வியாழன், 16 டிசம்பர், 2010

2G corruption: subbi petition : தில்லி நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி மனு

அரசுத் தரப்பு வழக்குரைஞர் பணி என்ன? அரசு என்ன குற்றம் புரிந்திருந்தாலும் அரசின் செயல்கள் சரியானவையே என வாதிடுவது. அலைக்கற்றை ஊழலில்  அரசின் மீது குற்றம் சுமத்திய சுப்பி.ஏன் இவ்வாறு வேண்டுகிறார். மன்மோகன் சிங் மீது மட்டும் அல்ல; அரசுப் பொறுப்பிலுள்ள யார்மீதும் அரசை இயக்கும் எவர் மீதும் குற்றம் இல்லை என்று சொல்லவா?  மத்தியப் புலனாய்வுத் துறைக்கு
இவர் உதவலாம். ஆனால் அத்துறை சுப்பி.க்கு எஎடுபிடியாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஏன்?  இவையெல்லாம் முறையான ஆசைகளாகத் தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

2 ஜி ஊழல்: தில்லி நீதிமன்றத்தில் சுப்ரமணியம் சுவாமி மனு

புதுதில்லி, டிச.15: 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக தன்னை இணைக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.சிபிஐ சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தாவிடம் தனது மனுவை தாக்கல் செய்த சுவாமி, அதை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.தன்னை அரசு வழக்கறிஞராக நியமிக்கலாம் என மனுவில் குறிப்பிட்டுள்ள சுவாமி, விசாரணையில் சிபிஐ தனக்கு உதவிபுரிய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்

நம் நாட்டில் சட்டம் என்பது இருக்கா?. முதலில் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும். முடியுமா? இந்த சட்டத்தில் எவ்வளவு ஓட்டைகள். ஓட்டை உள்ள படகில் சென்று யாரும் கரை சேர முடியாது. ஆனாலும் இந்த சட்டத்தை மாற்ற முடியாது. அதிலும் ஜாதி என்ற பிசாசு மாற்ற முடியாமல் செய்து விடும். (அம்பேத்கர் எழுதிய சட்டம் என்பதால்) . தேர்தலில் ஊழலுக்கு எதிராக ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டாலும் ஊழல் செய்த கட்சிக்கும் ஓட்டு விழத்தானே செய்கிறது. அப்படி எனில் அந்த கேவலத்தை என்னவென்று சொல்வது? சிந்திக்கவும்!.
By கண்ணன்
12/15/2010 9:24:00 PM
சுவாமி உண்மையிலே விஷயம் உள்ள சாமீ தான்.
By narasimman
12/15/2010 6:01:00 PM
சுவாமி சொன்னா சரியாத்தான் இருக்கும்.
By R. Pandiyarajan
12/15/2010 4:46:00 PM
Every Indians should support opposite political parties, those who are fighting for 2G scam. There are a lot of things left behind from CBI. Political party owns two Leading Colleges in Tamil Nadu, Namely **R college in Erode. CBI should also start scrowing the party in this case. We are losing faith in political game / scam. Insead of taking much time government should take steps to speed up this case. Its too late to raid the scam specialist and their benamis. Benamis plyaing key role for government rulers. So ministers also scrutinized for their own properties and also they run educational instituition. How they earn this much amount to gain profit?
By SUbash
12/15/2010 3:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக