ஞாயிறு, 19 மார்ச், 2017

சார்சாவில் இரத்தத் தான முகாம்


சார்சாவில் இரத்தத் தான முகாம்

சார்சா நகர் மையம்  பின்புறம் உள்ள  நகர் வாடகைஊர்தி(City-Taxi)  அலுவலகத்தில்

மாசி 07, 2048 – திங்கட்கிழமை  –  20.03.2017

காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை

குருதிக்கொடை முகாம் நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்
முதுவை  இதாயத்து 050 51 96 433
கீழை ஏ  அமீது  யாசின் 052 777 8341
ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

சங்கர் நினைவேந்தல், பொள்ளாச்சி




சங்கர் நினைவேந்தல், பொள்ளாச்சி

அன்பிற்குரியீர்!

       வணக்கம். மார்ச் 13 சங்கர் உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். ஓராண்டு முடிகிறது. சங்கருக்கான நினைவேந்தல் இன்று

( மாசி 06, 2048 / 19.03.2017) ஞாயிறு மாலை 5 மணியளவில்

பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில்

நடைபெற உள்ளது.

சாதிய மதிப்பு(கவுரவ)க் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக!

எனும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்திட நிகழ்வுக்கு அன்புரிமையுடன் அழைக்கிறேன்.

  வே.பாரதி 
        பொதுச் செயலாளர் 
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
          9865107107