திங்கள், 28 ஜனவரி, 2013

வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன!


 சொல்கிறார்கள்
வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன!

மனிதவள நிறுவனமான, "ஹியூமன் ரிசோர்சஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா' நிறுவன உரிமையாளர் மாத்ருபூதம்: அமெரிக்க அதிபராக ஒபாமா, மீண்டும் வெற்றி பெற்றவுடன், ஐ.டி., உட்பட பல வேலைகள், இந்தியாவுக்கு கிடைக்காது எனச் சொன்னார்கள். ஆனால், பல வேலைகள் இங்கே தான் வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், 25 லட்சம் புதிய வேலைகள் இந்தியாவில் உருவாகும்.ஐ.டி., வேலைகள் தவிர்த்து, உற்பத்தி துறை சார்ந்த வேலைகள் இங்கே உருவாகும். பல கொரிய நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளன. "இண்டஸ்ட்ரியல் டிசைனிங்' வேலைகள் ஏராளமாய் உள்ளன.ஐ.டி., துறை ஒரு சமச்சீர் நிலைக்கு வந்துள்ளது. முன்பெல்லாம், 90 சதவீதம், இந்தியர்கள், "அவுட்சோர்சிங்' வேலைகளை நம்பி இருந்தனர். இப்போது, இந்தியாவிலேயே நிறைய வேலைகள் உருவாகி விட்டன. அதனால், 50 சதவீத வருவாய், இந்திய நிறுவனங்களிடமிருந்தும், அரசு வேலைகளில் இருந்தும் கிடைக்கிறது.தமிழகத்தில், 520 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. ஆனால், 10 - 20 கல்லூரிகளைத் தவிர, வேறு எங்கும், திறமையான மாணவர்கள் உருவாக்கப்படுவதில்லை. 15 லட்சம் இன்ஜினியர்கள், ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படுகின்றனர். ஆனால், ஐந்து லட்சம் இளைஞர்களுக்கே வேலை கிடைக்கிறது. மற்றவர்களுக்கு, போதிய தகுதி இல்லை.காரணம், மாணவர்களின் ஆங்கில மொழி அறிவோ, கம்யூனிகேஷன் திறனோ, இன்டர்பர்சனல் திறனோ போதிய அளவு இல்லை. தாம் யோசிப்பதை, தமிழில் கூடச் சொல்லத் தெரியாமல், மாணவர்கள் திணறுகின்றனர். குரூப் டிஸ்கஷன், ஆப்டிடியூட் டெஸ்டுகளில் தோல்வி அடைந்து விடுகின்றனர்.ஆனால் ஒன்று... முன்பெல்லாம், முன்னணி நிறுவனங்களில் மட்டுமே வேலைக்குப் போவேன் என, ஒரு கூட்டம், எப்போதும் காத்திருக்கும். தன்னுடன் படித்தவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு, அடுத்த கீழ் லெவலில் உள்ள வேலையைக் கூட செய்ய மாட்டேன் எனச் சொல்பவர்கள் இருந்தனர். இப்போது அப்படி அல்ல; எந்த நிறுவனமாக இருந்தாலும், வேலைக்குப் போகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக