changes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
changes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூன், 2011

Revised pattern of I.A.S. Exam.: இ.ஆ.ப. தேர்வு முறையில் மாற்றம்

<ஊஹண்ற்ட் இஹய் ஙர்ஸ்ங் ஙர்ன்ய்ற்ஹண்ய்ள்’’ >
 என ஆங்கிலஎழுத்துருக்கள் எப்போதும் தமிழ் வரி வடிவில் வருகின்றனவே.  இவற்றைச் சரி பார்க்கலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


ஐ.ஏ.எஸ்.தேர்வு முறையில் மாற்றம்

First Published : 18 Jun 2011 01:59:47 AM IST


புதிய பாடத் திட்டத்தின்படி முதல்தாளில் (Paper-1) பொது அறிவு மற்றும் சமூக பிரச்சினைகள் (Sociology) அரசியல் மற்றும் ஆட்சிமுறை (Politics & Administration)  ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் தாளில் மாணவர்களின் (Aptitude) இயல்திறன் சோதிக்கப்படுகிறது. இத்தாளில் அடிப்படை எண்கணிதம், பகுத்தறிவு திறன், அடிப்படை ஆங்கில அறிவு, புத்திகூர்மை ஆகியவை சோதிக்கப்படுகிறது.IAS தேர்வை பொறுத்தவரை நிறைய படித்தல் என்பதைவிட நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அளவாக ஆழப்படித்தலே வெற்றிக்கான சிறந்த யுக்தி ஆகும். முதன்மை தேர்வை பொறுத்தவரை படிப்பதோடு மற்றும் நின்றுவிடாமல் நிறைய பயிற்சியும் மிக்க அவசியம். முதன்மைத் தேர்வில் (Negative Marks) முறை இருப்பதால் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். முதன்மைத் தேர்வு முடிந்த உடனேயே Mains தேர்விற்கு தயாராக வேண்டும் June-September நான்கு மாதங்கள். நான்கு மாதங்களே எஞ்சி இருப்பதால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவசியம் ஆகிறது. பொதுவாக Prelims தேர்விற்கு தயாராகும்போதே விருப்பப் பாடங்களையும் தயார் செய்து வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் Prelims தேர்விற்கு பிறகு விருப்பப் பாடத்தை நன்கு படித்தல் என்பது மிகவும் கடினமாகும். Prelims தேர்வின் போதே விருப்பப் பாடங்களைப் படித்து வைத்துக்கொண்டால் Prelims தேர்விற்கு நன்கு Revision  செய்ய முடியும்.தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான மாணவர்கள் பெரிதும் விரும்பி படிக்கும் விருப்பப்பாடங்கள் Political Science, Sociology, Public Administration, History, தமிழ் இலக்கியம் ஆகியவை ஆகும். புதிய பாடத் திட்டத்தின்படியும் மற்றும் பொது அறிவு கட்டுரை ஆகியவற்றுக்கு மிகவும் தொடர்புடைய பாடங்களாக Society, Political Science, Administration விளங்குகின்றன. எனவே இதுபோன்ற விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பதே சமயோசித புத்தியாகும். Mains தேர்வை பொறுத்தவரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான விடையை கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத பழகிக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் Mains தேர்வை பொறுத்தவரையில் கேட்கப்பட்ட கேள்விக்குத் தேவையான அளவான பதிலை தராமல் கேள்விக்கு தொடர்புள்ள அனைத்து விஷயங்களையும் பக்கம்பக்கமாக எழுதி நேரத்தையும் மதிப்பெண்களையும் வீணடித்துவிடுகின்றனர். ஊதாரணமாக இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிக்க ஐந்து வழிமுறைகளை 200 வார்த்தைகளுக்கு மிகாமல் விளக்குக? என்ற கேள்விக்கு நக்சலிசம் தோன்றியவிதம் மற்றும் நக்சலிச வரலாறு பற்றி இரண்டு பக்கங்கள் எழுதுவது என்பது தேவையற்ற செயலாகும். கேள்வியின்படி சிறந்த ஐந்து வழிமுறைகளை மட்டும் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் சுமார் 1 ணீ பக்கங்களுக்குள் விளக்கினால் போதுமானதாகும். நமக்குத் தெரிந்தவற்றை எழுதுவதைவிட கேள்விக்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் எழுதுவதே போதுமானதாகும். இவ்விதம் நன்கு பயிற்சி எடுத்து சிறந்த முறையில் விடைகளை அளித்தால் Mains தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்பது எளிதான ஒன்றாகும்.எனவே IAS தேர்வை பொறுத்தவரை பெற்றோர்கள் மற்றும் சமுதாய உந்துதலின் பேரில் படிக்காமல் மாணவர்களின் மனம், சிந்தனை, செயல் ஆகிய மூன்றையும் ஒருநிலைப்படுத்தி தேர்வின் கடினத் தன்மையை முற்றிலும் உள்வாங்கி மிக்க கவனத்துடன் படித்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மாணவர்கள் Final Year Degree Course படிக்கும்போதே IAS தேர்விற்கான பயிற்சியை ‘’Faith Can Move Mountains’’ போன்ற இந்திய அளவில் சிறந்து விளங்கும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று சுமார் ஒன்றரை வருடங்கள் ஒரு மனதாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ‘’ஊஹண்ற்ட் இஹய் ஙர்ஸ்ங் ஙர்ன்ய்ற்ஹண்ய்ள்’’ நம்பிக்கை இருந்தால் மலையும் நமக்கு கடுகாகும். உங்களை நம்புங்கள் உலகை வெல்லுங்கள்.ராஜா , இயக்குநர், Cracking IAS Study Circle

திங்கள், 28 மார்ச், 2011

To-day situation should be changed - T.Ke.Si. : இன்றைய நிலை மாற்றப்பட வேண்டும்: தி.க.சி.

கட்சி அரசியல் சார்பில்லாத நல்ல கருத்தை உயர்மிகு தி.கே.சி. தெரிவித்துள்ளார். எனினும் இன்றைய தேர்தல் சூழலுக்கேற்ப ஈர்க்கும் தலைப்பைத்தினமணி அளித்துள்ளது. இத்தகைய மாற்றத்திற்கு அனைத்துத் தரப்பாரும் முயல வேண்டும். தமிழ் தலைமை பெறவும் தமிழர் முதன்மை பெறவும் வேண்டும். அப்பொழுதுதான் உலகெங்கும் தமிழரும் தமிழும் காப்பாற்றப்படுவர்; பேணப்படுவர்; போற்றப்படுவர்.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 / தமிழே விழி! தமிழா விழி! /  எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! -

இன்றைய நிலை மாற்றப்பட வேண்டும்: தி.க.சி.

திருநெல்வேலி, மார்ச் 27: தமிழ்ச் சமுதாயம் புதுவாழ்வு பெற அடிப்படை மாற்றம் அவசியம் என சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் (தி.க.சி.) வலியுறுத்தினார்.  தி.க.சி.யின் "கடல் படு மணல்' நூல் வெளியீட்டு விழா, அவரது 87-வது பிறந்த நாள் விழா திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூலை "அன்பு பாலம்' ஆசிரியர் கல்யாணசுந்தரம் வெளியிட்டார்.  விழாவில், தி.க.சி.யின் நிறைவுரை: நான் காலமெல்லாம் இலக்கியப் பணியாற்றும் களப்பணியாளன் மட்டுமே. பாரதி, பாரதிதாசன், வல்லிக்கண்ணன் ஆகியோரது லட்சியத்தில் நின்று பணியாற்றி வருகிறேன்.  தமிழ்ச் சாதிக்கு புதிய வாழ்வு தர வேண்டும் என்றான் பாரதி. இன்று தமிழ் இனத்தின் கலை, கலாசாரம், பண்பாட்டுக்கு புதிய அபாயம் ஏற்பட்டுள்ளது. அவை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் ஒன்று அவசியம். இதுகுறித்து எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டும்.  தமிழ்ச் சமுதாயத்துக்கு புதிய வாழ்வு கிடைக்க அடிப்படை மாற்றம் அவசியம். அதற்கு அச்சு, காட்சி ஊடகங்களின் பங்களிப்பு வேண்டும். இன்று ஊடகங்கள் முழு உண்மைகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. அரைகுறை உண்மைகளையே சொல்கின்றன. வரலாற்றுப் புரட்டுகள் நடைபெறுகின்றன. சிறு பத்திரிகைகளால் மட்டுமே உண்மைகளைச் சொல்ல முடிகிறது. எனவே, வெகுஜன ஊடகங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.  சமுதாயத்தின் அடிப்படை மாற்றத்துக்கு புரட்சி அவசியம். அதற்குத் தொழிலாளர்களும், விவசாயிகளும் வீதிக்கு வந்து போராட தயாராக இருக்கின்றனர். காரணம், அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் நடுத்தர மக்கள்தான் தயங்கி நிற்கின்றனர்.  சமுதாய மாற்றங்களுக்கு வழிகோலுவது நடுத்தர வர்க்கமும், படித்தவர்களும்தான். அவர்கள் வரலாற்றுப் புரட்டர்களையும், கலாசாரத்தைச் சீரழிப்பவர்களையும் எதிர்த்துக் குரலெழுப்பத் தயாராகும்போது மட்டுமே மாற்றம் சாத்தியப்படும். அதற்கு மக்கள் ஒன்று திரட்டப்பட வேண்டும். இன்றைய நிலை மாற்றப்பட வேண்டும் என்றார் தி.க.சி.  விழாவுக்கு தலைமை வகித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் தொ. பரமசிவன் பேசியதாவது: கடல் பல்லுயிர்களின் தாய்மடி. ஆமையின் கருவறையாக கடல் மணல்தான் உள்ளது. அதில் பிறக்கும் ஆமைக் குஞ்சு தன் தாயை சரியாகச் சென்றடைகிறது. பூமியில் வாழும் உயிரினங்களைவிட கடல் சார் உயிரினங்களும், அதன் மூலம் கிடைக்கும் செல்வங்களும் இன்னும் அறிஞர்களால் முழுமையாகக் கண்டறிய முடியாத மர்மமாகவும், புதிராகவும் உள்ளது. அப்படிப்பட்ட கடலைப் போன்றவர் தி.க.சி. என்றார் பரமசிவன்.  "யுகமாயினி' ஆசிரியர் சித்தன்: இன்றைய இலக்கிய உலகில் எழுத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுத்தாளர்களை முன்னுக்கு வைக்கின்றனர். அதைத் தவிர்த்து தி.க.சி.யைப்போல விருப்பு, வெறுப்பு இல்லாத விமர்சனப் பார்வை அவசியம்.  "உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில்: இன்றும் ஓர் இளைஞரைப்போல எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதிப் பாராட்டி வருபவர் தி.க.சி. அவரைப்போல வேறொருவர் உருவாக வாய்ப்பில்லை. புதிதாக இலக்கிய உலகுக்கு வருவோருக்கு தி.க.சி.யைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தி.க.சி.க்கு அவர்களைத் தெரியாமல் இருக்காது.  "புதுகைத் தென்றல்' ஆசிரியர் மு. தருமராஜன்: மூன்று தலைமுறை எழுத்தாளர்களை விமர்சித்து வருபவர் தி.க.சி. அவரது ஆற்று வெள்ளம் போன்ற பாராட்டு பல எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது. எதிர்கால எழுத்தாளர்கள் அவரது வழியில் நின்று செயல்பட வேண்டும்.  எழுத்தாளர் நாறும்பூநாதன், பதிப்பக நிர்வாகி நிவேதிதா சுவாமிநாதன், ஜனநேசன், கீழக்கலங்கல் ஜீவா படிப்பக நிர்வாகி சண்முகவேல் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.  நூலைத் தொகுத்த வே. முத்துக்குமாரை பாராட்டி தி.க.சி. பொன்னாடை போர்த்தினார். இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கவிஞர் கிருஷி வரவேற்றார். எழுத்தாளர் கழனியூரன் நன்றி கூறினார்.