வியாழன், 24 மே, 2012

சொல்கிறார்கள் : புத்தக வாசிப்பு எழுதத் தூண்டியது!

 சொல்கிறார்கள்
புத்தக வாசிப்பு எழுதத் தூண்டியது!

தன் 14 வயதில் இரண்டு ஆங்கில நாவல்களை எழுதியுள்ள ஹர்ஷிதா மேக்டம்: என் அம்மா, இல்லத்தரசி; அப்பா பசவராஜ், சி.பி.ஐ., அதிகாரி. அதைவிட அவர் ஒரு நல்ல வாசகர். "வாசிப்பு என்பது வரம்' என கற்றுக் கொடுத்தது, அவர் தான். கம்ப்யூட்டர், "டிவி'யை விட, எழுத்துக்களில் தான் என் சந்தோஷம் இருந்தது. பிறந்த நாளுக்குக் கூட, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும், புத்தகங்கள் தான் பரிசளிப்பர். தரமான வாசிப்பு, நம்மை எழுதவும் வைக்கும். அப்படித்தான் கதை, கவிதை, நாவல் என, விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன்.சிட்னி ஷெல்டனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். "த்ரில்லர், ஆக்ஷன்' நாவல்களை எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆர்வத்தில் எழுத ஆரம்பித்த நாவல் தான், "ரூபி ரஷ்!'லண்டனில் உள்ள ரூபி என்ற பள்ளிச் சிறுவன், தன் நண்பர்களுடன் சேர்ந்து, அறிவியல் ஆய்வுக் கூடத்தில் உலகையே அழிக்கும் அதிசய முட்டையைத் தயாரிக்கிறான். அந்த முட்டையைத் திருட நடக்கும் சதிகளை, எப்படி வெல்கிறான் என்பதைப் பற்றிய, "த்ரில்லர்' கதை. இதுதான் முதல் நாவல்.பத்து வயதிலேயே, எழுதி முடித்து விட்டேன். ஆனால், அதை வெளியிடுவதற்கு வழி தெரியாமல், அப்பா, அம்மா, நான் மூவரும், ஒவ்வொரு பதிப்பக வாசலாக ஏறி இறங்கினோம். "படிக்கும் வயதில் ஏன் புத்தகம் எழுதுற?' என, பலரும் என்னை அலட்சியப்படுத்தினர். அதன் பின், நாங்களே பணம் செலவழித்து, நாவலை வெளியிட்டோம்.முதல் முயற்சியில் சோர்வற்று, இனி புத்தகமே எழுதக் கூடாது என்றிருந்த என்னை, பல திசைகளில் இருந்தும் வந்த பாராட்டுக்கள் தான், மீண்டும் எழுத வைத்தன.முதல் நாவலில் செய்த சிறிய தவறுகளை திருத்தி, சுவீடனை மையமாக வைத்து, அழகான மொழி நடையில், இரண்டாவது நாவலை எழுதினேன். இப்போது, பெங்களூரில் உள்ள பெரிய அமைப்புகள், பள்ளிகள் என, பாராட்டு விழாக்களுக்கு என்னை அழைக்கின்றனர்; மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக