snake லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
snake லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூன், 2012

solkiraarkal : பாம்பு பிடிக்கப் பிடிக்கும்!


சொல்கிறார்கள்

பாம்பு பிடிக்க பிடிக்கும்!


வசிப்பிடங்களில் நுழையும் பாம்புகளை பிடித்து, காட்டில் விடுவதை சேவையாக செய்து வரும் ஜாய் மஸ்காரன்ஸ்: கர்நாடக மாநிலம், மங்களூரு மாவட்டம், மழைக்காடுகள் சூழ்ந்த பகுதி என்பதால், பாம்புகளுக்குப் பஞ்சம் இல்லை. இங்கு உள்ள, பெல்லதங்கடி, மடிகரி, ஆகும்பே பகுதிகளில், ராஜ நாகங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்குள், பாம்பு புகுவது வாடிக்கை. இதே சூழலில், பிறந்து வளர்ந்ததால், பாம்புகள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. நிபுணர்கள், பாம்புகளுடன் நட்பாக பழகும் நிகழ்ச்சிகளை, "டிஸ்கவரி' சேனலில் பார்க்கும் போது, "நாமளும் இப்படி பண்ணலாமே...' என தோன்றும். அந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக பார்த்தே, பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டேன். ஒரு உதவியாகத் துவங்கிய இந்த வேலை, சேவையாக இன்று வரை தொடர்கிறது. முதன்முதலாக, வெறும் கையால் பாம்பு பிடித்ததை, மறக்கவே முடியாது. இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்திருக்கிறேன். அதில், 60க்கும் மேற்பட்டவை, ராஜ நாகங்கள். இவை அதிகபட்சம், 18 அடி நீளம் வரை இருக்கும்; பார்க்க கம்பீரமாகவும் இருக்கும். தரையில் கூடு கட்டி, முட்டைகளைப் பராமரிக்கும், ஒரே பாம்பு ரகம் இது தான். ஆணும், பெண்ணும் சேர்ந்து, முட்டைகளைப் பாதுகாக்கும்; பெண் பாம்பு தான் உணவுக்காக வெளியே செல்லும். ராஜ நாகத்தின் முக்கிய உணவு, மற்ற பாம்புகள் தான். 70 நாட்களில், முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும். ராஜ நாகத்தின் ஆயுட்காலம், அதிகபட்சம், 30 வருடங்கள். பாம்புகளிலேயே ஆபத்தான ரகம், கட்டு விரியன். இந்தப் பாம்பு கடித்தவுடன், அதன் விஷம், ஒரு சில நொடிகளிலேயே, மூளையைச் செயலிழக்க வைத்து விடும். கட்டு விரியன் பாம்பு, இரண்டு முறை என்னைக் கடித்துள்ளது. உடனே மருத்துவமனையில், சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஊர் மக்களும், வனத்துறை அதிகாரிகளும், என் பணியைப் பாராட்டினாலும், என் அம்மாவிற்கு இந்த வேலை பிடிக்கவில்லை. ஆனால், சேவை என்று வந்து விட்டால், சில தியாகங்களை செய்ய வேண்டுமே!

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

visiting card for snake catching

 சொல்கிறார்கள்

பாம்பு பிடிக்கவிசிட்டிங்கார்டு!



பாம்பு பிடிப்பதில் வல்லவரான முத்துஷா: திண்டிவனம் மாமா மக்பூலிடம் தான் வளர்ந்தேன். அவர் பாம்புகளை வளர்ப்பதில், ஆர்வம் உள்ளவர். கண்ணாடிக் கூண்டை வைத்து, அதில் பாம்புகளை வளர்த்து வந்தார். சாரை, கட்டுவிரியன், நாகப்பாம்பு என்று, கிட்டத்தட்ட எல்லா வகை பாம்புகளும் அங்கு இருக்கும். ஆரம்பத்தில், அந்தப் பக்கம் போகவே பயப்படுவேன். ஆனால், மாமாவுடன் பழகிப் பழகி, பாம்புகளும் பழக்கமாகிவிட்டது.
கண்ணாடிக் கூண்டை சுத்தம் செய்வது, பாம்புகளை இடமாற்றம் செய்வது என, பாம்புகளுடனே வாழ ஆரம்பித்தேன். அப்போது, எனக்குத் தொழுநோய் அறிகுறி இருந்ததால், செங்கல் பட்டு அருகில் உள்ள, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தேன். சிகிச்சை முழுதாக முடிந்த பிறகும் அந்த ஊரைவிட்டுப் போக மனம் இல்லை. பிழைப்பிற்காக, சைக்கிள் கடை வைத்தேன். அதன் பின் கார்ப்பென்ட்டர்; இப்போது, பாம்பு பிடிக்கும் தொழில் செய்கிறேன்.

இது காடு, மலை சூழ்ந்த பகுதி என்பதால், இங்கு பாம்பு நடமாட்டம் அதிகம். வீடுகளில், புகுந்த பாம்பை நான் ஆர்வமாக பிடிப்பதைப் பார்த்து, இந்தப் பகுதியில் எங்கு பாம்பு புகுந்தாலும் என்னை அழைப்பர். பிடித்த பாம்புகளை நான் காடுகளில் விட்டுவிடுவேன். பயம் இல்லாமல் பிடித்தாலும், என்னை நாகப்பாம்பு நான்கு முறையும், கட்டுவிரியன் இரண்டு முறையும் கடித்துள்ளன. இந்த இரண்டு வகை பாம்புமே அதிக விஷமுள் ளவை. உடனே சிகிச்சை எடுத்துடுவேன்.

"பாம்புகள் பிடித்து தரப்படும்' என்று விசிட்டிங் கார்டு போட்டு, தெரிந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்திருக்கிறேன். இந்தத் தொழிலுக்கு வந்து, 25 ஆண்டுகளாகிறது. இதுவரை, ஒரே நாளில், 11 பாம்புகளைப் பிடித்ததுதான் அதிகபட்சம்.
என் குடும்பத்தில், யாரும் பாம்புக்குப் பயப்பட மாட்டார்கள். பாம்பு கடித்தால் பயப்படக் கூடாது; முதலுதவி எடுத்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.