புதன், 23 மே, 2012

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பதற்றம்

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் முத்தரையர் வாக்கு வங்கி  ஆளுங்கட்சிக்கு எதிராகத் திரும்புவதற்காக நடத்தப்பட்ட   நிகழ்வுகளாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமயத்தினர் இருக்கும் பகுதியில் பிற பிரிவினர் அல்லது சமயத்தினர் ஊர்வலம் வரக்கூடாது எனத் தடுப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பின் ஊர்வலம் அமைதியாகச் செல்ல வாய்ப்பு ஏற்படும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக்  காப்போம்! /

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பிரச்னை: திருச்சியில் பதற்றம்

தினமணி

திருச்சி, மே 23: திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஊர்வலமாக வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை சூட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. காலையில் அரசு சார்பிலான மரியாதை செய்யப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சியினரும் தங்கள் தரப்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதுபோல், ஆர். விஸ்வநாதன் என்பவர் தலைமையில் முத்தரையர் சங்கம் அமைப்பினர் வழக்கமாக மாலை நேரத்தில் பெருமளவில் கூடி, முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பர். இன்றும் அதுபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் திருச்சியின் மையப் பகுதிக்கு வந்தனர். கோஷமிட்டும், பாட்டு பாடியும் கூட்டமாக அவர்கள் வரும்போது பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது. திருச்சி தஞ்சாவூர் சாலையில் பால்பண்ணை அருகே ஒரு அணி வந்தபோது, அங்கிருந்த காவலர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணில் பட்ட வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். திருச்சி பாலக்கரை பகுதிவழியாக ஒரு பிரிவினர் வந்தபோது பதற்றம் அதிகரித்தது. பாலக்கரையில் இஸ்லாமிய சமூகத்தவர் வாழும் பகுதி வழியே இவர்கள் வந்த ஊர்வலத்தை , ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கேயும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன. இடையில் வந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக அடித்தனர்.  திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் மகளிர் காவல் நிலைய கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருச்சி நகரில் ஆங்காங்கே இருக்கும் சிறு சிறு காவல் உதவி மையங்கள் மீதும் முத்தரையர் சங்க அமைப்பினர் தாக்கி சேதப்படுத்தினர். தனியார்  பேருத்துகள், அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவங்களில் போலீஸார் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் திருச்சி நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைதிப் பணியில் போலீஸார் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்

அம்மா நிர்வாகத்தை விட்டு விட்டாரா இது என்ன கையாலாகாத அரசு மாதரி நடக்கவேண்டாம்.சட்ட ஒழுங்கு சீரடையும் என நம்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்க வேண்டாம்
By sethu
5/23/2012 7:35:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக