரியா:
நான், சென்னை, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறேன். சேவை செய்வதில்ஆர்வம் இருந்ததால், "சைப்' எனும், "ஸ்டூடன்ட் இன் ப்ரி என்டர்பிரைசைஸ்' தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தேன். இது, பல்கலை கழகம், கல்லூரிகளில், ஒரு சேவை அமைப்பாக செயல்பட்டு, ஏழ்மையில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் திட்டங்களை, மாணவர்கள் மூலம் உருவாக்கி செயல்படுத்துகிறது.சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுத்து, வட்டார, தேசிய, சர்வதேச அளவில் பரிசு வழங்கப்படுகிறது. 2009ம் ஆண்டு முதல், எங்கள் கல்லூரியில், "சைப்' செயல்பட்டு வருகிறது. படிப்பறிவற்ற ஏழைப் பெண்களுக்கு, சுயதொழில் மூலம், மாத வருவாய் ஈட்டும்திட்டத்தை உருவாக்கி, நாங்கள் சொல்லி தரும் விஷயங்கள், வாழ்க்கை முழுவதும் பயன்தர வேண்டும் என்ற நோக்கத்துடன், "ஆயுர்ரேகா புராஜெக்ட்' என, பெயர் வைத்தேன். இதற்கு, நீண்ட ஆயுள் என்று பெயர்.
வேளச்சேரியில் உள்ள சில பெண்களை தேர்ந்தெடுத்து, பாரம்பரிய உணவுகளை தயாரித்து, அதை எவ்வாறு விற்பனை செய்ய வேண்டும் என்பதை, "டயட்டீஷியன்' உதவியுடன், வாரத்தில் மூன்று நாட்கள் பயிற்சியளித்தோம். ஆறு மாதம் அளித்த பயிற்சியின் பயனாக, பயிற்சி பெற்ற ஒவ்வொருவரும், மாதம், 3,000 முதல், 5,000 ரூபாய் வரை
சம்பாதிக்கின்றனர்.எங்கள் கல்லூரியில், "சைப் மேளா' என்ற பெயரில், மூன்று நாட்கள் கடை அமைத்து, அவர்கள் தயாரித்த பொருட்களை, விற்பனை செய்து ஊக்குவித்தோம்.
ஆதரவற்ற குழந்தைகள் வரைந்த ஓவியம் பொறிக்கப்பட்ட, "டீஷர்ட்டை' தயாரித்து, அதை விற்று கிடைத்த லாபத்தில், முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோருக்கு
செலவிடுகிறோம். மும்பையில் நடந்த, "சைப்' போட்டியில், என்னுடைய புராஜெக்ட், இரண்டாம் இடம் பிடித்தது. நான் சிறந்த சேவை மாணவியாக தேர்வாகி, அமெரிக்காவில் நடைபெற்ற, உலகளவிலான, "சைப்' கருத்தரங்கில், இந்தியா சார்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக