செவ்வாய், 19 ஜனவரி, 2010

நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும்: குமரி அனந்தன்



சென்னை, ஜன. 18: நாடாளுமன்றத்தில் தமிழில் பேச மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு, குமரி அனந்தன் எழுதிய கடித விவரம்:கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக நான் இருந்த போது, நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகள் மற்றும் துணைக் கேள்விகளை எழுப்ப அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்இதுகுறித்து பரிசீலிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மக்களவைத் தலைவர் மீரா குமாரின் தந்தையுமான பாபு ஜகஜீவன் ராம் தலைமையில் மொழிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, தமிழில் கேள்விகளை எழுப்ப அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் 1979-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி முதல் முறையாக, நாடாளுமன்றத்தில் தமிழில் துணைக் கேள்வி எழுப்பினேன். இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச இசைவு அளிகக வேண்டும் என்பது தவறான கோரிக்கை. ஒருவேளை செய்தி தவறாக இடம் பெற்றிருக்கலாம். நாடாளுமன்றத்தில் யார் வேண்டுமென்றாலும் தமிழில் பேசலாம் என அறிவித்து உரிய மொழிபெயர்ப்பு வசதிகளையும் உடன் செய்ய வேண்டும் என்று கேட்பதுதான் முறையானது.ஏதோ தனி ஒருவர் கோரிக்கையாக எண்ணாமல் தமிழர்களின் கோரிக்கையாகத்தான் மு.க.அ.வின் வேண்டுகோளைக் கருத வேண்டும். இது தனிப்பட்டவரின் கோரிக்கை அல்ல என்பதால் இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற அவைத்தலைவரைச் சந்திக்காததுகூடச் சரிதான். எனவே, குமரி அனந்தன் அவர்கள் பரிந்துரை மடல் போல் எழுதாமல் உரிமை கேட்டுப் போராட வேண்டும். இந்தியக் கூட்டரசு நிலைக்க உடனடியாக நாடாளுமன்ற ஈரவைகளிலும் தமிழுக்கு உரிமையும் சமநிலையும் அளிக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/19/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக