ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு




பதாகை-அரசியல் கைதிகளை உடனே விடதலை செய் ; banner_arasiyalkaithikal_viduthalai
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில்
தமிழ்க் கூட்டமைப்பின் அலட்சியப் போக்கு: குற்றச்சாட்டு

  தமிழ் மக்களின்  சார்பாளர்களான தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினர், அரசியல் கைதிகளை விடுப்பதில் வலுவான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமை குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
   பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு இன்று கொழும்பில்  தொடங்கிய கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கையின் போதே  இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் வாடும் 160 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று கொழும்பில் கையெழுத்துப்பெறும் போராட்டமொன்று தொடங்கியது.
 பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, பொது அமைப்புக்களின்  சார்பாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கையெழுத்துத் திரட்டும் போராட்டத்தைத் தொடங்கி வைத்த அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் அரசியல் கைதிகளின்  சிக்கல் ஒரு தேசியச் சிக்கல் எனக் குறிப்பிட்டார்.
  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட  சாதிக்க பலய என்ற அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வட்டரக்க விசித்த தேரர் அரசியல் கைதிகள்  தொடர்பில் பாராமுகத்துடன்  குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன இருப்பதாகக் கடும் கண்டனம் வெளியிட்டார்.
  இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வட்டரக்க விசித்த தேரர்,  “நான்  குடியரசுத்தலைவரானால் அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன், ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும், இராணுவத்தினர் வசமுள்ள அனைத்துப் பொதுமக்களின் காணிகளும் விடுவிக்கப்படும். இனவாதம் பேசும் அனைத்துப் பிரிவினைவாதிகளுக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். நான்  குடியரசுத்தலைவரானால் இவற்றைச் செய்வேன் என நான் கூறுவதாக நீங்கள் நினைக்கக்கூடும், அது அவ்வாறல்ல மைத்திரிபால சிறிசேன  குடியரசுத்தலைவரானால் தாம் செய்வதாக அளித்த வாக்குறுதிகளே இவை” என்றார்.
  எனவேதான், இவற்றைச் செய்யுமாறு வலியுறுத்திப் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தனது  அலுவல்முறை இணையத்தளத்தை ஊடுறுவிய சிறுவனைத் தான் ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்ப்பதாகக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்,
  அதுபோல்தான் நீண்டகாலமாகச் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் தாய், தந்தையர்களும் தமது பிள்ளைகளுக்காக பல ஆண்டுகளாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்கள் தொடர்பிலும் சிந்திக்குமாறு  குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
  அனைவரும் தனது பிள்ளைகள் எனக் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். சிறைக்கைதிகளையும் அவ்வாறு நினைக்க முடியாதா? நிசங்க சேனாதிபதி கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின; எனினும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக விடிந்ததும் செய்தி ஒன்று வெளியாகியது.
இது புதுமையான  செய்தியல்லவா? கோடிக்கணக்கில் கொள்ளையிட்டவர்கள் வெளியில்  உரிமையுடன் உலவும் உள்ள நிலையில், ஒரு தொலைபேசி அழைப்பு வந்தமைக்காகச் சிறிய குற்றச்சாட்டுக்களுக்காகக் கைதானவர்கள் பல வருடங்களாகச் சிறையில் வாடுவது நியாயமாகுமா?
 இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். இனவாதிகளை – பிரிவினைவாதிகளைச் சிறையில் அடைக்க வேண்டும் அதுவே நல்லிணக்கம். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுப்பாரென நான் நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.
  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் அரசியல் கைதிகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகிய வண்ணம் அவர்களுக்காக நீண்டகாலமாக குரல்கொடுத்துவரும்  மூத்த வழக்குரைஞர் கே.எசு. இரத்தினவேல், தமிழ் மக்களின்  சார்பாளர்களாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை கவலை தெரிவித்துள்ளார்.
  அவர் மேலும் குறிப்பிடுகையில், ” கடந்த பெப்பிரவரி மாதம் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத காரணத்தால் குறித்த ஒரு அரசியல் கைதியின் வழக்கு எட்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பெப்பிரவரிக்கு பின்னர் ஓட்டோபர்  மாதத்திலேயே குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. வருடத்தில் இரண்டு  நாள்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றன. அதே வழக்கில் ஐந்து ஆறு பேர் உள்ளனர். ஒவ்வொருவரின் வழக்குகளுக்கும் 3 தொடக்கம் நான்கு ஆண்டுகள் வரை எடுக்கின்றது. சற்று சிந்தியுங்கள். அவ்வாறு எனின் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுதற்கு 15 ஆண்டுகள் எடுக்கும். நியாயத்தின் அடிப்படையில் இந்த வழக்குகளுக்கு அரசியல்  முறையிலான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அங்கு  பெருங் குற்றங்கள் எதுவும் இல்லை. வாக்குமூலம் மாத்திரமே உள்ளன. வாக்குமூலம் சாதரணமான வழக்குகளில் சாதாரண சட்டங்களின் பிரகாரம் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகவே இந்த வழக்குகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தீயூழாக வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் மக்களின் விரும்பங்களை  எதிரொலிக்கும் வகையில் செயற்படவில்லை. தமிழ் மக்களிடம் இருந்து வெகுதொலைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.
  அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அவர்கள் புரட்சி செய்யவில்லை. அவர்கள் தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. ஆகவே அரசியல் கைதிகளின் விடுதலை என்பது  குடிமை, மன்பதை, நியாயம் தொடர்பில் சிந்திக்கும் மக்களைப் பொருத்ததாக உள்ளது. இந்த அரசியல் கைதிகள் எந்தவொரு முன்நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என மக்கள் கோரவில்லை. எந்தவொரு முன்நிபந்தனையும் இன்றி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.

உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா




உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா


ahzai_ulakathamizhamaippu_vellivizhaa_wto-silver-jubilee01

 வணக்கம்!
உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்று வணிக நோக்கமற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முழுவதுமாக உட்பட்டு, சிறப்பாக இயங்கிக்,  கடந்த 25ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகின்றது.   தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணிப் பாதுகாத்து மேலும் செழிப்புடன் வளர்வதற்காகவும்;  உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலன்களுக்காகவும்; இவற்றுடன் மிகவும் முதன்மையான குறிக்கோளான தமிழர்கள் இழந்த தமது இறையாண்மையை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும், உலகத் தமிழ் அமைப்பு கடந்த 25ஆண்டுகளாக அயராது உழைத்து வருகின்றது.
  உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

   புரட்டாசி 21, 22 & 23, 2047 / 7, 8, 9 அக்டோபர்  2016

வெள்ளி மாலைசனி முழுநாள்ஞயிறு காலை

இடம்: மெர்செர் நடுநிலைப்பள்ளி, விருசினியா

[MERCER MIDDLE SCHOOL AUDITORIUM,
  42149 GREEN STONE DRIVE,  ALDIE, VIRGINIA  20105, USA
  (Near WASHINGTON, DC’S  DULLES  INTERNATIONAL AIRPORT)]
சிறப்பு விருந்தினர்:
மாண்புமிகு பேராசிரியர் ப. இராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாநிலம், மலேசியா
சிறப்புப் பேச்சாளர்கள்:
மாண்புமிகு திரு. உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசு
திரு. பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
திரு. சாமுவேல்  இராசப்பா,  முதுநிலை ஆசிரியர் (ஓ), (ஃச்டேட்மேன் / Senior Editor (Rtd.), The Statesman, Calcutta
திரு. செ. முத்துசாமி, மேனாள் மேலவை உறுப்பினர்
தமிழ்மண் கோ. இளவழகன்
திரு. ஆழி செந்தில்நாதன், மொழி நிகர்மை – உரிமை பரப்பியக்கம்
மற்றும் பலர்.
மொழிப் பாதுகாப்பு;  நடுவண் அரசின் புதிய கல்விக் கொள்கை
 தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு 
தமிழர் உரிமைகள்
வெளியுறவுக் கொள்கையும் தமிழர் நலமும்
தந்தை பெரியார் பிறந்தநாள் நினைவு
இன்னும் பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும்.
 நுழைவுக் கட்டணம் இல்லை, ஆனால் நம் அமைப்பின் வெள்ளி விழாவைச் சிறப்பாகக் கொண்டாட உங்கள் அனைவரின் துணையும் தேவைப்படுகிறது. உங்கள் உதவியை நன்கொடையாக அளிக்க  http://worldthamil.org/donate கணக்கில் செலுத்தவும்.. அல்லது உங்கள் காசோலையை (payable to: “World Thamil Organization, Inc.”) கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
உலகத் தமிழ் அமைப்பு
வட கரோலினா
[World Thamil Organization, Inc.105 Ronaldsby Drive,Cary, North Carolina 27511]
தாங்கள், தங்கள் உற்றார் உறவினர், நண்பர்களுடன் திரளாகக் கலந்துகொண்டு, இவ்விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். உங்கள் அனைவரையும் நேரில் பார்த்து அளவளாவி அன்புடன் கலந்துரையாட ஆவலுடன் இருக்கின்றோம்.
அனைவரும் வருக ! வருக !! என பணிவன்புடன் அழைக்கின்றேன்.
அன்புடன்,
முனைவர் வை. க. தேவு
தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

எம்.பி.நிர்மலுடன் பல்வழி அழைப்பில் உரையாடல்


exnoranirmal02

தமிழ், தமிழென்று பேசுவோர்க்கும்

தமிழகத்திற்கு நமது பங்களிப்பு என்னவென்று கேட்போருக்கும்

அரிய மாலைப் பொழுது !

சிந்தனைச் செம்மல், செயல் வீரர்  நிருமல் அவர்களுடன் கலந்துரையாடல் .

Periyar International USA]
சமூகவியல் சொற்பொழிவு
தமிழகம்: சமூகநல களப்பணிகள்.
திரு. எம்.பி. நிருமல் 
  உலகத்தின் மாசுவான‌ சுற்றுச்சூழல் சீர்கேடுகளைச் சரி செய்ய எக்சுநோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய எம்.பி. நிருமல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க ‘மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

ஆவணி 26, 2047 /  2016 செப்டம்பர் மாதம் 11- ஆம் நாள் ஞாயிறு  இன்று இரவு
Date: September 11th 2016 Sunday (09/11/2016)
நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணிவரை கிழக்கு நேரம் (ET) (கேள்வி நேரம்: 30 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call) Dial-in Number: (712) 432-1500 Access Code: 951521#

திரு. எக்சுநோரா நிருமல் அவர்கள் பல்வழிஅழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்தக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் மொழியை மறக்கும் தமிழர்கள் வெளி நாடுகளில் ஏராளம் .
தமிழ் நாட்டிலும் தமிழைத் துறக்கும் தமிழ் குடும்பங்கள் எண்ணிலடங்கா .
அதே நேரத்தில் தமிழுக்கு மாலை போட்டு வரவேற்பவர்கள் மற்ற நாட்டினவர், மற்ற மொழிக்குச் சொந்தக்காரர்கள். .
இதைப் பார்த்த பிறகாவது  தமிழைத் தங்கள் இல்லங்களில் துறக்கும் தமிழர்கள் திருந்துவார்களா?
எனக்குத் தமிழ் “கொஞ்சம் கொஞ்சம்தான்” தெரியும் என்று பெருமை பேசும் சிறுமையைக் கை வீடுவார்களா ?

இந்தக் குறை நீங்க இன்றே சேருங்கள் ‘மொழி மொழி’ இயக்கத்தில்    www.mozhimozhi.org

பிற நாட்டாரின் தமிழ்ப்பாட்டு, நடனம், உரை : காணுரை இணைப்புகள்
ஈழத் தமிழ் பேசும் செருமன் நாட்டுப் பெண் . இப்போது ஈழத் தமிழ் ஆசிரியை.  தமிழர்களே தமிழில் பேசாமைபற்றி வேதனை தெரிவிக்கிறார்
கும்கி பட பாடலைப் பாடும் பின்லாந்து நாட்டு மாணவிகள்
நெஞ்சுக்குள்  பெய்திடும் மாமழை பாடுபவர்கள் இலித்துன்யா நாடு பெண்கள்
https://www.youtube.com/watch?v=WAboB0xzkTE
விண்ணைத் தாண்டி வருவாயா பாடும்  அமெரிக்கா பெண்
 முன்பே வா என் அன்பே வா ஆத்திரேலியா பெண் பாடுகிறார்
முன்பே வா என் அன்பே வா
பூமி என்னைச் சுத்துதே பாடும் சீனர்
நான் உள்ளுக்குள் சக்கரவர்த்தி பட்டைப்  பாடி கொண்டாடும் வெளிநாட்டினர்
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி பாடும் பின்லாந்து நாட்டுப் பெண்
புலி வருது பாடும் அமெரிக்கர்
என் வானிலே பாட்டை அற்புதமாகப் பாடும் நைசீரியா கறுப்பர் இனத்துப் பெண்
தாய் மண்ணே வணக்கம் பாடும் சப்பானியர்
ஒருவன் ஒருவன் முதலாளி பாடும் சீனர்
தமிழ்ப் பாட்டை மழலைத் தமிழில் பாடும் சீனக் குழந்தை
தமிழையும் சீன மொழியையும் சேர்த்துப் பாடும் சீனப் பெண் . (இசைக் கருவி அனைத்தும் சீன இசைக் கருவிகள் )
பாடகி சானகி குரலில் பாடும் சீனர்
தமிழ்ப் பாட்டு பாடும் சீனர்
இந்தப் பாடலைத் தமிழ் நாட்டினர் மற்றும் இல்லாமல் அனைத்து நாட்டினரும்  உற்சாகத்துடன் பாடுகிறர்கள்
வெள்ளைக்காரர்கள் , கருப்பு நிறத்தினவர், சீனர்கள் அனைவரும் பாடுகிறார்கள் . நீங்களும் சேர்ந்து பாடி ஆடுங்கள்
நாட்டியம்
நாக்க மூக்க நாக்க மூக்க  நடனம் பின்லாந்து நாட்டில் வியக்கும் பின்லாந்து நாட்டு மக்கள்
சாரம் (இலுங்கி) நாட்டியம் ஆடும் பின்லாந்து நாட்டினர்
பல்லேலக்கா பாட்டிற்கு நடனம் ஆடும் சப்பானியர்கள்
தமிழ்ப் பாடல்களுக்கு நடனம் ஆடும் சுவீடன் நாட்டுப் பெண்கள்
தமிழ்ப் பாட்டுக்கு மகிழுந்திலே நடனம் ஆடும் வெள்ளைக்காரப்  பெண் நிற வேறுபாடில்லாமல் நடனம் ஆடும் அழகு
(இ)டங்கமாரி பாட்டுக்கு அமெரிக்காவில் சாலையிலேயே நடனம் ஆடும் அமெரிக்கா நாட்டுப் பெண்கள்
(இ)டங்கமாரி பாட்டுக்கு நடனம் துபாய் நாட்டில்
கலசலா கலசலா chikini Chameli Dance
கருவியிசை
நம் இசைக் கருவியை வாசிக்கும் மேற்கத்தியர்
பேச்சு
தமிழ் பேசும் சீனக் கடைக்காரர்
தமிழ் பேசும் மலாய் நாட்டுக்காரர்
தமிழ் மொழியில் ஒரு சில சொற்களை நரேந்திர மோடி மலேசியா நாட்டில் பேசியபோது அது அங்கே வாழும் தமிழர்களிடையே எத்தகைய உற்சாகத்தை உண்டாக்கியது என்று பாருங்கள்
தமிழுக்கும் கொரியா மொழிக்கும் ஒற்றுமை 500 தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியில்
தமிழ் பேசும் சீனர்
தமிழ் பேசும் சீனர்
தமிழ் மொழி பேசும் இரசியர்
தமிழ் பேசும் சீனப் பெண்
தமிழ் பேசும் சீனப் பெண்