வியாழன், 23 பிப்ரவரி, 2012

 சொல்கிறார்கள்

"என்னால் முடியும்!'

                                          நேத்ரோதயா அமைப்பின் மூலம்
                                        சாதனையாளர் விருது பெற்றுள்ள,             

என் அப்பா திண்டிவனத்தில், சிறிய நகைக் கடை வைத்திருக்கிறார். பார்வைத் திறன் குறைபாடு எங்கள் குடும்பத்தில் எனக்கு மட்டும் தான் உள்ளது.என் படிப்பிற்கும், சாதனைக்கும் சொந்தக்காரர் என் அம்மா தான். இப்போது பார்வையற்றோர் படிப்பதற்கு, கம்ப்யூட்டரில் பல சாப்ட்வேர்கள் வந்துள்ளன. ஆனால், அந்த வசதி எல்லாம் அப்போது கிடையாது. என் பள்ளிப் படிப்பு ஆரம்பித்து, கல்லூரிப் படிப்பு வரை, அனைத்துப் பாடங்களையும் அவர் வாசிக்க, நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.சில கேள்விகளுக்கான விடைகள், இரண்டு தடவை படித்துக் காட்டினால் கூட புரிந்துவிடாது. கூடுதலாக இரண்டு, மூன்று முறை படித்துக் காட்டினால் தான், அதிலுள்ள பொருள் முழுமையாகப் புரியும். எத்தனை முறை படிக்கச் சொன்னாலும், அம்மா பொறுமையாக படித்துக் காட்டுவார். அதனால் தான், ஆங்கில முதுநிலைப் பட்டப் படிப்பு வரை, என்னால் எளிதாக படிக்க முடிந்தது.அரசுப் பணியில் அதிகாரி நிலையில் இருந்தால், பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான், சிவில் சர்வீஸ் பணியில் சேர விரும்பி, அதற்கான தேர்வுக்கு தயாரானேன். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குறைந்தபட்சம், எட்டு மணி நேரம் படிக்க வேண்டும். நான் ஒன்பது மணி நேரம் படிப்பேன். ஆனால், எனக்காக அம்மா ஒரு நாளைக்கு, 11 மணி நேரம் உழைப்பார். சிவில் சர்வீஸ் தேர்வுடன், என் கனவுகள் முடங்கிப் போகவில்லை. இன்னும் நிறைய படிக்க வேண்டும். படித்துக் கொண்டே இருக்க வேண்டும். எந்தப் பணியையும் என்னால் சிறப்பாக செய்ய முடியும். என் படிப்பு, என் குறையை மறக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக