திங்கள், 28 ஜனவரி, 2013

ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி


ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் லைல் ினை

தியாகதுருகம்:சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை தியாகதுருகம் அருகே உள்ள, தொடக்கப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் வேலு, 38 பணிபுகிறார். அறிவியல் துறையில் ஆர்வம் உள்ள இவர், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். இதற்கான, மினியேச்சர் ஊஞ்சலை செய்து, அதன் அச்சுடன் சிறிய ஜெனரேட்டரை இணைத்துள்ளார்.ஊஞ்சலை ஆட்டும்போது, அதன்மூலம் கிடைக்கும் விசை மூலம், ஜெனரேட்டர் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இக்கருவியில் இருந்து, 9 வாட் மின்சாரம் உற்பத்தி செய்து, இரண்டு சிறிய பல்புகளை எரிய வைத்து, பரிசோதனை மூலம் செய்து காண்பித்தார். குடியரசு தினவிழாவில் இக்கருவியை காட்சிக்கு வைத்திருந்தார். மாவட்ட கவுன்சிலர் அய்யப்பா, தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.

இதுகுறித்து, ஆசிரியர் வேலு கூறியதாவது:விஞ்ஞானி மைக்கேல் பாரடே கண்டுபிடித்த, மின்தூண்டல் முறையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போது, அதிக அளவில் உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிலக்கரி, அணு சக்தி, காற்றாலை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.இன்றைய நிலையில், எரிபொருள் குறைந்து வருவதால், சோலார் முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எரிபொருளை பயன்படுத்தாமல், பலவகையிலும் வீணாகும் ஆற்றலை, பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும், என்ற எண்ணம் தோன்றியதால், சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை தயாரித்தேன். இதில், சிறிதாக சோதனை முறையில் செய்துள்ளேன்.இதை பெரிய அளவில் நடைமுறைப்படுத்தி, விளையாட்டு மைதானங்களில், பொழுதுபோக்கு இடங்களில் அமைக்கப்படும் ஊஞ்சல்களில், இக்கருவியை பொருத்தினால் அதன் மூலம், மின்உற்பத்தி செய்து, குறைந்தபட்சம் சில மின்விளக்குகளையாவது எரியவைக்க முடியும்.இதனால், மின்சாரத்தை சிக்கனம் செய்யமுடியும். இக்கருவியை மேலும் மேம்படுத்தி, பெரிய அளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு, ஆசிரியர் வேலு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக