ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

Avvai natarasan appreciate thamizh mandrams: தமிழ் மன்றங்களின் செயல்பாடு: அவ்வை நடராசன் பாராட்டு

தமிழ் மன்றங்களின் செயல்பாடு: அவ்வை நடராஜன் பாராட்டு

First Published : 19 Feb 2012 01:49:25 AM IST


சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 38-வது கம்பன் விழாவில் பேசுகிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன். உடன், பேராசிரியர் சாரதா
சேலம், பிப். 18: பாரதி சொன்னதை செயல்படுத்திவரும் தமிழ் மன்றங்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன்.சேலம் கம்பன் கழகம் சார்பில் 38-ம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா சாலையில் உள்ள கோர்தன்தாஸ் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.தொடக்க விழாவுக்கு திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் தலைமை வகித்தார்.விழாவில் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பேசியதாவது:நாட்டில் எந்த நகருக்கும் இல்லாத சிறப்பு சேலம் மாநகருக்கு உள்ளது. அமெரிக்காவிலும் சேலம் என்ற பெயரில் ஒரு மாநகர் உள்ளது.காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, சுப்பிரமணிய சிவா, முன்னாள் அமைச்சர் ராஜாராம், டாக்டர் சுப்பராயன், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சேலத்துடன் தொடர்புடையவர்கள்.சேலம் பிரம்ம சமாஜத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாரதியார் உரை நிகழ்த்தியுள்ளார். பாரதி சொன்ன பிறகே கம்பனுக்கும், வள்ளுவனுக்கும், இளங்கோவுக்கும் தமிழகத்தில் மன்றங்கள் தொடங்கப்பட்டன. தமிழ்ப் புலவர்களை அடுத்தடுத்த தலைமுறைக்கும் வழிநடத்த வேண்டும் என்பதற்காக அன்று பாரதி சொன்னதை இன்று தமிழ் மன்றங்கள் செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.கம்பராமாயணம் குறித்து வ.வே.சு. அய்யர் கூறும்போது, நான் இத்தாலி, கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள புகழ்பெற்ற இலக்கியங்களைப் படித்துள்ளேன். ஆனால், ராமாயணம் அவற்றை எல்லாம் வென்றுவிட்டது. வால்மீகியின் ராமாயணத்தைவிட கம்ப ராமாயணமே சிறந்தது என்றார் அவ்வை நடராஜன்.கம்பன் கழகத் தலைவர் ஆர்.பி. சாரதி, செயலர் கரு.வெ.சுசீந்திரகுமார், புலவர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக